வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 18, 2018

அனைத்து மதத்தவர்களுக்கான மானியங்களையும் இரத்து செய்ய வேண்டும்.

وَلِلّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً وَمَن كَفَرَ فَإِنَّ الله غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ}(97) سورة آل عمران

கடந்த 18 ம் தேதி ஹஜ் குலுக்கள் நடை பெற்று பலருக்கும் ஹஜ்ஜுக்கான வாய்ப்பு உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இந்த ஆண்டு சுமார் 1,75,000 பேர் ஹஜ் செய்யவுள்ளனர்.
அல்லாஹ் அனைவரின் ஹஜ்ஜையும் அங்கீகரித்தருள்வானாக! ஹஜ் பயணிகள் அனைவரின் காரியங்களை இலேசாக்கி வைப்பானாக!
நம் அனைவருக்கும் ஹஜ்ஜின் பாக்கியத்தை திரும்பத் திருமப தந்தருள்வானாக!
மார்க்க கடமைகளில் மகத்தான ஒரு கடமை ஹஜ்
ஆண்களுக்கு ஜிஹாதுக்கு அடுத்த சிறந்த அமல்
فعن أبي هريرة رضي الله عنه قال: (سُئل رسول الله صلى الله عليه وسلم: أي الأعمال أفضل؟ قال: إيمان بالله ورسوله، قيل: ثم ماذا؟ قال: حج مبرور)(رواه البخاري ومسلم.  

பெண்களுக்கு ஹஜ்ஜே சிறந்த ஜிஹாது
عن عائشة رضي الله عنها قالت: (قلت: يا رسول الله: نرى الجهاد أفضل العمل أفلا نجاهد؟ قاللكن أفضل من الجهاد حج مبرور) رواه البخاري
சொர்க்கமே கூலி
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : (العمرة إلى العمرة كفارة لما بينهما، والحج المبرور ليس له جزاء إلا الجنة. رواه البخاري ومسلم.

மனிதனை குழந்தையாக்கும் பரிசுத்த வணக்கம்
عن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: (مَن حجَّ فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. رواه البخاري ومسلم.

ஹாஜிகள் அல்லாஹ்வின் குழுவினர் . அவர்கள் வேண்டுவது கிடைக்கும்.
عن ابن عمر عن النبي -صلى الله عليه وسلم- قال:(الغازي في سبيل الله والحاج والمعتمر وفد الله، دعاهم فأجابوه، وسألوه فأعطاهم)
ஹஜ் எல்லோர் மீதும் கடமை இல்லை.
வாய்ப்பு வசதியுடையோர் மீது மட்டுமே ஹஜ் கடமையாகிறது.
وَلِلّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً

பணக்காரர்கள் செல்வத்தை பாதுகாத்துக் கொள்ளும் வழிகளில் ஒன்று ஹஜ்
عن ابن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة، وليس للحجة المبرورة ثواب إلا الجنة). رواه الترمذي

ஹஜ் கடமை செல்வந்தர்களின் ஈமானுக்கு அடையாளம்.

قال رسول الله صلى الله عليه وسلم  :
من لم يحبسه مرض أو حاجة ظاهرة أو مشقة ظاهرة أو سلطان جائر فلم يحج فليمت إن شاء يهودياً، وإن شاء نصرانياً). رواه أحمد
ஜிஸிய்யா விதிக்க நினைத்த உமர் (ரலி)

عن عمر بن الخطاب أنه قال: (لقد هممت أن أبعث رجالاً إلى هذه الأمصار فينظروا كل من كان جدة (أي سعة من المال). ولم يحج ليضربوا عليهم الجزية، ما هم بمسلمين ما هم بمسلمين  - البيهقي 

அதன் காரணமாகவே சீக்கிரமாக ஹஜ்ஜை நிறைவேற்றிவிட பெருமானார் (ஸல்) அறிவுறுத்தினார்கள்.

قال رسول الله صلى الله عليه وسلم
تعجلوا إلى الحج  - يعني الفريضةفإن أحدكم لا يدري ما يعرض له- أخرجه أحمد في مسنده 

ஹஜ் வாழ்வில் ஒரு முறை கடமை .

