வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 07, 2017

டிரம்பின் தீவிர வாதம்

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنْ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّه هُوَ السَّمِيعُ الْبَصِيرُ

அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பெயர் விரும்பி. அவர்  திடீரென தேவையற்ற ஒரு பொறியை பற்ற வைத்துள்ளார்.

ஜெரூசலம் நகரை இஸ்ரேலின் தலை நகராக அங்கீகரிக்கப் போவதாகவும், அமரிக்க தூதரகத்தை தற்போதை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெரூசலத்திற்கு இடம் பெயரச் செய்யும் ஏற்பாடுகளை கவனிக்குமாறு அரசுத்துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

ஜெரூசலம் முஸ்லிம்களின் பெருந்தன்மைக்கும் மனிதாபிமானத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழும் நகரம். இப்போது அதை வைத்தே முஸ்லிம் உலகை பதட்டத்திற்கு உள்ளாக்கும் வேலையை அமெரிக்க இஸ்ரேலுடன் சேர்ந்து செய்து கொண்டிருக்கிறது.  

அன்றாடம் மிக மோசமான சித்தரவதை சூழலில், எந்த வித உரிமைகளும் அற்றவர்களாக, உலகின் மிகப் பெரிய திறந்த வெளிச் சிறைச்சாலையில் வாழ்வுக்கு சாவுக்கும் இடையே தினசரி போராடிக் கொண்டிருக்கிற பாலஸ்தீன மக்களுக்கு மிகப் பெரும் அநீதியை வெளிப்படையாக டிரம்ப் செய்துள்ளார்.

இனி வரும் காலங்களில் பாலஸ்தீன் மக்களின் வாழ்வு மேலும் சிக்கலாகி விடக் கூடாது என்பதே நம்முடைய முதல் பிரார்த்தனையாகும்.

பாலஸ்தீனில் நீதியற்ற முறையில் ஆக்ரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டை அல்லாஹ் இல்லாது ஆக்குவானாக. முழு பாலஸ்தீனமும் சுதந்திரம் பெற்று பழையபடி முஸ்லிம்களின் கட்டுப் பாட்டிற்குள் வருவதற்கு அல்லாஹ் சீக்கிரமே வழி செய்வானாக! 

இதற்கு காரணம் டிரம்ப் மற்றும் அவர்களுடை சகாக்களின். கிருத்துவ வெறியுணர்வே யாகும்.

பாலஸ்தீனில் கை வைப்பது உலகில் வாழும் 150 கோடி முஸ்லிம்களின் இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சுவதற்கு சமானமாகும்.
டிரம்ப் ஒரு பெரிய நாட்டின் அதிபர் என்ற தகுதியை தவறவிட்டு மிக கீழ்த்தரமான ஒரு திட்டத்தில் இறங்கியுள்ளார்.

முஸ்லிம்கள் இன்றைய பரிதாபச் சூழல் நம்மை என்ன செய்து விடும் என்ற மனோ தைரியத்தை அவருக்கு தந்திருக்கலாம்.

ஆனால் வல்லைமை மிக்க அல்லாஹ் சதிகாரர்களை மிக திறமையாக எதிர் கொள்ளும் மிகப் பெரும் சதிகாரன்.

அல்லாஹ் இந்தச் சதியிலிருந்தும் பாலஸ்தீன மக்களை, முஸ்லிம் உலகை அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஜெரூசலம் முஸ்லிம்களின் புனித பூமியாகும்.

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنْ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّه هُوَ السَّمِيعُ الْبَصِيرُ

இந்த வசனம் முஸ்லிம்களுக்கு மிஃராஜின் வரலாற்றை மட்டும் எடுத்துச் சொல்வதில்லை

மஸ்ஜிதுல் ஹராமிற்கும் பைத்துல் முகத்தஸிற்கும் இடையே உள்ள நுட்பமான தொடர்பையும் புலப்படுத்துகிறது. மஸ்ஜிதுல் அக்ஸாவின் பரக்கத்தை பாதுகாக்கும் பொறுப்பும் முஸ்லிம்களுக்கு இருக்கிறது என்பதையும் சேர்த்தே சொல்கிறது என திருக்குர் ஆனிய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


الَّذِي بَارَكْنَا حَوْلَهُ
பைத்துல் முகத்தஸின் சுற்று புரம் என்பது அன்றைய பழை சிரியா முழுவதையும் குறிக்கும் என்கின்றனர் முபஸ்ஸிர்கள்.

