வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 22, 2018

தண்ணிர் தீராது. மக்கள் மனது வைத்தால்

ரஜப் மாதம் வந்து விட்டது.
அல்லாஹ் பரக்கத் செய்வனாக!  (பெருமானாரின் துஆ)
வெயில் காலம் தொடங்கி விட்டது.  
வெப்பத்தின் தாக்குதலில் இருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக!  போதுமான மழையை - தண்ணீரை தந்தருள்வானாக!
தண்ணீர் தர்மம் செய்வோம். நீர் மோர் பந்தல்கள் அமைப்போம் .
தண்ணீர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை நடத்தும் டவுன் டு எர்த் என்ற பத்திரக்கை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில், உலகின் 200 நகரங்கள் கடுமையான குடிநீர் பஞ்சத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. இவற்றில் முதல் 10 அபாய நகரங்களில் பட்டியலில் பெங்களூருவும் இடம் பெற்றுள்ளது. 

குடிநீர் பஞ்சத்தை நோக்கி வேகமாக செல்லும் டாப் 10 மெட்ரோ நகரங்களில் காபூல் (ஆப்கானிஸ்தான்), கராச்சி (பாகிஸ்தான்), இஸ்தான்புல்(துருக்கி), மெக்சிகோ (மெக்சிகோ), நைரோபி (கென்யா), கேப் டவுன் (தென்னாப்பிரிக்கா), பெங்களூரு (இந்தியா), பீஜிங் (சீனா), சானா (ஏமன்), சாவோ பாலோ (பிரேசில்) ஆகியன இடம்பெற்றுள்ளன.
முதல் 200 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் புனே நகரமும் இடம் பெற்றுள்ளது. இந்நகரமும் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி செல்வதால், கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
வெயுல் காலம் தொடங்கி விட்ட நிலையில் உலகின் சில பாகங்களில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடுகளை பற்றிய தகவல் கள் பெரும் அச்சத்தை தருகின்றன,
அல்லாஹ் பாதுகாபானாக!

அல்லாஹ் மனிதர்களுக்கு இயல்பாக இலவசமாக வழங்கிய நிஃமத்துக்களில் பிரதானமானது தண்ணீர்!
பூமி தண்ணீரால் சூழப்பட்டிருக்கிறது,.
நீல் ஆம்ஸ்டாரங்க் முதன் முறையாக சந்திரனிலிருந்து பூமியை பார்த்த போது பூமி நீல நிரமாக இருந்தது. காரணம் பூமியில் 3 ல் இரண்டு பங்கை தண்ணீர் சூழ்ந்திருக்கிறது.,

• Neil Armstrong saw the Earth from the Moon, it appeared blue! because water covers more than 2/3 Earth]
பைபிள் கூறுகிறது.,
பூமி தண்ணீருக்கு வெளியே தண்ணீரால் உருவாக்கப்பட்டது.
• "The earth was formed out of water and by water" bible 

பூமிப் பந்தின் ஒரு அங்கமாய் கடல் இருந்தாலும் பூமி என்னவோ கடலில் மிதப்பது போலத்தான் இருக்கிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து நீராருங்கடலுடுத்த நில மடந்தை – தண்ணீரை ஆடையாக உடுத்தியிருக்கிற பூமிப் பெண்  என்று கூறுகிறது.
தண்ணீர் மனித சமூகத்திற்கு அல்லாஹ் அளித்த மிகப் பெரும் சொத்து
உயிரினங்கள் அனைத்தும் தண்ணீரால் படைக்கப்பட்டவை
وَجَعَلْنَا مِنْ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ
وعن أبي هريرة قال: قلت يا رسول الله إني رايتك طابت نفسي وقرت عيني، فأنبئني عن كل شيء، قال صلى الله عليه وسلم: " كل شيء خلق من ماء
உயிரினங்கள் நிம்மதியாக உயிர் வாழ்வதற்கும் தன்ணீர் மிக அவசியமானது,
எல்லா காரியங்களுக்கும் தண்ணீர் அவசியம்.
மனித நாகரீகத்தின் அனைத்து அம்சங்களிலும் தொடர்பு கொண்ட இயற்கை வளம் தண்ணீர் . விவசாயம் தொழில் வளர்ச்சி, கலாச்சாரம் மத வழிபாடுகள் என அனைத்து அம்சங்களிலும் தண்ணீருக்கு தொடர்பு இருக்கீறது என்கிறார். யுனஸ்கோ வின் டைரக்டர் Koichiro Matsuura
மனித உடலின் சீதோஷ்ண சமன்பாட்டிற்கும் பூமின் சீதோஷ்ன சமன்பாட்டிற்கும் தண்ணீர் அவசியம்.
வளர்ச்சியடைந்த மனித உடலில் 60 முதல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது.  இரத்தத்தில் 82 சதவீதம் தண்ணீர் இருக்கிறாது. மூளையில் 70 சதவீதம் தண்ணீர் இருக்கிறது. நுரையீரலில் 90 சதவீதம் தண்ணீர் இருக்கிறது.

