வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 01, 2018

இளம் தலைமுறைக்கு இலக்கு தேவை


[هُوَ الَّذِي يُنَزِّلُ عَلَى عَبْدِهِ آَيَاتٍ بَيِّنَاتٍ لِيُخْرِجَكُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ{الحديد:9}

நமது பிள்ளைகள் 12 வது வகுப்பு தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது கல்வியை அல்லாஹ் பயனுள்ளதாக ஆக்கட்டும்.
அவர்களது கற்றலையும் தேர்வுகளையும் அல்லாஹ் இலேசாக்காட்டும்.
சிறந்த மதிப்பெண்களை பெற்று உயர்ந்த தரத்தை அடைய அல்லாஹ் உதவட்டும்.
நமது அடுத்த தலைமுறைக்கு வாழ்க்கையின் இலட்சியங்களை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். அதில் சீர் திருத்தம் செய்ய வேண்டும் எனில் பக்குவமாக சீர் திருத்தவும் வேண்டும். மிகப் பொருத்தமான நேரம் இது.
நாம் காசு பணம் கொடுக்கிறோம். வசதி வாய்ப்புக்களை செய்து தருகிறோம். இலக்கை போதிப்பதில்லை. பெற்றோர்கள் முன்னோடிகளின் பெரும் பலவீனம் இது.
பெருமானார் (ஸல்) அவர்கள் வழிகாட்டுகீறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி காலத்தில் அரபு நாட்டில் இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கும் கண்ணியமான ஒரு இடத்தை உருவாக்கி கொடுத்து விட்டார்கள். அதே நேரத்தில் தனக்கு பின் முஸ்லிம்கள் அரபு நாடுகளை கடந்தும் செல்ல வேண்டும் என்று வழிகட்டிய பிறகே மரணித்தார்கள்.
ஹிஜ்ரீ 11 ல் சபர் 29 தேதி புதன் கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு ஒரு ஜனாஸாவிலிருந்து திரும்பும் போது பெருமானார் (ஸல்) அவர்களுக்கு கடுமையான தலைவலி தொடங்கியது. அன்றிலிருந்து தொடங்கிய நோயின் காரணமாக 13 வது நாளில் பெருமானார் (ஸல்) அவர்கள் வபாத்தானார்கள்.
அதற்கு இரண்டு  நாட்களுக்கு முன்னதாக திங்கட் கிழமை உஸாமா பின் ஜைத் ரலி அவர்களின் தலைமையில் ஒரு படையை தயார் செய்து ரோமர்களை எதிர்க்கச் செல்லுமாறு கூறினார்கள். அப்போது அவருக்கு 18 வயதுதான் ஆகியிருந்தது. அந்தப் படை பிரிவில் அபூபக்கர் உமர் சஃது ரலி போன்ற மூத்தோர் பலர் இருந்தனர்.  ஒரு சிறுவரையா நியமிக்க வேண்டும் என சிலர் பேசிக்கொண்டனர். இதைக் கேள்விப்பட்ட பெருமானார் (ஸல்) தலை வலியின் காரணத்தினால் தலையில் துணியை கட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்து உபதேசம் செய்து படைய உறுதிப்ப் படுத்தினார்கள்.
தனது மரணத்திற்கு பிறகு இந்த தீனை எடுத்துச் செல்லும் பணியில் முஸ்லிம்களின் இலக்கு எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்த மிக அருமையான பாடமாக அது இருந்தது. ‘
لما كان يوم الاثنين لأربع ليال بقين من صفر سنة إحدى عشرة من الهجرة أمر بالتهيؤ لغزو الروم، فلما كان من الغد دعا أسامة ابن زيد فقال: سر إلى موضع قتل أبيك فأوطئهم الخيل، فقد وليتك هذا الجيش،
فلما كان يوم الأربعاء بدأ به وجعه فحم وصدع، فلما أصبح يوم الخميس عقد لأسامة لواء بيده، ثم قال: اغز باسم الله وفي سبيل الله
فتكلم قوم وقالوا: يستعمل هذا الغلام على المهاجرين الأولين والأنصار، أي لأن سن أسامة كان ثمان عشرة،
ولما بلغ رسول الله مقالتهم وطعنهم في ولايته مع حداثة سنه غضب غضبا شديدا، وخرج وقد عصب على رأسه عصابة وعليه قطيفة، وصعد المنبر، فحمد الله وأثنى عليه، ثم قال: أما بعد أيها الناس، فما مقالة بلغتني عن بعضكم في تأميري أسامة، ولئن طعنتم في تأميري أسامة لقد طعنتم في إمارتي أباه من قبله وايم الله إن كان لخليقا بالإمارة، وإن ابنه من بعده لخليق للإمارة، وإن كان لمن أحب الناس إليّ، وإنهما مظنة لكل خير، فاستوصوا به خيرا فإنه من خياركم
وذلك في يوم السبت لعشر خلون من شهر ربيع الأول سنة إحدى عشرة،
ஒரு சிறந்த தலைவர் தனது சமூகத்திற்கு, ஒரு சிறந்த தந்தை தனது குடும்பத்திற்கு, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு  சிறந்த இலக்குகளை கற்பிக்க வேண்டும்.