أن البركة تشمل بلاد الشام بأكملها. قال زهير بن محمد التميمي: «إن الله تبارك و تعالى، بارك ما بين العريش و الفرات و فلسطين، و خَصّ فلسطين بالتقديس

இந்த பரக்கத் என்ன வகையானது என்பதற்கு முபஸ்ஸிர்களின் தீர்க்கமான விளக்கம், ஏரளமான நபிமார்கள் இங்கு அனுப்பப் பட்டுள்ளதே என்கின்றனர்.

و هي بلاد نبوات و رسالات، و هي مباركة بركة إيمانية قديمة و معاصرة و مستقبلية. فتاريخها الأصيل هو تاريخ للإسلام و الإيمان و العبودية لله، 

அந்த நபித்துவத்தின் ஜோதியை தொடர்ந்து எடுத்துச் செல்லும் பணிக்குப் பொறுப்பேற்றுள்ள முஸ்லிம் சமுதாயம் பைத்துல் முகத்திஸின் நலனிலும் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பைத்துல் முகத்தஸ் விசயத்தில் எதிரிகளின் சதித்திட்டங்கள் , குறும்புத்தனங்களில் மிக எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கைய்யும் இந்த வசனம் தருகிறது. யார் பைத்துல் முகத்தஸில் கை வைக்கிறார்களோ அவர்களது அடுத்த திட்டம் மஸ்ஜிதுல் ஹரமாகவும் மஸ்ஜிதுன் னபவியாகவும் இருக்கும். நபித்துவத்தின் ஜோதியை அழிக்கும் முயற்சியாகவும் இருக்கும் என முஸ்லிம் அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள்.

சிலுவை யுத்த காலங்களில் ஜெரூசலமை கைப்பற்றிய மன்னர் அர்னாத் அதை தொடர்ந்து ஹிஜாஸை கைப்பற்ற திட்டமிட்டார். நூருத்தீன் ஜன்கீ. சலாஹுத்தீன் அய்யூபி போன்ற பெருமக்களால் அந்த திட்டம் தகர்க்கப் பட்டது என்கின்றனர்.

. تحذير المسلمين من المؤامرات المعادية ضد المسلمين ، و من أطماع الأعداء الكافرين في المسلمين ، و أن الخطر الذي يتهدد المسجد الأقصى، هو الخطر الذي يتهدد المسجد الحرام. فلما أخذ الصليبيون الأقصى و ما حوله، و استقرو فيه، توجهت أنظارهم و برامجهم و مطامعهم نحو المسجد النبوي في المدينة المنورة، و المسجد الحرام في مكة المكرمة،

فقام " أرناط -ملك الكرك الصليبي- بعدة محاولات لاحتلال بلاد الحجاز، كادت تنجح لولا أن الله هيأ لهذه الأمة نور الدين الزنكي و صلاح الدين الأيوبي.

இந்தப் பழைய எச்சரிக்கை சாமாணியமானதல்ல. இன்று வரை தொடர்கிறது.

1967ல் ஜெரூசலத்தை கைப்பற்றிய பென்குரியன் (தாவூத் பின் கூரியன்) ஜெரூசலத்தை கைப்பற்றிய பிறகு கூறிய வார்த்தையும் கவனிக்கத் தக்கதாகும்.

لقد وقف دافيد بن غوريون زعيم اليهود، بعد دخول الجيش اليهودي القدس، يستعرض جنوداً وشباباً من اليهود، بالقرب من المسجد الأقصى، ويلقي فيهم خطاباً نارياً، يختتمه بقوله: لقد استولينا على القدس ونحن في طريقنا إلى يثرب.

டொனால்ட் டிரம்பின் தற்போதைய அறிவிப்பு ஜெரூசலம் பாலஸ்தீனம் சிரியா விவகாரங்களில் முஸ்லிம்களின் தொடர்ந்து ஆழ்ந்த  கவனிப்பையும் அக்கறையையும் செலுத்த வேண்டும் என்பதை புலப்படுத்துகிறது.

இது விசயத்தில் முஸ்லிம்கள் அலட்சியமாக அல்லது தைரியமற்றவர்களாக இருப்பது பெரும் ஆபத்தாக முடியக் கூடும்.

அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ் பாதுகாப்பான்.

டிரம்பை விட கொடுமைக்காரர்களை முஸ்லிம் உலகம் சந்தித்திருக்கிறது.

சிலுவை யுத்தக் காரர்கள் பைத்துல் முகத்தஸைக் கைப்பற்றிய போது  மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில் இருந்த குப்பத்துஸ் ஸஹ்ரா என்ற உமர் ரலி பெயரிலான் பள்ளிவாசலின் முற்றத்தில் முஸ்லிம்களை ஏரளாமாக கொன்று குவித்தார்கள். இதன் காரணமாக அந்த வளாகத்தில் முழுங்கால் அளவுக்கு இரத்தம் தேங்கி நின்றது என்று வரலாறு சொல்கிறது.

சூழ்நிலை இவ்வளவு கடுமையாக இருந்த போதும் கூட அல்லாஹ் முஸ்லிம்களுக்கு உதவி செய்தான்.

அவர்களின் எண்ணம் சுத்தமானதாக தீர்க்கமானதாக தைரியம் மிக்கதாக அல்லாஹ்வின் வழியிலானதாக இருந்தால் போதுமானது.

சலாஹுத்தீன் அய்யூபி , அப்போதையை இஸ்லாமிய கிலாபத்தின் தலைமை அதிகாரத்தில் இருந்தவர் அல்ல. எகிப்தின் ஒரு சிறுபகுதியின் சிற்றரசாராக இருந்தவர் . பைத்துல் முகத்தஸை மீட்டு முஸ்லிம்களுக்கு ஒரு அமைதியான வாழ்வை தர வேண்டும் என்று எண்ணினார், அவரின் சிறிய கைகளுக்கு அல்லாஹ் மகத்தான வலிமையை தந்தான். மிகச் சிறிய எண்ணிக்கையிலான படைவீரர்களை கொண்டே அவர் ஜெரூசலத்தை 90 ஆண்டு கால ஆக்ரமிப்பிற்கு பிறகு 1184 ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி  ஹித்தீன் என்ற இடத்தில் நடை பெற்ற யுத்தததில் மீட்டுக் கொடுத்தார்

அன்றும் முஸ்லிம்களின் நிலை இன்றைக்கு இருப்பது போல பரிதாபகரமானதாகத் தான் இருந்த்ந்து.

அல்லாஹ் சக்தி மிக்கவன். சதிகாரர்களை எதிர் கொள்ளும் மிகச்சிறந்த சதிகாரன் .


مسجد بيت المقدس ، وقيل لهالأقصى ، لأنه أبعد المساجد التي تزار
நாம் இன்றைய உலகிற்கு குறிப்பக டெனால்ட் டிரம்ப் உள்ளிட்ட கிருட்த்துவ வெறியர்களுக்கும் இஸ்ரேலியப் பிரதமர் பென்ச்ஞமின் நெதன்யாகு உள்ளிட்ட யூத ஆக்ரமிப்பாளர்களுக்கும்  ஞாபகப்படுத்த விரும்புவது.

முஸ்லிம்கள் ஜெரூசலத்தை கைப்பற்றிய போது எத்தகைய பெருந் தன்மையோடு நடந்து கொண்டார்கள் என்பதை அவர்கள் மறந்து விடக் கூடாது என்பதாகும்.

இந்தச் செய்திகள் வெறும் முஸ்லிம் எழுத்தாளர்களின் கதைகளல்ல, உலகின் அத்தனை வரலற்றிசிரியர்களும் பதிவு செய்து வைத்திருக்கிற கலப்பட்ட சத்தியங்கள்.

உமர் ரலி அவர்கள் காலத்தில் அம்ருப்னு ஆஸ் ரலி , அபூஉபைதா ரலி ஆகிய இரு சஹாபாக்கள் பைத்துல் முகத்தை முற்றுகை இட்டிருந்தனர்.
ஜெரூசலத்தில் பாதிரிகள் அங்கிருந்த புகழ் பெற்ற கல்லறை தேவலாயத்திற்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டனர்.

நாட்டை வெற்றி கொண்டாலும் அதன் முந்தைய தலைமையை கைப்பற்றா விடில் அது வெற்றியாகதே

பாதிரிகளோடு படைத்தளபதிகள் பேசினார்கள் .