أبي هريرة رضي الله عنه قال: خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال: (يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا، فقال رجل: أكلَّ عام يا رسول الله؟ فسكت، حتى قالها ثلاثاً، فقال النبي صلى الله عليه وسلملو قلت: نعم لوجبت ولما استطعتم

அந்த ஒரு முறை கடமையை ஏன் தாமதப் படுத்த வேண்டும்.
இப்போது ஹஜ்
1.   அதிக பாதுகாப்பானதாக ஆகி விட்டது.
2.   எளிதாகி விட்டது. உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதிகப்பட்சமாக ஒரு நாளில் மக்காவை அடைந்து விட முடியும். (முற்காலங்களில் மாதங்கள் பிடிக்கும். ) – வசதியான தங்குமிடங்கள். தவாப் சஃயுக்கு பேட்டரி வண்டிகள். கணக்கற்ற வீல் சேர்கள்.
3.   குறைந்த நாட்களில் நிறைவேற்றி விட முடியும். (இப்போதெல்லாம் 15 நாட்களுக்கான ஹஜ் பேக்கேஜுகளை பிசியான வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

எந்தக் காரணத்தை கூறியும் தவிர்க்க முடியாத அளவில் வசதி வாய்ப்புக்கள் பெருகிவிட்டன.  
எனவே வசதி வாய்ப்புப் பெற்றவர்கள் தமது கடமையான ஹஜ்ஜை விரைவாக நிறைவேற்றி விட வேண்டும்.  

ஹஜ்ஜுக்குப் பின்னால் பக்குவமாக இருக்க முடியாதோ என சில இளைஞர்கள் அஞ்சுகிறார்கள்.
ஹஜ்ஜை பெருமைக்கான அல்லது அந்தஸ்திற்காகான ஒரு வணக்கம் என நினைத்தால் தான் இத்தகைய சிந்தனை எல்லாம் வரும். ஹஜ் ஒரு கடமை தொழுகையைப் போல என நினைத்தால் இத்தகைய சிந்தனை வராது. மட்டும் அல்ல. அல்லாஹ் தவ்பீக் செய்யட்டும் என நினையுங்கள். ஹஜ்ஜுக்குப் பிறகு மிகச் சிறப்பான பக்குவத்தை பெற்றுவிட வாய்ப்புண்டு.

ஹஜ் ஒரு முறை தான் கடமை என்றாலும் நேர்ச்சை போன்ற சில சந்தர்ப்பங்களில் பல முறையும் கடமையாகும்.

ஷாபி மத்ஹபின் சட்டப்படி தந்தை தாயின் மீது ஹஜ் கடமையாக இருந்து அவர்கள் ஹஜ் செய்யாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்ற சொத்திலிருந்து அவர்களுடைய ஹஜ் கடமையை நிறைவேற்றுவது பிள்ளைகளின் மீது கடமையாகும்.


ஆசை மட்டும் போதாது, சக்தியும் வேண்டும்.  

ஹஜ்ஜில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விசயம்
எல்லோருக்கும் ஹஜ் செய்ய ஆசை இருக்கிறது. அல்லாஹ் நம் அனைவருக்கும் வாழ்வில் பல முறை அந்த பாக்கியத்தை வழங்கட்டும்.  

ஆனால் இந்த சட்ட விதிகளை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்.  


ஹஜ் கடமையாவதற்கு ஐந்து நிபந்தனைகள் உண்டு
1.       இஸ்லாம்
2.       அறிவு
3.       வய்து
4.       சுதந்திரம்
5.       சக்தி

சக்தி பெறுதல் என்பதில் ஹலாலான பண வசதி, உடல் சவுகரியம் ,பாதுகாப்பான பயணம், பெண்களுக்கு மஹ்ரமான ஆண் துணை ஆகியவை அடங்கும்.

·         ஹராமான காசில் ஹஜ்ஜு செய்வது ஹராமாகும்
·         பெற்றோரின் அனுமதியின்றி – கடன் கொடுத்தவரின் அனுமதியின்றி ஹஜ்ஜு செய்வது மக்ரூஹ் ஆகும்