• Water regulates the Earth's temperature. It also regulates the temperature of the human body
• 60% - 75% of the adult human body is water - 82% of blood is water; 70% of the brain and 90% of the lungs are made up of water
விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் உடல் பரிசுத்தத்திற்கும் மட்டுமல்ல உயிர் வாழ்க்கைகே தண்ணீர் மிக அவசியமானது.
உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாவிட்டால் உடல் களைப்படைந்து விடும்.
உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாவிட்டால் ஜீரண சக்தி குறையும்
உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாவிட்டால் உடலில் உள்ள கொளுப்பு கறைவது குறையும்.
உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாவிட்டால் உடலில் உள்ள கழிவுப் பொருடகள் வெளியேறாது. (சிறுநீர் வியர்வை குறையும்)
உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாவிட்டால் தோலி சுருக்கங்கள் ஏற்படும் தோல் வறண்டு போகும்.
உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாவிட்டால் வாயில் துர் நாற்றம் வீசும்.
இந்த சிரமங்களால் மனிதர்களது இயல்பு தடுமாறும். பாதிக்கப்படும்.
எனவே தண்ணீர் அல்லாஹ்வின் மிக முக்கியமான பேரருள்.
அதிலும் குறிப்பாக குடி தண்ணீர்.

உலகிலுள்ள தண்ணீரில் 97 சதவீதம் கடலில் இருக்கிறது.
2.5
 சதவீதம் தண்ணீர் தான் குடிப்பதற்கு ஏற்றது. அதிலும் கணிசமான அளவு தண்ணீர் உறை பனியாக இருக்கிறது.
இந்த குறைந்த பட்ச குடி தண்ணீர் கூட இப்போது பெருமளவில் மாசு பட்டிருக்கிறது.
குஜராத்தில் உப்புத்தண்மை அதிகம் உப்பு தயாரிக்கிற அளவு கிணற்று நீரில் உப்புத்தன்மை அதிகரித்திருக்கிறது.
குடிநீரை சேமித்து வைக்கின்ற குளம் குட்டைகள் அழிக்கப் பட்டு விட்டன.
தொழிற்சாலைப் பெருக்கம். போதிய மழையில்லாமை ஆகியவை குடி தண்ணீரை பெரும் சிரமத்திற்குள்ளானதாக ஆக்கி விட்டன.  
ஜூலை 29,2010  அன்று ஐக்கிய நாடுகள் சபை தனிமனிதனுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை அடப்படை உரிமையாக அறிவித்தது.
அப்போது அது வெளியிட்ட அறிக்கை மிக அதிர்ச்சிகரமாக இருந்தது.

எய்ட்ஸ், மலேரியா, அம்மையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் மக்கள் பு அதிகம் இறந்து போகிறார்கள்.  
ஜெர்மன் அம்பாசிட்டர் விட்டிங்; ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் , என்று கூறீனார்,/

உலக அளவில் 884 மில்லியன் மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது,

இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ன வென்றால். உப்புத்தண்ணீரை விட குடி தண்ணீரின் அளவு மிக வும் குறைவாக இருந்தாலும் கூட. இருப்பது மனித குலத்திற்கு போதுமானதே யாகும்
உலகின் பிராணிகள் அனைத்துக்கும் தானே ரிஜ்கு அளிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

இருக்கிற தண்ணீரை பகிர்ந்தளிப்பதிலும் தேடிக் கொள்வதிலும் மக்களே பிரச்சனைகள் உண்டாக்குகிறார்கள்.
பாலைவனத்தில் யூதர்களுக்கு தண்ணீர் அளித்த இறைவன் – நீங்கள் குழப்பம் செய்யாதீர்கள் என்ற வார்த்தையோடு அந்த வசனத்தை நிறைவு செய்கிறான்.

ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் நெருங்கும் போதும் பொதுத்துறை அதிகாரிகள் நீர்நிலைகளில் இருக்கிற தண்ணீரைப் பற்றி அச்சமூட்டுகிற அறிவிப்புக்களை வெளியிடுவார்கள்.
நாம் அல்லாஹ்வின் இந்த வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டால் போதுமானது.

وَإِذْ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ(60)
குடிதண்ணீரில் பிரச்சனை எங்கு என்பதை ஐ நா கூறுகிறது.

A 2006 United Nations report stated that "there is enough water for everyone", but that access to it is hampered by mismanagement and corruption.
தண்ணீருக்கு மட்டுமல்ல அனைத்து வகையான ரிஜ்குகளுக்கும் இது பொருந்தும்.
உலகில் தேவையான ரிஜ்கை அல்லாஹ் வைத்திருக்கிறான். அதை பங்கிடுவதிலும் உரிமமயை நிலைநாட்டுவதிலும் பாதுகாப்பதிலும் மக்கள் காட்டுகிற அலட்சியம் அல்லது பிடிவாதம் ஒரு சாராருக்கு ரிஜைக் தடுத்து விடுகிறது.
சோமாலியாவில் குழந்தைகள் கொத்துக் கொத்தாக இறந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் கோதுமை மிக அதிகமாக விளைச்சல் கண்டது. அதனால் விலை கிடைக்காமல் போய்விடும் என விவசாயிகள் பயந்தார்கள். அதற்கு அரசு செய்த ஏற்பாடு என்ன தெரியுமா ? பல நூறு டன்களில் கோதுமை கடலில் கொண்டு போய் கொட்டப் பட்டது.
தண்ணீர் விவகாரமும் இப்படித்தான். உலகின் ஒரு பகுதியில் மக்களால தண்ணீர் வீணடிக்கப் படுகிற போது மறுபகுதியில் வாழ்கிற மக்கள் வறட்சியால் வாடுகிறார்கள்.
அல்லது தண்ணீரை கவனிக்காமல் குடியேற்றங்கள் அமைகிற போது வறட்சி மக்களை வாட்டுகிறது.
புனே நகரின் தண்ணீர் இருப்புக்கு அதிகமான மக்கள் குடியேற்றம் அங்கே நிகழ்கிறது. அதனால் உலகின் வற்ட்சியான நகரங்களில் ஒன்றாக அது மாறி வருகிறது.  
இஸ்லாம் தண்ணீர் விசயத்தில் அலாதியான பொறுப்புணர்வை மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. அதிலும் தண்ணீரை சுத்தமாக பராமரிப்பதற்கு அதிக கவனத்தை கொடுத்துள்ளது.
 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنهما (أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِسَعْدٍ وَهُوَ يَتَوَضَّأُ فَقَالَ : مَا هَذَا السَّرَفُ يَا سَعْدُ ؟ قَالَ : أَفِي الْوُضُوءِ سَرَفٌ ؟ قَالَ : نَعَمْ ، وَإِنْ كُنْتَ عَلَى نَهْرٍ جَارٍ) . ابن ماجة(419


சொந்த தண்ணீர  மூன்று தடவைக்கு மேல் பயன்படுத்துவது மக்ரூஹ் வெறுக்கத்தக்கது.

பொதுவான உபயோகத்திற்கு வைக்கப்பட்டிருக்கிற தண்ணீரை அளவுக்கு மேல் உபயோகிப்பது ஹராம் என்பது சட்ட அறிஞர்களின் கருத்து.