தலைமைப் பாதிரி صفرونيوس - Sophronius  சொபார்னியஸ் ஜனாபதி உமர் ரலி அவர்கள் வந்தால் தான் சரணடைவோம் என்று கூறினார்.

உலகையே வென்றெடுத்த இந்த இரு தளபதிகளும் நினைத்திருந்தால் அவர்களை நிமிட நேரத்தில் அழித்து பைத்துக் முகத்தஸை மீட்டிருக்க முடியும். அதற்கு வரலாற்றில் ஒரு கன நேரம் கூட பிடித்திருக்காது.

எனினும் பைத்துல் முகத்தஸை இரத்ததை தை ஒட்ட அவர்கள் விரும்ப வில்லை.

முஹம்மது ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் ஹரமிற்கு என்ன மரியாதையை கொடுத்தார்களோ அதே மரியாதையை மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு கொடுத்தார்கள்

கலீபா உமர் ரலு அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.

சாதாரணமாக இரண்டாம் கட்ட நிலையிலிருக்கிற படைத்தளபதிகள் இத்தகைய பொருமையையும் நிதானத்தையும் கடை பிடிக்க மாட்டார்கள், மிக முரட்டுத்தனமாகவே நடந்து கொள்வார்கள். ஒரு இஸ்லாமிய சமூகம் இப்படித்தான் நடந்து கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக அன்று அந்த தளபதிகள் நடந்து கொண்டார்கள்.

உமர் ரலி அவர்களுக்கு கடிதம் வந்து சேர்ந்த போது அங்கு அற்புதமான ஒரு ஆலோசனை நடை பெற்றது.

இந்தச் சிறு காரியத்திற்காக ஜனாதிபதி போகத்தேவையில்லை. நம்முடைய சாதாரண ஆட்கள் அவர்களை வென்று கைப்பற்றி ஜிஸீய்யாவை கட்ட வைத்து விடுவார்கள் என்றார் உஸ்மான் ரலி அவர்கள்.
இல்லை நீங்கள் செல்லுங்கள் . அல்லாஹ் உங்களது கரத்தில் அந்த நகரத்தின் வெற்றியை தருவான் என்றார்கள் ஹஜ்ரத் அலீ ரலி அவர்கள்,

உமர் ரலி அவர்கள் அதற்க்காக மதீனா நகரை விட்டு முதலும் முடிவுமாக ஒரே தடவையாக ஜெரூசலத்தை நோக்கி பயண்மானார்கள்,

வரலாறே வியந்தோதும் பயணம் அது. 

ஒரே ஒரு ஒட்டகையும் ஒரு பணியாளருமாக ஒரு மக்கள் தலைவர் நாடு பிடிக்க போன வரலாற்றை யாரேனும் கேட்டதுண்டா ?

டிரம்ப் போன்ற அநாகரீகத்திற்கு பிறந்தவர்களுக்கு இந்த்ப் புனிதம் எங்கே புரியப் போகிறது.

உமர் ரலி அவர்கள் பைத்துல் முகத்தஸைப் பெற்றுக் கொண்டார்கள். அவ்வளவு அற்புதமான ஒப்படைப்பு அது.

பாதிரிகளுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்கினார்கள். உரிமைகளுக்கு உத்தரவாதம் தந்தார்கள். அவர்களது புனிதங்கள் மதிக்கப்படும் என்று ஆறுதல் கொடுத்தார்கள்.

في عهد عمر بن الخطاب والفتوحات الإسلامية، أًرسل عمرو بن العاص وأبو عبيدة بن الجراح لفتح فلسطين عامة ونشر الدعوة الإسلامية فيها لكن القدس عصيت عليهم ولم يتمكنوا من فتحها لمناعة أسوارها، حيث اعتصم أهلها داخل الأسوار. وعندما طال حصار المسلمين لها، طلب رئيس البطاركة والأساقفة، المدعو "صفرونيوس"، طلب منهم أن لا يسلم القدس إلا للخليفة عمر بن الخطاب بشخصه. فأرسل عمرو بن العاص يخبر عمر في المدينة بما طلبه صفرونيوس رئيس الأساقفة المسيحيين في القدس فاستشار الخليفة عمر بن الخطاب أصحابه فكان أول من تكلم عثمان بن عفان فقال: "أقم ولا تسر إليهم فإذا رأوا أنك بأمرهم مستخفن ولقتالهم مستحقر فلا يلبثون إلا اليسير حتى ينزلوا على الصغار ويعطوا الجزية". وقال علي بن أبي طالب: "إني أرى أنك إن سرت إليهم فتح الله هذه المدينة على يديك وكان في مسيرك الأجر العظيم". ففرح عمر بن الخطاب بمشورة علي فقال: "لقد أحسن عثمان النظر في المكيدة للعدو وأحسن علي المشورة للمسلمين فجزاهما الله خيراً ولست آخذاً إلا بمشورة علي فما عرفناه إلا محمود المشورة ميمون الغرة"

