வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 21, 2017

தரமான வாழ்வுக்கு தடைகள் 6



உப்பிலிருந்து ஊசிவரை அனைத்தையும் குவாலிட்டி தரம் பார்த்து வாங்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது.
மக்கள் எதையோ வாங்குவதில்லை. தரமானதையே விரும்புகிறார்கள். அதற்கு கொஞ்சம் விலை அதிகமாக இருந்தாலும் கூட.
நாம் வாங்குகிற பொருள் மட்டுமல்ல நாமும் தரமானவர்களாக இருக்க வேண்டும் என நாம்
·         ஆசைப்பட வேண்டும்.
·         முயற்சிக்க வேண்டும்.
·         அதில் வெற்றி பெறவும் வேண்டும்.
மனிதனது குவாலிட்டி  (தரம்) அவனிடமிருக்கிற  காசு / வி / குடும்பம் / ஆகியவற்றில் கிடையாது. அவனுடைய பண்புகளின் அடிப்படையிலேயே அமைகிறது.
அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹ் அவர்களின் தகப்பனாரின் வரலாறு அனைவரும் அறிந்ததே!
ஒரு தோட்டத்தின் காவலாளியாக இருந்தார். அங்குள்ள ஒரு பழத்தை கூட அவர் சுவைத்த்தில்லை.
இறுதியில் அவருக்கு நல்ல மனைவுயும் அவர் காவல் காத்த தோட்டமும் அவருக்கு கிடைத்தன. மட்டுமல்ல. உலகம் போற்றும் சிறந்த சந்ததியாக அருமையான மகனாக அப்துல்லாஹ்வும் கிடைத்தார்.
அப்துல்லாஹ்பின் முபாரக் ரஹ் அவர்களின் சிறப்பு எத்தகையது என்றால்
அவருக்கு பக்கத்து வீட்டில் ஒரு யூதன் இருந்தான், அவன் தனது வீட்டை விற்கப் போவதாக அறிவித்தான். ஒரு முஸ்லி அவனது வீட்டுக்கு விலை பேசினார். அவன் இரண்டாயிரும் தீனார் என்றான். இந்தப் பகுதியில் ஆயிரம் தீனாருக்குத் தானே  வீடுகள் விலை போகின்றன என்று அந்த முஸ்லிம் கேட்டார். யூதன் கூறினான். வீட்டுக்கு விலை ஆயிரம் தான். ஆனால் என் பக்கத்து வீட்டில் இருப்பது அப்துல்லாஹ் பின் முபாரக் அல்லவா ? அதனால் இரண்டாயிரம்,
மரியாதைக்குரிய மனித வாழ்வுக்கான சிறந்த அடையாளம் இது.,
அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் கொள்ளையர்களிடம் தன்னுடைய சட்டைப் பையில் நாற்பது தங்க காசு இருப்பதாக உண்மையை கூறினார். கொள்ளையர்கள் திருந்தினர்.
மனிதர்களின் குணமே அவர்களது தரத்தை தீர்மாணிக்கிறது.
நாம் தரமானவர்களாக இருப்பதற்கு சிற்பான குணங்களை கைகொள்வது அவசியம். அதை விட முக்கியம். அநாகரீகமான தீய குணங்களை விட்டு விலகி நிற்பது.
உயர்ந்த குணங்களை கடை பிடிக்க முடியாவிட்டாலும் கூட இத்தீய குணங்களை விட்டு விலகி நின்றாலே அது சிறந்த தரத்திற்கு உத்தரவாதமாகிவிடும்.  
சிறந்த மனிதர்களிடம் என்ன குணம் இருக்க கூடாது ?
மார்க்க அறிஞர்கள் غ எனும் எழுத்தில் தொடங்குகிற 6 வார்த்தைகளை கூறுகிறார்கள்.
1.      غفلت
2.      غيبت
3.      غل
4.      غلو
5.      غرور
6.      غضب
غفلت அலட்சியம்
அல்லாஹ் குர் ஆனின் பல இடத்திலும் ولا تكن من الغافلين  என்று கூறுகிறான்.
மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இது. பெரும் நட்டத்திற்கு மனிதனை தள்ளிவிடக் கூடிய இயல்பு இது.
நாம் அல்லாஹ் விசயத்தில் மார்க்கம் விசயத்தில் அலட்சியம் காட்டக் கூடாது. மிகப் பெரிய ஆபத்துக்கள் அவை
நாம் ஒருவருக்கு சிறு உதவி செய்தால் அதவை அவர் எப்போதும் மறக்க கூடாது என நினைப்போம்.
அல்லாஹ்வும் அப்படியே !
மக்கள் தன்னை எந்த நிலையிலும் மறந்து நிற்க கூடாது என விரும்புகிறான்.
من اعرض عن ذكري فإن له معيشة ضنكا
إِنَّ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا وَرَضُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَاطْمَأَنُّوا بِهَا وَالَّذِينَ هُمْ عَنْ آيَاتِنَا غَافِلُونَ (7)} [يونس: 7]

