வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 25, 2018

குடியரசு காப்பாற்றப் பட வேண்டும்.


இந்தியாவின் குடியாட்சி முறைக்கு ஆபத்து என்று உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் ஒன்று கூடி பத்ரிகையாளர்களை நேரடியாக சந்தித்து பேட்டியளித்த நிலையில் இன்னொரு குடியரசு தினத்தை நாம் சந்திக்கிறோம்.
மக்கள் தமது ஆட்சியாளர்களை தாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் நடைமுறையையே குடியரசு ஆகும். உலகிலுள்ள பிரச்சனை குறைவான அதிகார அமைப்பக குடியரசு முறை கருதப் படுகிறது, இது ஓரளவு உண்மையே!
அமெரிக்காவாகட்டும் இந்தியாவாகாட்டும் மக்கள் தமக்கு விருப்பமான ஆட்சியாளர்களை தேர்வு செய்கிறார்கள். பிடிக்காவிட்டால் தேர்தல்கள் மூலம் ஆட்சியாளர்களை மாற்றிக் கொள்கிறார்கள்.
இந்த சிறந்த நடைமுறையில் பெரிய தோல்வியும் கேள்வியும் எதில் என்றார்கள்.
மக்கள் குறுகிய உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு தவறான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துவதில் அமைகிறது.
ஆட்சியாளர்களின் நேர்மையற்ற குணம் வெளிப்படுகிற முக்கிய இடம் நீதிமன்றங்களாகும்.
குடியரசுகளின் கோட்டை நீதிமன்றங்கள்
மக்களுக்கான ஆட்சி  முறையை காப்பாற்றுவதில் நீதிக்கு முக்கிய இடம் இருக்கிறது.
அரசு எனும் தோட்டத்தின் தலை வாசல் நீதி. ஆட்சியாளரின் துணிச்சலும் வீரமும் சண்டை போடுவதில் இல்லை. நீதியை காப்பாற்றுவதிலேயே இருக்கிறது.
يقول سعيد بن سويد في إحدى خطبه بحمص: ( أيها الناس إن للإسلام حائطا منيعا وبابا وثيقا، فحائطه الحق وبابه العدل، ولا يزال الإسلام منيعا ما اشتد السلطان وليس شدة السلطان قتلا بالسيف ولا ضربا بالسوط، ولكن قضاء بالحق وأخذاً بالعدل )

மக்களுக்கான அரசில் நீதிமன்றங்கள் சுயமாக நீதியுணர்வோடு இயங்க வேண்டும்.
நீதிபதிகளிடமும் நீதி முழுவடிவத்தில் இருக்க வேண்டும் விருப்பு வெறுப்பு இருக்க கூடாது.
நீதிபதிகளை நியமிக்கிற ஆட்சியாளர்களிடமும் நீதி பரிபாலிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை முழுமையாக இருக்க வேண்டும்.
நீதிபதிகள் சட்டப் படி தீர்ப்பளிக்க வேண்டும், தம்மிஷ்டப் படி அல்ல,
فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنَ الْحَقِّ [المائدة: 48]
வாதியால் ஆதாரம் கொண்டு வர முடியாத நிலையில் பிரதிவாதி சத்தியம் செய்ய வேண்டும். அரசரையும் விடாத நீதிபதி.
يروى أبو يوسف وهو من أفذاذ القضاة عن نفسه: أنه جاءه رجل يدعى أن له بستانا في يد الخليفة فأحضر الخليفة إلى مجلس القضاء وطلب من المدعي البينة فقال: غصبه المهدى مني ولا بينة لدي وليحلف الخليفة، فقال أمير المؤمنين: البستان لي اشتراه لي المهدي ولم أجد به عقدا فوجه القاضي أبو يوسف إلى الخليفة اليمين ثلاث مرات فلم يحلف الخليفة، فقضى بالبستان للرجل.

நீதிபரிபாலணத்தில் நெருக்கடிகளுக்கு பரிந்துரைகளுக்கு இடம் அளிக்க கூடாது, நீதிபதி உறுதியாக நிற்பார் எனில் நிதி பிழைக்கும்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்குள் ஆட்சியாளர்கள் தலையிடக் கூடாது.
كتب الخليفة أبو جعفر المنصور إلى سوار بن عبد الله قاضي البصر : انظر الأرض التي تخاصم فيها فلان القائد، وفلان التاجر فادفعها إلى القائد فكتب إليه سوار: إن البينة قد قامت عندي أنها للتاجر، فلست أخرجها من يده إلا ببينة، فكتب إليه المنصور: والله الذي لا إله إلا هو لا أخرجتها من يد التاجر إلا بحق، فلما جاءه الكتاب قال: ملأتها والله عدلا وصار قضاتي تردني إلى الحق.

நீதிய நிலைநாட்டுவதில் ஆட்சியாளர்களுக்கு நீதிபதிகள் அடிபணிந்து விடக் கூடாது.