அதே போல இலக்குகளில் தேவைப் பட்ட திருத்தங்களையும் செய்ய வெண்டும்.

கைப யுத்தத்திற்கு புறப்பட்ட அலி ரலி வர்களிடம் என்ன செய்யப் போகிறீர்? என பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர்களும் நம்மைப் போல ஆகும் வரை அவர்களுடன் போர் புரிவேன் என்றார் அலி ரலி.
பெருமானார் (ஸல்) அவரது இலட்சியத்தை திருத்திக் கொடுத்தார்கள்.
فلما أخذ عليّ الراية قال: أقاتلهم حتى يكونوا مثلنا، فقال رسول الله صلى الله عليه وسلم «انفذ على رسلك حتى تنزل بساحتهم ثم ادعهم إلى الإسلام، فإن لم يطيعوا لك بذلك فوالله لأن يهدي الله بك رجلاً واحداً خير لك من حمر النعم
நமது பிள்ளைகளிடம் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருக்கிறது.
அவர்கள் எப்படியாவது முன்னேறுவேன் என்று கூறுவார்கள் எனில்
அதை நெறிப்படுத்தி இப்படித்தான் முன்னேற வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டு,.
டாக்டராக வேண்டும் வக்கீலாகவேண்டும் ஆலிமாக வேண்டும் என்று இலக்கை தீர்மாணிக்கிற தருணத்தில் திறமையான என்ற வாசத்தையும் சாலிஹான என்ற வாசகத்தையும் இளம் தலைமுறையின் மனதில் பதிகிற வண்ணம் பதிக்க வேண்டிய கடமை பொறுப்பாளர்களுடையது.
இலக்கை தீர்மாணிப்பதில் முக்கிய இடம் வகிப்பது முன்னோடிகளை அடையாளம் காட்டுவது.
கஸ்ஸாலியைப் போல அறீவாளியாகவேண்டும். ஜின்னாவைப் போல வக்கீலாக வேண்டும், அலி பின் சீனாவை போல மருத்துவராக வேண்டும் என்று சொல்லுகையில் இலக்கில் தெளிவு பிறக்கும்,
முஸ்லிம் சமுதாயத்தில் எந்த துறையிலும் முன்னோடிகளுக்கு பஞ்சமில்லை.
இன்று அலி பின் சீனாவின் வரலாற்றை நினைவு படுத்துகிறேன்.
மகத்தான மருத்துவ சான்றுகளுக்கு சொந்தக் காரர்.
அவர் 1050ல் அதாவது ஆயிரத்து வருடங்களுக்கு முன்னதாக எழுதிய அல்கானூன் பித் திப்பு  The Canon of Medicine என்ற  நூல் இப்போதும் மருத்துவ உலகின் பைபிள் என்று போற்றப்படுகிறது.