وحكم هذا الإسراف أنه مكروه إذا كان الماء مملوكا أو مباحا ، أما الماء الموقوف على من يتطهر. ومنه ماء المرافق العامة-فإن الزيادة فيه على الثلاث حرام ، لكونها غير مأذون فيها .

أخرج أحمد والنسائى وابن ماجه من طرق صحيحة أن أعرابيا سأل النبى صلى الله عليه وسلم عن الوضوء فأراه ثلاثا ثلاثا وقال "هذا الوضوء ، فمن زاد على هذا فقد أساء وتعدى وظلم "

அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹ் அவர்கள் மூன்று தடவைக்கு மேல் உளு செய்யும் போது கழுவுகிறவன் பாவியாவான் என அஞ்சுகிறேன்

 قال ابن المبارك : لا آمن إذا زاد فى الوضوء على الثلاث أن يأثم

ஏதேனு தேவையிருந்தால் தவிர மூன்று தடவைக்கு மேல் கூடாது என அறிஞர்கள் கூறுகிறார்கள்/

وقال أحمد وإسحاق : لا يزيد على الثلاث إلا رجل مبتلى " نيل الأوطار ج 1 ص 190 "
தண்ணீர் தரப்பட்டது குறித்து மறுமையில் கேள்வி உண்டு என்கிறது நபி மொழி
عن أبي هُرَيْرَةَ إِنَّ أَوَّلَ مَا يُسْأَلُ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ يَعْنِي الْعَبْدَ مِنْ النَّعِيمِ أَنْ يُقَالَ لَهُ أَلَمْ نُصِحَّ لَكَ جِسْمَكَ وَنُرْوِيَكَ مِنْ الْمَاءِ الْبَارِدِ ترمذي 
தண்ணீரை விரயம் செய்வதை தடுப்பதை ஒரு மனிதாபிமானக கடமையாக நாம் நிறைவேற்ற வேண்டும்.
தாகத்தால் தவித்துக் கொண்டிருப்பவருக்கு தண்ணீர் கொடுப்பதை நாம் எப்படி கருதுவோமோ அது போல
வீடுகளின் பைப்புகளில் ஓளுகிற தண்ணீரை நிறுத்த வேண்டும்,
அவ்வாறு சொட்டுகிற தண்ணீர் ஒரு நாளில் 6 லிட்டர் அளவை விரயமாக்குகிறது.
ஒரு கப் அரிசியை வேக வைக்க இரண்டு கப் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அந்தப் பாத்திரத்தை கழுவ 4 அல்லது 5 லிட்டர் தண்ணீரை மக்கள் விரயம் செய்கிறார்கள்.
A dripping tap can waste up to 6 litres of water in a day
To cook 1 cup of rice you need 2 cups of water but to wash the pan in which it has been cooked you need 4-5 litres of water
இது போன்ற சந்தர்ப்பதில் பேப்பர் அல்லது துணி போன்றவற்றை உபயோகப் படுத்துவது தண்ணீர் அதிகமாக செலவாவதை குறைக்கும்.
தண்ணீரை முறைகேடாக பயண்படுத்தக் கூடாது என்கிற அதே நேரத்தில் சிக்கணமாக பயன்படுத்துவதற்கான வழி யையும் இஸ்லாம் காட்டுகிறது.  
وقد توضأ رسول الله صلى الله عليه وسلم بمد ، وتطهر بصاع وهو أربعة أمداد بمده
روت أم المؤمنين عائشة أنه صلى الله عليه وسلم كان يغتسل بقدر الصاع ويتوضأ بقدر المد
இந்தியர்கள் குளியளறையில் அதிகப்படியான தண்ணீர வீணடிக்கிறார்கள்.
ஹஜ்ஜின் போது மினாவில் ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒவ்வொரு பகுதியில் கூடாரம் அடிக்கப் படுகிறது, அதில் இந்தியப் பகுதியிலிருந்து வருகிறவர்கள் தான அதிகமாக தண்ணீரை விரயம் செய்கிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன,
அல்லாஹ் எச்சரிக்கிறான். உங்களது மோட்டார்கள்களின் தண்ணீர் வரத்து நின்று விட்டால் என்ன ஆகும்! சிந்தித்துப் பாருங்கள்