சமர்கண்ட் நகரை முஸ்லிம்கள் வெற்றி கண்டபோது சாதாரணமாக ஜிஹாதின் நடைமுறையில் பின்பற்றப்படுகிற வழி முறையை கடைபிடிக்கவில்லை. முஸ்லிம் நீதிபதி ஊரைக் காலி செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். இது சம்பந்தமான வழக்கு ஜுமைஹ் பின் ஆமிர் அவர்களின் நீதிமனறத்திற்கு வந்த போது மூஸ்லிம் படைத்தளபதியை குதைபா என்றே நீதிமன்ற பணியாளர் அழைத்தார் என வரலாறுகிறது. குதைபாவும் உட்கார அனுமதிக்கப் பட்டார். சமர்கண்தின் தலைவர்களான பாதிரியும் உட்கார அனுமதிக்கப் பட்டார். முஸ்லிம் படை வீரர்கள் அன்று மாலைக்குள் ஊரைக் காலி செய்தார்கள்.
نادى الغلام : ياقتيبة ( هكذا بلا لقب )
فجاء قتيبة وجلس هو وكبير الكهنة أمام القاضي جُميْع 
ثم قال القاضي : ما دعواك يا سمرقندي ؟
قال : إجتاحنا قتيبة بجيشه ولم يدعنا إلى الإسلام ويمهلنا حتى ننظر في أمرنا ..
إلتفت القاضي إلى قتيبة وقال : وما تقول في هذا يا قتيبة ؟
قال قتيبة : الحرب خدعة وهذا بلد عظيم وكل البلدان من حوله كانوا يقاومون ولم يدخلوا الإسلام ولم يقبلوا بالجزية ...
قال القاضي : يا قتيبة هل دعوتهم للإسلام أو الجزية أو الحرب ؟
قال قتيبة : لا إنما باغتناهم لما ذكرت لك ...
قال القاضي : أراك قد أقررت ، وإذا أقر المدعي عليه انتهت المحاكمة ، يا قتيبة ما نصر الله هذه الأمة إلا بالدين واجتناب الغدر وإقامة العدل .
ثم قال : قضينا بإخراج جميع المسلمين من أرض سمرقند من حكام وجيوش ورجال وأطفال ونساء وأن تترك الدكاكين والدور ، وأنْ لا يبق في سمرقند أحد ، على أنْ ينذرهم المسلمون بعد ذلك !!


நீதிபதிகளின் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்.
உமர் ரலி ஒரு நீதிபதியை நீக்கினார். அவரை விடச் சிறந்தவர் கிடைத்தார் என்பதற்காக.
முன்னாள் நீதிபதி என்னை நீக்கியதற்கான காரணத்தை மக்களிடம் தெரிவியுங்கள் என்று கேட்டுக் கொண்டார். உமர் ரலி அதற்கு சம்மதித்தார்கள்.
فقد عزل عمر بن الخطاب - رضي الله عنه- شرحبيل بن حسنة عن القضاء فقال له شرحبيل: أعن سخطة عزلتني ؟ قال: لا ولكن وجدت من هو مثلك في الصلاح وأقوى منك في العمل، فقال: يا أمير المؤمنين إن عزلك عيب فأخبر الناس بعذري، ففعل عمر ذلك.