அலி இப்னு சீனா இப்போதும் மருத்துவ உலகில் உலகளாவிய அளவில் கொண்டாடப்படுகிறார்.
William Osler described the Canon as "the most famous medical textbook ever written", noting that it remained "a medical bible for a longer time than any other work
அலி இப்னு சீனா வை அவிசென்னா மேற்குலகம் அழைக்கிறது.
சமூகத்தில் அறிவியாலாளர்களுக்கு அவர் ஒரு sympol சிம்பிளாக அறியப்படுகிறார். “ஆமாம் இவர் அதிகம் படித்த அவி சென்னா” என்று குறிப்பிடுவது வழக்கில் இருக்கிறது.
அவரது பெயர் ஹுசைன் . அவரது காரணப் பெயர்  அபு அலி
தந்தையின் பெயர் அப்துல்லாஹ்.  தந்தை ஆப்கானிஸ்தானின் பல்க் பகுதியைச் சார்ந்தவர்/
அரபி பார்ஸி துரூக்கிய இனங்களின் கலப்புக் குடும்பத்தில் பிறந்தார்.
சீனா என்பது இவரது பாட்டானார்களில் ஒருவரின் பெயராகும்.
அத்துடன் இணைத்து இப்னு சீனா என்று அழைக்கப்பட்டார்/
இப்னு சீனா என்பது ஹீப்ருவில் அவென்ஸினா என்று அழைக்கப் பட்டது. அதிலிருந்து லத்தீனுக்கு பயணப் பட்ட போது அது அவிசென்னா என மருவியது.
அதனால் முஸ்லிம்களிடம் இப்னு சீனா என இவர் புகழ் பெற்றிருந்தாலும் பொது வழக்கில் அவிசென்னா என்றே அழைக்கப் படுகிறார்.

இவர் ஷியா பிரிவை சார்ந்தவர் ஆவார்.

பிறப்பு

ولد في قرية أفشنة بالقرب من بخارى (في أوزبكستان حاليا في 370  هـ
.
அவரது தந்தை  புகாராவில் உள்ள கரமைத்தான் என்ற் மாவட்டத்தின் ஆளுநராக இருந்தார்


10 வய்திற்குள் திருக்குர் ஆன் மனனம்.
16 ல் கணிதம் வான நூல், தத்துவம் மருத்துவம் பயின்றார்.
تلقي العلوم, حفظ القرآن وعمره لم يتجاوز العاشرة ثم تلقي علوم الفقه والأدب والفلسفة والطب
அலி  பின் சீனாவின் கேள்விகளை சமாளிக்க முடியாமல் கனிதம் வான்நூல் போதிக்க வந்த ஆசிரியர் ஓடிப்போனார்.
பிறகு தானே படிக்கத் தொடங்கினார்
18 மாதங்களில் யூக்ளிட், அரிஸ்டாடில் பிளேட்டோ ஆகியோர்களின் நுல்களை படித்தார். ஒரு வெறியோடு படித்தார் என்றே கூற வேண்டும். இக்கால கட்டத்தில் ஓரிரவு கூட அவர் சரியாக தூங்கியதில்லை.

தத்துவ அறிஞர்களின் கருத்துக்கள் விளங்கா விட்டால் தொழுகை யில் ஈடுபடுவார் என்கிறது அவி சென்னாவின் வரலாறு.

அரிஸ்டாட்டிலின் ஒரு தத்துவத்தை 40 தடவை படித்தும் புரியவில்லை.   ஒரு தடவை கடைவீதிக்கு சென்ற போது ஒரு நபர் ஒரு புத்தகத்தை அவரிடம் கொடுத்து சில திர்ஹம்களை வேண்டினார்,

வேண்டா வெறுப்பாக அந்நூலை பெற்றுக்கு கொண்டார். வீட்டில் வந்து படித்து பார்த்த போது அந்த நூல்பாராபி எழிதிய தத்துவ நூல். அரிஸ்டாட்டிலுக்கு விளக்கமாக அது  இருந்தது. அலி பின் சீனாவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நேரே பள்ளிக்குச்  சென்று தொழுதார், அவரது சட்டைப் பையில் மிச்சமிருந்த காசு முழுவதையும்  ஏழைகளுக்கு தர்மம்.  

அறிவின் தேடல் உள்ளவர்களுக்கு அல்லாஹ் உறக்கத்தில் விளக்கங்களை தருவான் என அறிஞர்கள் கூறுவதுண்டு.