·         நமது வாழ்வோடு தொடர்புள்ள விசயங்களில்
·         நமது பிள்ளைகள்
·         நம்மோடு தொடர்புள்ளவர்களின் விவகாரங்களில்  
அலட்சியமாக நடந்து கொள்வது பெரும் ஆபத்துக்களுக்கு காரணமாகும்
மருந்து மாத்திரைகளில் ஆரோக்கியத்தை கவனிப்பதில் ஏற்படும் அலட்சியம் உடலுக்கு எத்தகைய் ஆபத்துக்களை தருகிறதோ
அதே போல பிள்ளைகளின் ஒழுக்கத்தை, ஊழியர்களின் விசுவாசத்தை கவனிப்பதில் காட்டும் அலட்சியம் குடும்பத்திலும் வியாபாரத்திலும் ஆபத்துக்களை ஏற்படுதிவிடும்
அலட்சியவாதிகளை அல்லாஹ் கால்நடைகளை விட மோசமானவர்கள் என்கிறான்.
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ (179)} ... [الأعراف:
சிந்தித்துப் பார்க்க வேண்டும் .
அலட்சியத்திற்கு 5 பொருள் உண்டு
1.   அக்கறையின்மை
2.   பொருட்படுத்தாமை
3.   உதாசீனம் செய்தல்
4.   கண்களில் கர்வம் முகத்தில் கர்வம் கொள்ளுதல்
5.   பிறரை மதிக்காமல் இருத்தல் 
இவை அனைத்தையும் இஸ்லாம் கைவிடுமாறு கூறுகிறது.
குறிப்பாக நாம் பிறரை அலட்சியமாக கருதக் கூடாது, அவன் பாவியாகவே இருந்தாலும் கூட
மாயிஜ் என்ற நபித்தோழர் விபச்சார  குற்றத்திற்காக கல்லால் அடிக்கப்பட்டார். அப்போது ஒருவர் செருப்பை எடுத்து வீசீ
يا خبيث المدينة
என்று கூறினார்; அப்போது தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
قَالَ : فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَقَدْ تَابَ تَوْبَةً لَوْ قُسِّمَتْ بَيْنَ أُمَّةٍ لَوَسِعَتْهَا "
அலட்சிய குணமே வாழ்வின் பெரும் சோதனை
عن عباس الآجري قال: سئل الشبلي عن قول النبي - صلى الله عليه وسلم -:… «إذا رأيتم أهل البلاء فاسألوا الله العافية» قال: من هم أهل البلاء؟ قال: أهل الغفلة عن الله.تاريخ بغداد
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
 غيبت
ஒரு மனிதரைப் பற்றி அவர் இல்லாத சமயத்தில் எதை வெளிப்படுத்துவதை அவர் வெறுப்பாரோ அதை வெளிப்படுத்துவது.
மிகக் கெட்ட குணம்
وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ
இதன் பாவத்தையும் அதற்கான காரணத்தையும் பெருமானார் (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்
" الغيبة أشد من الزنا ، إن الرجل يتوب فيتوب الله عليه ، و إن صاحب الغيبة لا
يغفر له حتى يغفر له صاحبه " .
யாருடைய விவகாரத்திலாவது இவ்வாறு நடந்திருந்தால் அவரிடம் மன்னிப்பு கேட்பதற்கு ஒரு வழி உண்டு.
உங்கள் விசயத்தில் எனக்கு சில ஹக்குகள் உண்டு. அவற்றை நான் நிறைவேற்ற முடியவில்லை. அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்பது
மறுமையில் இதற்கான மன்னிப்பை பெறுவது கடினம்
அமல்களை பதிலுக்கு கொடுக்க வேண்டியதாகி விடும்
தவிர்க்கும் வழிகள்
·         அடுத்த வரை பற்றி பேசும் வழக்கத்தை அறவே விட்டுவிடுவது.
·         பிறர் பேசினால் அந்த இடத்தை விட்டு அகன்று விடுவது.
·         தவிர்க்க முடியாத சபையாக இருக்கும் எனில் அவரைப் பற்றி நல்லதாக சில செய்திகளை தெரிவிப்பது,
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
غل  மன அழுக்கு
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ
عنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ:إِذَا سَمِعْتَ الرَّجُلَ يَقُولُ : هَلَكَ النَّاسُ ، فَهُوَ أَهْلَكُهُمْ.
عَنِ ابْنِ بُرَيْدَةَ الأَسْلَمِيِّ، قَالَ: شَتَمَ رَجُلٌ ابْنَ عَبَّاسٍ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ:إِنَّكَ لَتَشْتُمُنِي، وَفِيَّ ثَلاثُ خِصَالٍ: إِنِّي لآتِي عَلَى الآيَةِ مِنْ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَلَوَدِدْتُ أَنَّ جَمِيعَ النَّاسِ يَعْلَمُونَ مِنْهَا مَا أَعْلَمُ مِنْهَا، وَإِنِّي لأَسْمَعُ بِالْحَاكِمِ مِنْ حُكَّامِ الْمُسْلِمِينَ يَعْدِلُ فِي حُكْمِهِ فَأَفْرَحُ بِهِ، وَلِعَلِّي لا أُقاضِي إِلَيْهِ أَبَدًا، وَإِنِّي لأَسْمَعُ بِالْغَيْثِ قَدْ أَصَابَ الْبَلَدَ مِنْ بِلادِ الْمُسْلِمِينَ فَأَفْرَحُ، وَمَا لِي بِهِ مِنِ سَائِمَةٍ.
المعجم الكبير للطبراني 9/131
.وهذا أبو دجانة رضي الله عنه :دخلوا عليه في مرضه ووجهه يتهلل! فقالوا له: ما لوجهك يتهلل؟فقال: (ما من عملِ شيءٍ أوثق عندي من اثنتين: كنت لا أتكلَّم فيما لا يعنيني، وكان قلبي للمسلمين سليمًا
كان معروف الكرخي قاعدا يوم على دجلة ببغداد فمر به صبيان في زورق يضربون بالملاهي ويشربون فقال له أصحابه:أما ترى هؤلاء يعصون الله تعالى على هذا الماء؟ادع عليهم فرفع يديه إلى السماء وقال:الهي وسيدي كما فرحتهم في الدنيا أسألك أن تفرحهم في الآخرة. فقال له صاحبه:أنما سألناك أن تدعو عليهم ولم نقل ادع لهم, فقال:إذا فرحهم في الآخرة تاب عليهم في الدنيا ولم يضركم هذا. ابن الملقن : طبقات الأولياء 1/47.