فقصد عمر بن الخطاب وخادمه ومعهما ناقة إلى بيت المقدس في رحلة شاقة. وما أن وصلا مشارف القدس حتى أطل عليهما صفرونيوس والبطاركة وسألوا من هذين الرجلين فقال المسلمون إنه عمر بن الخطاب وخادمه، فسأل أيهما عمر فقيل ذاك الواقف على قدميه إذ كان خادمه ممتطيا الناقة فذهلوا بهذا لانه مذكور في كتبهم، فكان الفتح العمري لبيت المقدس. كتب عمر مع المسيحيين وثيقةً عُرفت باسم "العهدة العمرية" وهي وثيقة منحتهم الحرية الدينية مقابل الجزية، وتعهد بالحفاظ على ممتلكاتهم ومقدساتهم،

இவற்றுக் கெல்லாம் பிறகு நடந்தது. ஒரு பேரற்புதம்

அங்கிருந்த திருக்கல்லறைத் தேவலாயத்தில் அசர் தொழுவதற்கு பாதிரி வேண்டிக் கொண்ட பிற்கும் உமர் ரலி அங்கு தொழவில்லை.

 وعرض صفرونيوس على عمر بن الخطاب أن يؤدي الصلاة في كنيسة القيامة بعد أن حان موعدها أثناء زيارته لها، فخرج من الكنيسة وصلى على مبعدة منها وعاد. ولمّا سأله البطريرك صفرونيوس عن السبب أجابه أنه يخاف من أن يتخذ المسلمون من فعله ذريعة فيما بعد للسيطرة على الكنيسة فيقولون من بعده "ها هنا صلّى عمر" وبالتالي يحولون الكنيسة إلى مسجد للمسلمين.[

உமர் ரலி அவர்களின் அருமை பெருமைக்கும் மற்று மொரு சாட்சி

கிருத்துவர்கள் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலை மதித்திருக்க வில்லை. அது யூதர்களுடையது என்ற வெறுப்பு அவர்களிடமிருந்தது. அதை சீரழிய விட்டார்கள். அது எங்கே என்று கண்டு பிடிப்பது கூட சிரமமாக இருந்து.

ஜெரூசலத்தை வெற்றி கொண்ட பிறகு  உமர் ரலி அவர்கள் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல் எங்கே என்று தேடினார்கள்.  பாதிரியார் சொபார்னியஸிடமும் கேட்டார்கள். பிறகு அவர்களே  அற்புதமாக அதை அடையாளம் கண்டு கொண்டார்கள். பைத்துல் முகத்தஸை புணர் நிர்மாணம் செய்ய உத்தரவிட்டார்கள்.
قام عمر بن الخطاب بعد فتح المدينة بالبحث عن مكان المسجد الأقصى المذكور في القرآن والصخرة المقدسة واضعًا نصب عينيه الرواية التي سمعها من محمد ليلة الإسراء، وسأل الصحابة وكعب الأحبار،] وهو من اليهود الذين أسلموا، والبطريرك صفرنيوس، وكان عمر بن الخطاب يراجع المرافقين له حين يدلونه على مكان لا يجد أوصافه تنطبق على ما لديه قائلاً: "لقد وصف لي رسول الله صلّى الله عليه وسلم المسجد بصفة ما هي عليه هذه". وقد عثر الخليفة على مكان المسجد الأقصى والصخرة المقدسة في وقت قصير، وكان المكان مطموراً بالأتربة التي تكاد تخفي معالمه. وأمر عمر بن الخطاب بإقامة مسجد موضع المسجد الأول، وإقامة ظلة من الخشب فوق الصخرة المقدسة
ஆதாரம்.)المسجد الأقصى عبر التاريخ -تأسيسه وبنائه ومكانته في الإسلام والاعتداءات التي تعرض لها(