அலி பின் சீனாவிற்கும் உறங்கும் பொழுது கனவின் மூலம் விளக்கங்கள் கிடைத்தன. நன்றாக உறங்கி விழித்தபின் தெளிவுகள் கிடைத்தன.


மருத்துவத்தில் அவரது கவனம் அதிகம் சென்றது.

17 வயதில் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிட்சை அளிக்கத் தொடங்கினார்.

அவரது மருத்துவப் பணி பிரபலமடைந்தது.
ஒரு தடவை புகாராவின் மன்னர் நூஹ்பின் மன்சூரின்  நோயுக்கு சிகிட்சை அளித்தார். மன்னர் குணம் பெற்றார். உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார் அரசர். அரசரிடம் அவர் அரண்மனையில் உள்ள : நூல நிலையத்தை பார்வையிட அனுமதி வேண்டும் என்றார். அரசர் அனுமதியளிக்கவே அங்கிருந்த அரிய நூல்களை படித்து மனனமிட்டார்.
அரசருடன் இப்னு சீனாவுடன் தொடர்பு நெருக்கமானது. அந்த நூல் நிலையம் இப்னு சீனாவின் தனிக் கட்டுப்பாட்டிற்கு வந்தது.

இன்று கல்லூரிக்கு செல்லும் நமது பிள்ளைகள் பைக் செல்போன் என்று தங்களது கோரிக்ககளுக்காக பெற்றோரிடம் தவம் கிடக்கிறார்கள். அன்று அவிசென்னா அரசரிடம் கோரியது. புத்தகங்களை பார்வையிடும் அனுமதி.  

அவரிடமிருந்த கல்வி அவருக்கு செல்லுமிடமெங்கும் உயர் பதவிகளை வழங்கியது.

அவரது ஊரான புகாராவின் அமைச்சராக இருந்தார்.
அங்கிருந்து அவர் கல்வியை தேடிய பயணத்தில் குவாரிஜ்மி நகருக்கு வந்த போது அங்கிருந்த அரசர் மாமூன் சபையில் இடம் பெற்றார்.

அவரத் புகழ் பரவிய போது அப்போதைய பேரரசரான கஜ்னி முஹம்மது அவரை தன்னிடம் அனுப்பி வைக்குமாறு குவாரிஜ்மி அரசரிடம் கோரிக்கை வைத்தார்.
அதனால் அங்கிரிந்து குர்கான் என்ற நாட்டிற்கு தப்பியோடினார் , அங்கிருந்த  மன்னர் காபூஸ் இப்னு சீனாவை தனது  மந்திரி ஆக்கிக் கொண்டார்
இந்த கால கட்டத்தில் கஜ்னி முஹ்மம்மது இப்னு சீனாவின் உருவப்படத்தை வரைந்து தேடினார்.

குர்கான் மன்னர் காபூஸ் கொல்லப்பட அங்கிருந்து  ஹமதான் சென்றார் அலி பின் சீனா ..
ஹமதான் மன்னர்  ஷம்சுத் தவ்லாவிடமும்  அமைச்சரானார்
அந்தக் கால கட்டத்தில் அவருடை மிகச் சிறந்த நூலான  
அல்கானூன் பித் திப்பு எனும் நூலை  எழுதினார்.

10 லட்சம் வார்த்தைகளை கொண்ட அல்கானூன் பித்திப்பு நூல்
5 தொகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளது. 760 மருந்துகளைப் பற்றி அந்நூலில் இப்னு சீனா விவரிக்கிறார்.
12 ம் நூற்றாண்டில் ஜெரார்ட்  என்பவர் அதை கேனன் என்ற பெயரில் லத்தீனில் மொழி பெயர்த்தார். பிறகு அது உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.

ஐரோப்பாவின் பள்ளிக் கூடாங்களில் இதுவே மருத்துவ பாடப்புத்தகமாக இருந்தது/
1470 முதல் 1500 வரை 16 பதிப்புகள் இந்நூல் வெளிவந்தது.

17 ம் நூற்றாண்டின் இறுதி வரை இதுவே மருத்துவ உலகின் பைபிள்- வேத நூலக இருந்தது என  டாக்டர் ஆஸ்லர் கூறுகிறார்.  