பிறரிடம் இருந்து உதவி பெற்று அல்லது கடன் பெற்று ஹஜ்ஜு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
வேலூர் பாக்கியாதுஸ்ஸாலிஹாத் அரபுக்கல்லூரின் முன்னாள் முதல்வரும் இந்தியா கண்ட மகத்தான சட்ட அறிஞருமானா அல்லாமா ஷேக் ஆதம் ஹஜ்ரத் (ரஹ்) அவர்கள் பெரிய அரபுக்கல்லூரியின் முதல்வராக இருந்த போதும் கூட ஹஜ் செய்திருக்க வில்லை, பல செல்வந்தர்கள் ஹஜ்ரத்தை அணுகி நாங்கள் ஏற்பாடு செய்கிறோம், ஹஜ்ஜுக்கு சென்று வாருங்கள் என்று கூறுவார்கள். அப்போதெல்லாம் ஹஜ்ரத் அவர்கள் என் மீது ஹஜ் கடமை இல்லை என்று கூறிவிடுவார்கள். ஹஜ்ரத்தின் 90 வது வயதில் அவரது வீட்டை விற்ற பணம் கைக்கு வந்த போது மகனுடன் ஹஜ்ஜு செய்தார்கள். அடுத்த வருடம் வபாத்தாகி விட்டார்கள்.
ஹஜ் செய்ய முடியாத நிலையில் இருக்கிற எவரும் தம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்ள இதை விடச் சிறந்த உதாரணம் தேவையில்லை.
இன்னொருவருடைய உதவியால் ஹஜ்ஜு செய்ய தேவை இல்லை என்கிற போது அரசு வழங்குகிற மானியத்தால் ஹஜ்ஜு செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது?
அதனால் கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய அரசு ஹஜ் மானியத்தை இரத்து செய்வதாக திடீரென அறிவித்த போது ஏராளமான முஸ்லிம்கள் அதை வரவேற்று அறிவித்துள்ளனர்.  
அந்த வரவேற்பு எதார்த்தமானது ஏனெனில் ஹஜ்ஜுக்கு இன்னொருவருடைய உதவி தேவை இல்லை. அது மட்டுமல்ல அரசு வழங்குகிற உதவி ஏர் இந்தியா விமானம் ஜித்தாவுக்கான கட்டணத்தை அதிகப்படுத்தி விடுவதால் அதை ஈடுகட்டவே அந்தப் பணம் பயன்பட்டது. எனவெ இந்த மானியக் குறைப்பால் நமக்கு ஒரு நட்டமும் இல்லை. என்பதுதான் இந்த இரத்து அறிவிக்கையை அங்கீகரித்தவர்களின் வாதமாகும்.
ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கை எதார்த்தமானது அல்ல என்பதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது.
இது இந்துத்துவ சக்திகளின் தொடர் கோரிக்கைகளில் ஒன்றாக இருந்து வந்த நிலையில் இந்த திடீர் நடவடிக்கை மத்திய அரசின் நீதியயற்ற இந்துத்துவப் போக்கின் ஒரு அம்சமாக நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை கூறியிருப்பது போல இது அரசாங்கத்தின் ஒரு பாரபட்டசமான நடவடிக்கை ஆகும்.
கடந்த சில மாதங்களில் முஸ்லிம் சமூகத்தின் மீது மத்திய அரசு தொடுத்து வருகிற பகிரங்க தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.
ஹஜ் மானியம் குறித்த வரலாற்றை நாம் அறிந்து கொள்ளும் போது தான் இந்த உண்மை புரியவரும்.

1932ஆம் ஆண்டிலிருந்து நம்முடைய நாட்டில் ஹஜ் பயணத்திற்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. பிற மதத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்ததன் தொடர்ச்சியாகவே இம்மானியம் வழங்கப்பட்டது. ஹஜ்ஜுக்கான ஏற்பாடுகளை செய்வதில் இம்மானியம் பயன்பட்டது.  

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1959ல் இதற்கான சட்டம் திருத்தப்பட்டு, மத ரீதியான கடமைகளுக்காக சௌதி அரேபியா, சிரியா, ஜோர்டன், இரான், இராக் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு மானியம் அளிக்கும் சட்டம்  கொண்டுவரப்பட்டது.

1973ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஹஜ் பயணிகள் பயணம் செய்த கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதில் 39 பேர் இறந்துவிடவே, கப்பல் பயணத்தை ரத்துசெய்த இந்திய அரசு, விமானம் மூலம் மட்டுமே பயணம் செய்ய அனுமதித்தது. அதற்கேற்ற வகையில் மானியத் தொகை அதிகரிக்கப்பட்டது.