நீதிபதிகள் எல்லோரிடமும் நீதியை பேணவேண்டும். தமக்கு வேண்டப்பட்டவர் வேண்டப்படாதவர் என்ற பேதம் காட்டக் கூடாது,
 وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ [المائدة: 42]
யாராக இருந்தாலும் நிற்கிற இடத்தில் நின்றாக வேண்டும்.
دخل الأشعث بن قيس على القاضي شريح في مجلس الحكومة فقال شريح: مرحبا وأهلا وسهلا بشيخنا وسيدنا، وأجلسه معه، فبينما هو جالس معه إذ دخل رجل يتظلم من الأشعث فقال له شريح: قم فاجلس مجلس الخصم وكلم صاحبك، فقال بل أكلمه في مجلسي فقال له: لتقومن أو لآمرن من يقيمك، فقام امتثالا لأمر القضاء
மக்களாட்சியை பாதுகாப்பதில் நீதிமன்றங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆட்சியாளர்கள் அரசியலமைப்பை மீறி விடாமல் பாதுகாக்கிற பொருப்பு நீதிமன்றங்களுக்கு உண்டு.
இஸ்லாமிய வரலாற்றில் பல முறை கலீபாக்களுக்கு எதிராக தீர்ப்புக்கள் பல வழங்கப்பட்டன, கலீபாக்கள் அவற்றை மன விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டனர்,
நீதிபதிகள் தமது இருக்கையில் இருக்கும் போது ஆட்சியாளருக்கும் சாமாணியருக்கும் இடையே வேறுபாடு காட்டவில்லை
ஆனால் இன்று நம்முடைய நாட்டில் நீதிபதிகளும் சரியாக இருப்பதில்லை. நீதிபதிகளை நியமிக்கிறவர்களும் நாட்டில் நீதி பரிபாலனம் செய்ய்யப்பட வேண்டும் என்று நினைப்பதில்லை.
உலகின் மிகப் பெரிய அக்கிரமம்மாக ஹாதியா என்ற பெண் முஸ்லிமாக மாறி ஒரு வாலிபரை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்தை ஒரு நீதிமன்றம் இரத்து செய்கிறது.
ஆனால் ஈஷா யோக மையத்தில் தன்னுடைய இரண்டு பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய சொத்துக்கள் அபகரிக்கப் பட்டுள்ளது என்று பெற்றோர் தொடுத்த வழக்கில் ஈஷாவுக்கு சார்பாக தீர்ப்பு சொல்லப்படுகிறது.
குஜராத் கலவர வழக்கிலிருந்து அமித்ஷாவை விடுவித்த நீதிபதி கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்த நான்கு நீதிபதிகள் அரசியல் சாசண அமர்வுக்கு நியமிக்கப் படவில்லை.
சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் இந்தியாவின் குடியரசுத் தத்துவத்தை மிகப்பெரும் கேள்விக்குள்ளாக்கி விட்டன.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசஃப் ஆகியோர் டெல்லியில் நீதிபதி செல்லமேஸ்வர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக பதவியில் உள்ள நான்கு நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும்
தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய வழக்குகள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அவை தலைமை நீதிபதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமர்வுகளுக்கு ஒதுக்கப்படுவது உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் குறைத்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரு வழக்கை விசாரிக்கும் அமர்வில் யார் இடம் பெறுவது, எந்த அமர்வில் பேர் இடம் பெறுவது என்பது குறித்து சரியாக முடிவெடுக்காவிட்டால், அதனால் ஏற்படும் தாக்கங்கள் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வு, தங்களுக்கு வேண்டிய வகையில், ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தலைமை நீதிபதி மீது அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
தங்களது முயற்சி தோல்வியடைந்த காரணத்தால்தான், என்ன நடந்தது என்பதை நாட்டு மக்களிடம் தெரிவித்து, அடுத்து அவர்கள் முடிவு செய்யட்டும் என்பதற்காகத்தான் தாங்கள் செய்தியாளர்களைச் சந்தித்து இதை அறிவித்ததாகவும் தெரிவித்தனர்.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் 45-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்றுக் கொண்டார் நீதிபதி தீபக் மிஸ்ரா அவர் வழங்கிய தீர்ப்புக்களில் தற்போதைய மத்திய அரசுக்கு ஆதரவான தீர்ப்புக்கள் பல உண்டு.
திரையரங்குகளில் தேசிய கீதம் பாடவேண்டும்
திரையரங்குகளில் தேசிய கீதம் பாடவேண்டும் என்பதை கட்டாயமாக்கி கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதியன்று உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் தீபக் மிஸ்ராவும் ஒருவர்
சுப்ரமணியன் சுவாமி, ராகுல் காந்தி, அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோருக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான வழக்குகளில் ஒருவரின் கருத்து சுதந்திரமானது, வரம்புக்கு உட்பட்டது அல்ல என்று நீதிபதிகள் அமர்வு கூறியது. ஆனால் நீதிபதிகளில் ஒருவரான தீபக் மிஸ்ரா குற்றவியல் அவதூறு நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவை என்று கூறினார்

யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை
1993 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுகள் வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன், தூக்கு தண்டனைக்கு தடை விதிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
2013, ஜூலை 29ஆம் தேதி இரவில் நீதிமன்றம் திறக்கப்பட்டு அந்த மனுவை தீபக் மிஸ்ரா உட்பட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.
வாதங்கள் முடிந்தபிறகு காலை ஐந்து மணிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பில், 'யாகூபுக்கு தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பது, நீதியை ஏளனம் செய்வதற்கு ஒப்பானதாகும், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று கூறப்பட்டது.

பதவி உயர்வில் இட ஒதுக்கீடுக்கு தடை
உத்தர பிரதேச மாநிலத்தில் மாயாவதி அரசு, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
2012, ஏப்ரல் 27ஆம் தேதியன்று இந்த வழக்கை விசாரித்த சட்ட அமர்வில் தீபக் மிஸ்ராவும் ஒருவர்.
நான்கு நீதிபதிகளும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக குற்றம் சாட்டியுள்ள நிலையில் அவரை நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட தகுதி நீக்கம் செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை . ஆனால் அரசு அவரை பயன்படுத்தி இலாபம் அடைவதில் குறியாக இருக்கிறது
இது இந்தியாவின் குடியரசுத் தத்துவத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியது.
மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும், மத்திய அரசு திருந்தா விட்டால்
மக்கள் குடியரசை பாதுகாக்க உறுதி ஏற்க வேண்டும்.





.




2 comments:

  1. جزاك الله حضرت
    அருமையான பதிவு அல் ஹம்துலில்லாஹ்...........
    அப்துல்லாஹ் தாவூதி பழைய கோட்டை பாலக்காடு

    ReplyDelete
  2. جزاك الله حضرت
    அருமையான பதிவு அல் ஹம்துலில்லாஹ்
    அப்துல்லாஹ் தாவூதி பழைய கோட்டை பாலக்காடு

    ReplyDelete