ஹமதான் மன்னர் ஷம்சுத் தவ்லாவின் இறப்புக்குப் பின் அங்கும் தலைமறைவாக வாழ்ந்தார்.

அபூகாலிப் என்பவரின்  மருந்துக்கடையில் ஓளிந்திருந்த போது அஷ்ஷிபா என்ற அவருடைய புகழ் பெற்ற இன்னொரு நூலை எழுதினார்

அலி பின் சீனாவின் அரசியல் ஓட்டம் நிறைந்ததாக இருந்தது என்ற போதும் அவருடை எழுத்துப் பணி சிறிதும் தளர்வடைந்ததில்லை.
இபின் சீனா, ஏறத்தாழ 450 நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் 240 நூல்களே இப்போது கிடைக்கின்றன. இவற்றுள் 40 மருத்துவ நூல்கள்.
ஹமதானில் இருந்து இஸ்பஹான் சென்றார். மன்னர் அலாவுதவ்லா இப்னு சீனாவை ஆதரித்தார்.  அரசவையில் 14 ஆண்டுகள் இப்னு சீனா இடம் பெற்றார்.
அப்போது அதாவுத்தவ்லாவிற்காக விஞ்ஞானிகளின் கலைக் களஞ்சியம் என்ற பார்ஸீ நூலை எழுதினார்.

அவரது ஆற்றல் அவரை தொடர்ந்து ஒட வைத்தது. ஆனால் ஓடிய இடங்களில் எல்லாம் அவருக்கு அது ஆறுதலையும் அரவணைப்பையும் பெற்றுத் தந்தது.

இந்தக் கால இடைவெளிகளில் மனித சமூகத்திற்கு அவர் மகத்தான் ஆய்வு முடிவுகளை வழங்கினார்.
பல புதிய கண்டுபிடிப்புக்களை வெளியிட்டார்.

திரவப் பெருட்களை காய்ச்சி ஆவியாக்கி தூய்மைப்படுத்துவது,
பாக்டீரியாக்கள் காற்றில் பரவுகின்றன என்பதை விளக்கினார்.
உடலில் இஞ்ஜெக்ஸன மூலம் மருந்து செலுத்தும் முறையை முதலில் அமுல் படுத்தியவர்.
ஆயுதங்கள் மூலம் குழந்தையை வெளியேற்றுதல்
ஸிசேரியன் ஆபரேசன் மூலம் குழந்தை பேறு.
உறுப்புக்களை பெயர்த்து ஒட்டவைத்தும் சிக்ட்சை செய்தார்.
கடுமையான காய்ச்சலுக்கு தலையில் பனிக்கட்டி வைத்து சிகிட்சை உள்ளீட்ட பல்வேறு சிகிட்சை முறைகள் இப்னு சீனாவின் கண்டுபிடிப்புகளாகும்.

நோய்களில் பலது மன நோய் என்ற செய்தியையும் உலகிற்கு முதலில் சொன்னவர் இவரே. அதனால் உலகில் தோன்றிய முதல் மன்நோய் மருத்துவர் என்றும் இவர் கருதப்படுகிறார்.

புவைஹ் மன்ன்ரின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு கை செயல்பட வில்லை. அவளை கெடுக்கப் போவது போல பாய்ந்தார். அவள் கையை இயக்கினாள்.

தினசரி 50 பக்கம் அளவுக்கு அவர் எழுதிய அனைத்தும் தர்க்கம் மருத்துவம் அரசியல் தப்ஸீர் ,இலக்கியம் ஆகிய அறிவு சார்ந்த துறைகளிலேயே இருந்தது.

இன்றைய இளைஞர்கள் பேஸ்புக் வாட்ஸ் அப் என எழுதி குவிக்கிறார்கள், மீம்ஸ்களில் திழைத்துக் கிடக்கிறார்கள்.
தனது வாழ்நாள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருந்த நிலையிலும் அதை அலி பின் சீனா அர்த்தப் படுத்திக் கொண்டதை நாம் கவனிக்க வேண்டும்.