இந்துத்துவ சக்திகள் குறிப்பாக பாஜக கட்சி இந்த மானியத்தை இரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன. ஒரு மதத்தவருக்கு மட்டும் இத்தகைய சலுகை வழங்குவது அரசியல் சாசணத்திற்கு எதிரானது என்று வாயாடி நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தன.

2011 ல் மாண்புமிகு நீதிபதிகள் ஜஸ்டிஸ் மார்க்கண்டே கட்ஜு, ஜியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற ஹஜ்ஜுக்கு மானியம் வழங்கப்படுவது சட்ட பூர்வமானதுத்தான் என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது
இதே வழக்கு மேல் முறையீட்டுக்கு சென்ற போது 2012 ம் ஆண்டு மாண்புமிகு நீதிபதிகள் ஆப்தாப் ஆலம் ரஞ்சனா பிரகாஸ் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முந்தைய நீதிபதிகளின் தீர்ப்பை கவனத்தில் கொள்வதாக கூறி விட்டு நாட்டில் மற்ற பல மத நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தின் பணம் செலவழிக்கப்படுவதை கவனிக்கும் போது ஹஜ் மானியம் அரசியல் சாசனப் பூர்வமானதுதான் என்று கூறியது.
எனினும் இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான ஆப்தாப் ஆலம் தனது அதிகார வரமபை மீறி ஒரு தீர்ப்பை கூறீனார்
ஹஜ் மானியம் சட்டபூர்வமானது என்றாலும் முஸ்லிம்கள் மானியம் பெற்று ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும் என்று குர் ஆன் கூறவில்லை. எனவே அரசு வழங்கும் மானியத் தொகையை அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அதாவது 2022க் குள் படிப்படியாக மானியத்தை நிறுத்திவிடுமாறு கூறினார்.
மானம் மிக்க இந்த நீதிபதி மற்ற மத விவகாரங்களுக்கு அரசு செலவிடும் கணக்கற்ற மானியத் தொகை சம்பந்தமாக எதையும் கூற வில்லை.
இந்த உத்தரவின் காரணமாக 2012ஆம் ஆண்டில் சுமார் 836 கோடி ரூபாய் அளவுக்கு இருந்த படிப்படியாக சுமார் 400 கோடியாக குறைக்கப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டில் மானியம் பெற்று 1.25 லட்சம் பேர் ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட போது அது சுமார் 200 கோடி அளவுக்கு குறைந்தது.  

உச்ச நீதிமன்றம்  10 வருடத்தில் சன்னம் சன்னமாக குறைக்கச் சொன்ன மானியத்தை தான் 6 வருடங்களுக்குள்ளாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் கிடையாது.

மானியம் வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு அது நீதிமன்றத்தின் வரம்புகளுக்கு உட்பட்டதல்ல. அரசின் ஒரு கொள்கை சட்டபூர்வமானதாக வரையறைகளை தாண்டாததாக இருக்கிற போது அதில் தலையிட வேண்டிய தேவை எதுவும் நீதிமன்றத்திற்கு கிடையாது. அதையும் மீறி நீதிபதி ஆப்தாப் தலையிட்டார். மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புக்களை இது அரசின் கொள்கை முடிவு என்று கூறி நிராகரித்துள்ளது.

ஆனால் ஹஜ் மானியம் விசயத்தில் அரசு எல் கே ஜி மாணவன் ஆசிரியர் உத்தரவுக்கு உடன்பட்டது போல கட்டுப்பட்டதாக காட்டிக் கொள்கிறது. இது அப்பட்டமான வஞ்சனையாகும்.

மத்திய அரசு அடிப்படை மனிதாபிமான உணர்வுகளுக்கு எதிராக மிருக பலத்தில் மிருகமாக செயல்படுகிறது என்பதற்கான ஒரு அடையாளாமாகும் இது.

மானியம் இரத்து அறிவிப்பை வெளியிட்ட மத்திய சிறுபான்மைத் துறை அமைச்சரின் அறிக்கை இந்திய சிறுபான்மையின முஸ்லிம்களை மனக் கொதிப்புள்ளாக்கும் ஒரு அறிக்கையாகும்

முக்தார் அப்பாஸ் போன்ற கேவலாமான மனிதர்களால் தான் இப்படி பேச முடியும்.