அது மட்டுமல்ல அந்த கால கட்டத்தில் யூதர்கள் ஜெரூசலத்தில் நிம்மதியாக வாழ் அனுமதிக்கப்பட வில்லை. ஆனால் முஸ்லிம்கள் யூதர்களுக்கு ஜெரூசலம் திரும்பி வந்து நிம்மதியாக தங்கிக் கொள்ள அனுமதியளித்தார்கள் .
கேம்பிரிட் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள வரலாறு சொல்வதைக் கேளுங்கள்

A History of Palestine, 634–1099. Cambridge University Press. 70–71.

 سمح المسلمون لليهود بالرجوع للسكن في المدينة بعد فتحها، وطبقوا عليهم ما طبقوه على المسيحيين من حماية لمقدساتهم مقابل الجزية.[

இன்று ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் வஞ்சகமாக ஜெரூசலத்தை மூன்று மதத்தவர்களும் மதிக்கும் புனிதத்தலம் என்கின்றனர்.

ஆனால் அவர்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லட்டும் மூன்று மதத்தவர்களும் மதிக்கிற புனித தளத்திற்கு உரிய மரியாதையை கொடுத்தது யார் ?  அனைத்து மதத்தவர்களும் நிம்மதியாக ஜெரூசலத்தில் வாழ அனுமதித்தவர்கள் யார் ?



உமர் ரலி அவர்களின் தீட்சண்யம் எத்தகையது ?  பெருந்தன்மை எப்பேற்பட்டது ? அவர் நினைத்தது போலவே முஸ்லிம்கள் அவர் தொழு இடத்தில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினர்.

أقام المسلمون مسجدًا في الموقع الذي صلّى به عمر بن الخطاب، بالقرب من مدخل كنيسة القيامة اليوم، وكان يتسع لحوالي 3,000 مصل

அந்தப் பள்ளிவாசலின் மேல் புறத்தில் தங்க நிறத்திலான ஒரு குப்பாவை உமய்யா அரசர் அப்துல் மலிக் பின் மர்வான் கட்டினார். உமர் ரலி அவர்களின் பள்ளி உயர்ந்தோங்கி தெரிய வேண்டும் என்பதற்காக

. يقول المؤرخ من القرن العاشر، محمد بن أحمد شمس الدين المقدسي، أن عبد الملك بن مروان بنى قبة الصخرة وجعل منها ذهبية كي تطغى على قبب الكنائس المنتشرة في القدس، ولتصبح معلمًا بارزًا يلفت نظر الزائر أوّل ما يراها
ஜெரூசலம் நகரத்தை மேம்படுத்த முஸ்லிம் மன்னர்கள் பெரு முயற்சி எடுத்தனர். அதை சீரழித்தது யார் என்றால் ஆக்ரமிப்புச் சிந்தனை கொண்ட மற்ற மதத்தவர்களே!


 اهتم الأمويون والعباسيون بالمدينة فشهدت نهضة علمية في مختلف الميادين، لكن شهرتها سرعان ما تضعضعت بسبب عدم الاستقرار الذي شهدته الدولة العباسية وانقسامها إلى دويلات عديدة

அப்பாஸிய கிலாபத் பலவீனம் அடைந்திருந்த கால கட்டத்தில் ஐரோப்பியர்கள் மிக முரட்டுத்தனமான வழியில் சிலுவை யுத்தங்களின் போது கொள்ளைக் காரர்களையும் கொலல காரர்களையும் திருடர்களையும் அழைத்து வந்து ஜெரூசலத்தை கைப்பற்றினர், வரலாறு காணாத வன்முறையை அங்கு அரங்கேற்றினர்.