அலி பின் சீனாவிடம் அறிவியல் ஆய்வுத்திறன் போற்றுதலுக்குரியதாக இருந்த போதும் முஸ்லிம்களிடம் மார்க்க ரீதியாக அவர் மதிப்பு பெறாமல் போனதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

முதலாவது அவருடைய ஷியா கோட்பாடு
இரண்டவது கிரேக்க தத்துவங்களின் மீது கொண்ட அளவு கடந்த ஈடுபாட்டின் காரணமாக மார்க்கத்தின் அடிப்ப்டை அம்சங்கள் சிலவற்றில் தனது கருத்தை பெரிதாக கருதியது.

சொர்க்கம் நரகம் ஆகியவை உருவகங்கள்
நபிமார்களின் முஃஜிஸாக்கள் அவர்களது உடற் சார்ந்த சக்திகள்
நபித்தோழர்களை இலேசாக கருதியது.
நபிமார்கள் பொய் சொல்லக் கூடும் என்று கூறீயது

போன்ற சொந்தக் கருத்துக்கள் அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்த போதும் முஸ்லிம்களிடம் துஆ வை பெறாமல் செய்து விட்டது.

இந்த நடமுறை நம்மை தீனிடமிருந்தும் முஸ்லிம் உம்மத்திடமிருந்தும் அன்னியப்படுத்தி விடும் என்ற பாடத்தையும் இப்னு சீனாவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

வாழ்வின் இறுதி கட்டத்தில் பல வற்றை அவர் உணர்ந்து கொண்டார்.

நபியை பின்பற்ற வேண்டியதில்லை என்று கருதுவதை கண்டித்தார்.

ஒரு முறை சுபுஹு தொழுகைக்கு தனது மாணவரிடம் ஒளு செய்ய தண்ணீர் கொண்டு வரக் கூறினார். கடும் குளிரில் தூக்கத்தில் இருந்து எழுந்து வராத அந்த  மாணவருக்கு மு அத்தின் பாங்கு சொல்வதை சுட்டிக்காட்டி 400 வருடங்களுக்கும் முன் நபி இட்ட கட்டளையை இந்த முஅத்தின் இந்தக் குளிறிலும் நிறைவேற்றுகிறார். நான் சொன்னதை நீ செய்ய வில்லை.    இறைத்தூதர்களுக்கும் மாமனிதர்களின் தத்துவ கலைக்கும் இது தான் வேறு பாடு என்று விளக்கினார்.

ஹமதானில் அவர் தங்கியிருந்த போது  அவருக்கு வயிற்று வலி- ஏற்பட்டது. மருந்து தயாரித்து கொடுத்த வேலைக்காரன் அவர் கூறியதை விட அதிக அளவில் மருந்தை கலந்ததால் இப்னு சீனாவின் நோய் அதிகரித்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவரது நோய் சீராவதும் சீர் கெடுவதுமாக இருந்தது.
தனது இந்த நோயிலிருந்து விடுபட முடியாது என்பதை அறிந்து கொண்டார்.

தனது சொத்துக்களை தர்மம் செய்தார். தன்னுடைய  அடிமைகள் அனைவரையும் விடுதலை. மூன்று நாட்களில் குர் ஆன் ஓதி முடித்தார்.  

ஹிஜ்ரி 428 ரம்லானில் ஒரு வெள்ளிக்கிழமை இறந்தார். அவருடைய உடல் ரஷ்யாவில் உள்ள ஹமதானில் அடக்கம் செய்யப் பட்டது.

இவருடைய 1000 மவது ஆண்டு விழா உலகெங்கும் கொண்டாடப் பட்டது.

நாம் பிறப்பது ஒரு சிறு அறையில் என்றாலும் மறைவது ஒரு சிறு இடத்தில் என்றாலும் இடைப் பட்ட வாழ்க்கை அகில உலகிற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை நமக்கும் வரவேண்டும்.

அத்தகைய இலக்கை நமது இளவல்களுக்கும் கற்பிக்க வேண்டும்.

அல்லாஹ் கிருபை செய்வானாக!