முஸ்லிம்களின் தன்மானத்தை பாதுகாக்கவே இந்த மானியம் இரத்து செய்யப் பட்டதாக கூறுகிறார். அதுதான் அரசின் கொள்கை என்கிறார்.

Naqvi was also add that this withdrawal of the subsidy “is part of our policy to empower minorities with dignity and without appeasement”.

இதை விட அப்பட்டமான அயோக்கியத்தனம் வேற்ன்ன இருக்க முடியும்.

மானியம் வழங்குவது மரியாதையை குறைக்கிறது என்றால் மற்ற மதங்களுக்கும், மற்ற விவகாரங்களுக்கு மானியம் வழங்கப்படுவது மரியாதையை குறைக்கும் செயலா ? இவரைப் போன்ற அமைச்சர்களுக்கு அற்பத்தனமாகன காரியங்களுக்கு வழங்கப்படுகிற கோடிக்கணக்கான ரூபாய்களை கூச்சமின்றி பெற்றுக் கொள்கிற இவர்கள் கண்ணியம் அற்றவர்கள் என்று அரசு ஒப்புக் கொள்ளுமா ?  (எம் எல் ஏ க்களின் தொலை பேசி செலவு 7500 என மாநில அரசு வழங்குகிறது. ஜியோ 400 ரூபாயில் அன்லிமிடட் செலுகை வழங்கிருக்கிற நிலையில்)

முஸ்லிம்களின் ஹஜ்ஜுக்கு அரசு வழங்கி வந்த மானியம் மிக ச்சிறிய தொகை
நாட்டில் நடை பெருகிற மற்ற மதப்பண்டிகளுக்கு மலைக்கச் செய்யும் அளவுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

கும்பமேளாக்களுக்கு பல ஆயிரம் கோடி

மத்திய அரசு ஹரித்துவார் அலகாபாத் நாஸிக் உஜ்ஜையின் ஆகிய நான்கு இடங்களில் நடைபெறும் கும்பமேளாவிற்கு பல ஆயிரம் கோடிகளை செலவழிக்கிறது. துல்லியமாக கணக்கு கிடையாது. 2014 ல் அலகாபாத்தில் நடை பெற்ற கும்பமேளாவிற்கு ஆயிரத்து நூற்று ஐம்பது கோடி ரூபாய் செலவழித்துள்ளது. மஹாரஷ்டிரா அரசு நாஸிக்கில் நடை பெறும் கும்ப மேளாவிற்கு மாநில நிதியாக 2500 கோடியை ஒதுக்கியது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உஜ்ஜையினில் நடைபெறுகிற சிம்ஹஸ்த் மஹா கும்பமேளாவுக்கு மத்திய கலாச்சார அமைச்சரகம் மத்திய பிரதேச மாநில அரசுக்கு 100 கோடி கொடுக்கிறது. சிவரராஜ் சிங்க் சவுகான் தலைமையிலான மாநில பிஜேபி அரசு இதற்காக 2016 ல் 3400 கோடி செலவழித்திருக்கிறது. ஆனால் அது ஐயாயிரம் கோடி வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அமர்நாத் ஹரித்வார் மானசரோவர் யாத்திரைகள்

இமயமலை வழியாக திபேத்திற்கு செல்லும் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக மிக கனிசமான தொகையை மத்திய அரசு செலவிடுகிறது