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ
பிறருக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை தடுக்க கூடாது.
ஐநா அறிக்கை சொல்கிறது .
தண்ணீர் சர்வதேச சமுதாயத்தின் சொத்து. அது அனைவருக்கும் கிடைக்க வேண்டும். விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது. தண்ணீரை பெற்றுக் கொள்வது மனித சமூகத்தின் உரிமை.
• that water resources belong to the whole community. that water should be, together
• cannot be sold. Access to water is a right of the community.
இந்தக் கருத்து நூற்றுக்கு நூறு இஸ்லாமின் கருத்து,

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ رَجُلٌ حَلَفَ عَلَى سِلْعَةٍ لَقَدْ أَعْطَى بِهَا أَكْثَرَ مِمَّا أَعْطَى وَهُوَ كَاذِبٌ وَرَجُلٌ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبَةٍ بَعْدَ الْعَصْرِ لِيَقْتَطِعَ بِهَا مَالَ رَجُلٍ مُسْلِمٍ وَرَجُلٌ مَنَعَ فَضْلَ مَاءٍ فَيَقُولُ اللَّهُ الْيَوْمَ أَمْنَعُكَ فَضْلِي كَمَا مَنَعْتَ فَضْلَ مَا لَمْ تَعْمَلْ يَدَاكَ

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ فَضْلِ الْمَاءِ
ஒருவர் தனது தேவைக்காக கணுக்கால் வரை மட்டுமே தண்ணீரை சேமித்துக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது.

أَنَّ رَجُلًا مِنْ قُرَيْشٍ كَانَ لَهُ سَهْمٌ فِي بَنِي قُرَيْظَةَ فَخَاصَمَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَهْزُورٍ يَعْنِي السَّيْلَ الَّذِي يَقْتَسِمُونَ مَاءَهُ فَقَضَى بَيْنَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْمَاءَ إِلَى الْكَعْبَيْنِ لَا يَحْبِسُ الْأَعْلَى عَلَى الْأَسْفَلِ

தண்ணீர் விவகாரத்தில் பெண்களின் பங்கும் குறிப்பிடத் தகுந்தது.
அவர்களுக்குத் தான் தண்ணீரைச் சேகரிப்பதின் சிரமம் தெரியும்.
காலம் காலமாய் கிணறுகளில் இருந்தும் குளங்களிலிருந்தும் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவது பெண்களின் முக்கியப் பணியாக இருந்து வருகிறது. அவர்களுக்கு தண்ணீரைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு உண்டு என ஐ நா கூறுகிறது.
தண்ணீர் தர்மம் தலை சிறந்த தர்மம்.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا مُؤْمِنٍ أَطْعَمَ مُؤْمِنًا عَلَى جُوعٍ أَطْعَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ ثِمَارِ الْجَنَّةِ وَأَيُّمَا مُؤْمِنٍ سَقَى مُؤْمِنًا عَلَى ظَمَإٍ سَقَاهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ الرَّحِيقِ الْمَخْتُومِ وَأَيُّمَا مُؤْمِنٍ كَسَا مُؤْمِنًا عَلَى عُرْيٍ كَسَاهُ اللَّهُ مِنْ خُضْرِ الْجَنَّةِ – ترمذي
عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا قَالَ نَعَمْ قُلْتُ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ سَقْيُ الْمَاءِ النساءي 

أَهْلُ الْجَنَّةِ فَيَمُرُّ الرَّجُلُ مِنْ أَهْلِ النَّارِ عَلَى الرَّجُلِ فَيَقُولُ يَا فُلَانُ أَمَا تَذْكُرُ يَوْمَ اسْتَسْقَيْتَ فَسَقَيْتُكَ شَرْبَةً قَالَ فَيَشْفَعُ لَهُ - إبن ماجة

வறட்சி வருகிற என பத்ரிகைகள் எச்சரிக்கை செய்கிற நேரத்தில் தண்ணீர் விசயத்தில் நமது பொறுப்புணர்வை சரி வர நிறைவேற்றுவோம்.

அல்லாஹ் நிச்சயம் நமது தாகம் தீர அல்லாஹ் வழி செய்வான். 

No comments:

Post a Comment