பாறைப் பள்ளி என்றழைக்கப்படும் உமர் ரலி பள்ளிவாசலின் முற்றம் முழுவதும் முழங்கால் அளவு முஸ்லிம்களின் இரத்தம் தேங்கியிருந்தது,

 انطلق الصليبيون في حملتهم الأولى سنة 1095 متوجهين إلى مدينة القدس، فوصلوها في سنة 1099 وضربوا الحصار عليها فسقطت في أيديهم بعد شهر من الحصار،
الصليبيون يدخلون القدس يوم 15 يوليو سنة 1099
 وقتل الصليبيون فور دخولهم القدس قرابة 70 ألفًا من المسلمين واليهود وانتهكوا مقدساتهم،[
( Hull، Michael D. (1999). "First Crusade: Siege of Jerusalem")
அல்லாஹ்வின் பெருங்கிருபையால் 90 வருடங்களுக்குப் பின் ஜெரூசலத்தை சலாஹுத்தீன் அய்யூபி மீட்டுக் கொடுத்தார்.
இன்று ஐரோப்பிய உலகம் ஒரு முஸ்லிம் மன்னரைப் பாராட்டும் என்றால் அது சலாஹுத்தீன் அய்யூபி தான். காரணம் சிலுவை யுத்தக் காரர்களிடம் அவர் அவ்வளவு பரிவோடும் மரியாதையோடும் நடந்து கொண்டார். அவர் ஜெரூசலத்திலிருந்து வெளியேற அனுமதித்தார். அதற்காக ஒரு சிறு கட்டணத்தத நிர்ணயத்தார். அந்தக் கட்டணத்தையும் அவரே தன்னுடை காசிலிருந்தும் தனது சகோதரர்களின் காசிலிருந்தும் நிறறவேற்றினார்.

1.   
 "Main Events in the History of Jerusalem"Jerusalem: The Endless Crusade. The CenturyOne Foundation
கூறுவதை கேளுங்கள்
استطاع صلاح الدين الأيوبياسترداد القدس من الصليبيين عام 1187 بعد معركة حطين، وعامل أهلها معاملة طيبة، وأزال الصليبعن قبة الصخرة، ودعا اليهود والمسلمين ليعودوا إلى المدينة، واهتم بعمارتها وتحصينها.[
அதன் பின்னரும் சிலுவை யுத்தக் காரர்கள் ஜெரூசலத்தை தாக்கி சீரழித்தனர். 11 ஆண்டுகள் கழித்து மன்னர் நஜ்முத்தீன் அய்யூப் 1244 ல் முஸ்லிம்களுக்கு நிரந்தரமாக மீட்டுக் கொடுத்தார் என்று வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்தார்கள்.
 ولكن الصليبيين نجحوا في السيطرة على المدينة بعد وفاة صلاح الدين ، وكانت القدس في هذه الفترة قد ضعف شأنها
 ظلت القدس بأيدي الصليبيين 11 عامًا إلى أن استردها نهائياً الملك الصالح نجم الدين أيوب عام    1244

ஆனால் காலத்தின் கோலம் துருக்கிய கிலாபத் வீழ்ந்த பிறகு உலக யுத்தங்களின் கால கட்டத்தில் ஜெரூசலம் பிரிட்டிஷ் காரர்களின் காலனி ஆனது.
ஐரோப்பிய அமெரிக்க சதிகாரர்களின் திட்டத்தால் 1948 ல் பாலஸ்தீனத்தை பிரித்து இஸ்ரேல் உருவாக்கப் பட்ட போது மேற்கு ஜெரூசலம் இஸ்ரேலுக்கு உரியதாக ஆக்கப் பட்டது.
எனினும் கிழக்கு ஜெரூசலமும் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலும் முஸ்லிம்களிடமே இருந்தது.
ஆனால் 1967 ல் அரபு இஸ்ரேல் யுத்தத்தில் அரபு நாடுகள் பரிதாபமாக தோற்றுப் போன போது கிழக்கு ஜெரூசலமை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. பைத்டுல் முகத்தஸும் அதன் ஆதிக்கத்தில் சென்றது.
கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேல் ஆக்ரமித்ததை உலக நாடுகள் ஏற்றூக் கொள்ள வில்லை. இன்றும் அந்தப் பகுதியை ஆகரமிக்கப் பட்ட பகுதி என்றே ஐநா அறிவித்து அங்கே யூத குடியேற்றங்கள் நடத்தப் படுவதை எதிர்த்து வருகிறது.

இது விச்யத்தில் சுமார் 45 மேற்பட்ட ஐ நா வின் கண்டனத் தீர்மாணத்தை இஸ்ரேல் திமிராக மீறிவருகிறது

ஆனால் இன்றும் இஸ்ரேலுக்கு ஐ நா அரங்கில் மதிப்பளிக்கப்படுகிறது.