உத்தர பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ இருந்த போது கைலாஷ் மானசரேவர் யாத்திரை செல்பவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அளிக்கப் பட்டு வந்தது. ஆதித்யநாத் அரசு அதை ஒரு இலட்சமாக உயர்த்தி யுள்ளது.
லடாக்கில் இருக்கிற சந்து தர்ஷன் செல்பவர்களுக்காக ஆளுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. சத்தீஸ்கர் டெல்லி குஜராத் கர்நாடகா மத்திய பிரதேசம் உத்ராகண்ட ஆகிய மாநிலங்களும் இதே போல் கைலாஷ் மானசரேவர் யாத்திரைக்கு கனிசமாக உதவுகின்றனர்.
ஆந்திரா அரசு கோதாவரி புஷ்கரம் நிகழ்ச்சிக்கு பல கோடிகளை செலவழிக்கிறது.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் திருத்தல் யாத்திரைத் திட்டத்தில் பல இடங்களுக்கு செல்பவர்களுக்கு ஏராளமாக மானியத் தொகை வழங்குகிறது.
ஜம்மு காஷ்மீர் அரசு அமர்நாத் சிரீன் போர்டுடன் இணைந்து அமர்நாத் யாத்திரைக்கு பல நூறு கோடிகளை செலவிடுகிறது.
உத்ரகாண்ட் அரசு கன்வர் யாத்திரைக்காக கனிசமாக செலவிடுகிறது,  
ஹரியானா அரசு குருசேத்திரத்தில் நடை பெறூகிற கீதா பண்டிகைக்காக 100 கோடியை வழங்குகிறது.
பூஜைகளுக்குப் பிறகு குளங்களை சுத்தப்படுத்த ஏராளமான தொகை
நவராத்திரி, விநாயக சதுர்த்தி சத்து பூஜா ஆகிய பண்டிகைகாலங்களில் குளங்கள் நீர்நிலைகளை சுத்தப்படுத்துவதற்காக அரசு கனிசமான தொகைகளை செலவிடுகிறது.
இவை பெரும்பான்மை சமுதயமான இந்துக்களின் மரியாதையை பாதிப்பதில்லையா ?  அவர்களுடைய கவுரவத்திற்கு இழுக்கு அல்லவா ?
மத்திய அரசு ஹஜ் மானியத்தை நிறுத்திக் கொள்ளும் பட்சத்தில் இவற்றையும் நிறுத்த வேண்டும் .
மக்களின் வரிப்பணம் ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் மதச்சடங்குகளுக்காக செலவிடக் கூடாது என அரசியல் சாசனத்தின் 27 வது பிரிவு கூறுகிறது என்று வாதிட்ட பாஜக கட்சி கோடிகளை கபளீகரம் செய்கிற இந்தச் சடங்குகள் விவகாரத்தில் கவனம் செலுத்துமா ?
இந்துச் சமூகத்தில் தாழ்த்தப் பட்ட மக்களின் மேம்பாடு விதவைகளின் வாழ்வுரிமை சீரழிக்கப்படுகிறா மலை வாழ் மக்களின் வாழ்க்கை மேம்பாடு ஆகிய இன்னும் ஏராளமான காரியங்களுக்கு இவற்றை பயன்படுத்தலாமே!
எனவே அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு உண்மையில் முஸ்லிம்களின் உரிமையில் தொடர்ந்து கைக்கிற இந்துத்துவ திட்டங்களில் ஒன்றாகவே கருதப் பட வேண்டும்.
மாநில ஜமாஅத்துல் உலமா அரசின் இந்த அறிவிப்பை வன்மையாக கண்டித்திருக்கீறது. அரசு தொடர்ந்து முஸ்லிம்களை பதற்றத்திற்குள்ளாக்க முயற்சிப்பதை ஜமாத்துல் உலமாவுடன் சேர்ந்து நாமும் கண்டிக்கிறோம்.
அத்தோடு மாற்றுத்திறனாளிகளுக்கு இனி அனுமதி கிடயாது என்ற அரசின் சட்டத்தை வாபெஸ் பெறுவதோடு மாற்றுத்திறனாளிகளோடு உதவியாளர் ஒருவருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஜமாத்துல் உலமா அரசை கேட்டுக் கொண்டுள்ளது. நம்முடைய குரலையும் அத்தோடு இணைத்துக் கொள்கிறோம்.
முஸ்லிம்களை குறிவைக்கும் தீய எண்ணத்தை மாற்றிக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
மத்திய அரசு தனது உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தற்காக மாநில அரசுக்கும். அரசின் திட்டத்தை கண்டித்த காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் நாம் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பாஜக அரசின் நடவடிக்கைகளை வெறும் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று மட்டும் பார்க்காமல் தேசத்திற்கு எதிரானது என்று பார்க்குமாறு ஜனநாயகத்தில் அக்கறை கொண்ட அனைத்து அரசியல் சக்திகளையும் கேட்டுக் கொள்கிறோம்.
அல்லாஹ் நல்லது நடக்க கிருபை செய்வானாக!   
 (இங்கு குறிப்பிட்டுள்ள பல தகவல்களும் https://thewire.in ஆங்கில இணய இதழின் தகவல் தளத்திலிருந்து எடுக்கப் பட்டவைகளாகும்.)








No comments:

Post a Comment