அருமை நண்பர்களே! 
மத்தியக் கிழக்கு நாடானா சிரியா, இராக் துருக்கி, ஜோர்டானுக்கு அருகில் உள்ள நாடு. ஷாம் என்று இஸ்லாமிய வரலாற்றில் புகழ் பாடப்பட்ட பிரதேசத்தின் ஒரு பகுதி .இப்போது சிரிய அரபுக் குடியரசு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
அங்கி சியா பிரிவைச் சார்ந்த பஸர் அல் அஸத் ஆட்சியாளராக இருக்கிறார். மிகப் பெரும் சர்வாதிகாரியாக நடந்து கொண்டு மக்களை அவர் நசுக்கி வருகிறார்.
அந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ள சன்னீ பிரிவு முஸ்லிம்கள் தொடர்ந்து அவரை எதிர்த்து வருகிறார்கள். கடந்த் 8 ஆண்டுகளாக அரசபடைகள் அரசை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்களை மிக வன்மையாக அடக்கி வருகின்றன. அரச படைகளுக்கு அரசியல் இலாப நோக்கில்; ரஷ்யாவும் ஈரானும் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களை வழங்கி வருகின்றன. ரஷ்யா தனது இராணுவத்தை நேரடியாகவே கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது.
கடந்து 10 நாட்களுக்கு முன்னதாக அரசபடைகள் ரஷ்யாவின் உதவியோடு சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸூக்கு அருகிலுள்ள கொவட்டா நகரின் மீது கடும் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. சுமர் 4 இலட்சம் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியின் மீது நடத்தப் பட்ட தாக்குதல் மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. பூமியில் ஒரு நரகம் என இதை பிபிசி விமர்ச்சித்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கிராமங்களும் முற்றிலுமாக அழிந்து விட்டன. இறப்பு எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை. சுமார் 600 பேர் வரை இறந்து விட்டதாகவும் அவர்களில் கனிசமாணோர் குழந்தைகள் எனவும் அரசு படைகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும் அந்த ஆயுதங்களிலிருந்து வெளியேறும் நச்சுக்களை குழந்தைகளை வெகுவாக பாதித்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் அந்த பகுதிக்குள் சிக்கியிருக்கிறார். இவர்களில் 27 ஆயிரம் பேர் குழந்தைகள்.

இந்தப் போரில் உயுரிழந்தவர்களில் கடும் காயம் பட்டவர்களிலும் 60 சதவீதம் பேர் குழந்தைகள் என செய்திகள் கூறுகின்றன.
பிபிசி வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் உள்ளத்தை உருக்குகின்றன.

ரஷ்யா அமெரிக்காவின் அரசியல் விளையாட்டில் ஒரு பகுதியாகத்தான் இந்த யுத்தம் நடத்தப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.
யா அல்லாஹ் குழப்ப வாதிகளின் களமாக எங்களை ஆக்கிவிடாதே!
எங்களது சிரிய நாட்டு சகோதரர்களை காப்பாற்று. அவர்களுக்கு உதவி செய்!
அக்கிரமம் செய்கிறவர்களை அவர்களது கையைப் பிடித்து நிறுத்து.
குழந்தைகள் அப்பாவிகள் கொல்லப்படு கொடூரத்தை இனியும் அனுமதித்து விடாதே!
என பிரார்த்திப்போம். துஆ யூனுஸ் ஓதி சிரிய மக்களுக்காக துஆ செய்யுமாறு தமிழ் நாடு மாநில ஜமாத்துல் உலமா சபை கேட்டுக் கொண்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் சுன்னத் தொழுகைக்குப் பிறகு நாம் சிறிது நேரம் துஆ யூனுஸ் ஓதி துஆ செய்வோம்.
அல்லாஹ் அவர்களையும் பாதுகாப்பான். நம்மையும் பாதுகாப்பான்.

ரஷ்யா தனது அழிவு முயற்சியை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
உலக நாடுகள் குறிப்பாக நம்முடைய நாடு சிரியாவில் நடைபெறும் கொடூர தாக்குதலை கண்டிக்க வேண்டும்.
பஷர் அல் அஸத் ஒருவர் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் அவர் சிரியாவின் அதிபர் பொறுப்பிலிருந்து விலகி அல்லது விலக்கி அங்கு ஒரு நல்ல அரசு அமைய உலக மக்கள் குரல் எழுப்ப வேண்டும்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!













1 comment:

  1. வேற தலைப்பு எதிர்பார்த்தோமே

    ReplyDelete