இஸ்ரேல் தனது அநீதியா நடத்தையால் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன் மக்களை கொன்று குவித்தும் அவர்களது வீடுகளை தரை மட்டமாக்கியும் குழைந்தைகளை கூட துப்பாக்கி முனையில் குறிவைத்தும் வரலாறு காணாத அக்கிரமங்களை செய்து வருகிறது.

எத்தகைய செல்வாக்கை வெளிப்படுத்திய போதும் பாலஸ்தீன மக்களின் வீரம் சொறிந்த போரட்டங்கள் காரணமாக கிழக்கு ஜெரூசலத்தில் தனது அதிகாரத்தை முழுமையாக செயல் படுத்த இஸ்ரேலால் முடியவில்லை.

அது ஜெரூசலத்தை தலை நகராக கூறுவதை உலக நாடுகள் இதுவரை ஏற்கவில்லை. டெல் அவிவ் தான் இப்போதும் இஸ்ரேலின் அங்கீகரிக்கப்பட்ட தலை நகராக இருந்து வருகிறது.  

இந்தச் சூழலில் தான் ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலை நகராக தாங்கள் ஏற்கப்போவதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

இது சரியான வார்த்தைகளில் சொல்லப்பட வேண்டுமானால் டிரம்பின் தீவிரவாத – நடவடிக்கையாகும்.  

இந்த அறிவிப்பு உலக் அளவில் பலத்த எதிர்ப்பை உருவாக்கியுள்ளது

பிரிட்டன் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சவூதி அரேபியா இதை கண்டித்திருப்பதோடு இப்போது நடந்து கொண்டிருக்கிற அமைதி முயற்சிக்கு இது பெரிய தடை என்று கூறியுள்ளது. இதையே மற்ற பல முஸ்லிம் நாடுகளும் தெரிவித்துள்ளன.

துருக்கி அரசு அமெரிக்காவுடனான தனது உறவை முறித்துக் கொள்ளக் கூடும் என்று எச்சரித்திருக்கிறது.

பாலஸ்தீனில் மீண்டும் பதற்றம் தொடங்கி விட்டது. மக்கள் போராட்டங்களில் இது வரை பலர் காயப் படுத்தப் பட்டுள்ளனர்.

பிபிசி கூறுகிறது.

At least 31 Palestinians have been wounded in clashes in the Gaza Strip and across the occupied West Bank, during protests against US President Donald Trump's recognition of Jerusalem as Israel's capital.

இந்தச் சூழ்நிலையில் இது முதல் ஜுமா வுடைய நாள்.

அல்லாஹ் பாலஸ்தீன் மக்களை அக்கிரமக்காரங்களின் ஆயுதங்களிலில் இருந்து பாதுகாப்பான!

ஜெரூசலம் மூன்று மதத்தவர்களின் புனிதத் தளம் என்றால் உலக வரலாற்றில் அதன் மரியாதையை சரியாக பராமரித்தவர்கள் முஸ்லிம்களே! !

அவர்களே அதனை ஆளுவதற்கு தகுதி படைத்தவர்கள்.

அவர்களிடம் நபித்துவத்தின் புனிதத்தனமையும் இருக்கிறது. அதனால் ஜெசலம் முஸ்லிம்களுக்கு உரியது. எந்த நிலையிலும்.

டிரம்புகள் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இல்லை எனில் அக்கிரமக்காரர்களுக்கான அழிவை அவர்கள் நிச்சயம் சந்தித்தே தீர வேண்டியது வரும்

அல்லாஹ் அத்தகைய வெற்றியை முஸ்லிம்களுக்கு விரைவாக வழங்குவானாக!’’

பைத்துல் முகத்தஸை தரிசிக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்
.


1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் மவ்லானா
    இந்தத் தலைப்பில்தான் உரை தயாரித்துக்கொண்டு இருந்தேன். வாழைப்பழத்தை உரித்தே தருவதைப்போல உங்களின் உரைக்குறிப்புகள். அல்ஹம்துலில்லாஹ்.
    بارك الله في علمك و فهمك و اعطيك العافية و اجعلنا من المخلصين

    ReplyDelete