قال سرّي السقطي، وكان أوحد زمانه في الورع وعلوم التوحيد: ‏ ‏ منذ ثلاثين سنة وأنا في الاستغفار من قولي مرة: الحمد للّه. ‏ ‏ قيل له: وكيف ذلك ؟ ‏ ‏ قال: وقع ببغداد حريق، فاستقبلني واحد وقال: نجا حانوتُك! ‏ ‏ فقلت: ‏ ‏ الحمد للّه!‏ ‏ فأنا نادم من ذلك الوقت حيث أردتُ لنفسي خيراً من دون الناس. ‏ المناوي
قال سفيان بن حسين: ( ذكرت رجلاً بسوء عند إياس بن معاوية، فنظر في وجهي، وقال: أغزوتَ الرومَ؟ قلت: لا، قال: فالسِّند والهند والترك؟ قلت: لا، قال: أفَتسلَم منك الروم والسِّند والهند والترك، ولم يسلَمْ منك أخوك المسلم؟! قال: فلَم أعُد بعدها )). البداية والنهاية لابن كثير (13/121).
وقال أبو حاتم بن حبان البستي في روضة العقلاء (ص:131): (( الواجبُ على العاقل لزوم السلامة بترك التجسس عن عيوب الناس، مع الاشتغال بإصلاح عيوب نفسه؛ فإنَّ من اشتغل بعيوبه عن عيوب غيره أراح بدنَه ولم يُتعب قلبَه، فكلَّما اطَّلع على عيب لنفسه هان عليه ما يرى مثله من أخيه، وإنَّ من اشتغل بعيوب الناس عن عيوب نفسه عمي قلبه وتعب بدنه وتعذَّر عليه ترك عيوب نفسه )).
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
 غلو எதற்கும் தேவைக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிப்பது. உயர்த்துவது.
தனது குடும்பம் பதவி மற்ற அந்தஸ்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தீய குணத்தின் அடையாளமாகும்.
அதை பற்றி பேசிக் கொண்டிருப்பதும் தவறாகும்.
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
غرور  தற்பெருமை
(( لا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ ))
தற்பெருமைக்கான தண்டனை இந்த உலகிலேயே கிடைக்கும் .
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
غضب
பெருமானாரின் வெற்றிக்கு காரணம், உஹதில் உத்த்ரவை மீறியவர்கள் விசயத்தில் கோப்ப் பட வில்லை.
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ

பெருமானாரின் முக்கிய அறிவுரைகளில் ஒன்று

عن أبي هريرة رضي الله عنه، أنَّ رجلًا قال للنبي صلى الله عليه وسلم : أوصني قال : ((لا تغضب، فردد مرارًا، قال : لا تغضب)) [رواه البخارى] .

இதற்கு விளக்கம் அளிக்கையில் இப்னு ஹஜர் ரஹ் கூறுகிறார்கள். உனக்கு கோபத்தை ஏற்படுத்தும் காரணிகளை விட்டு விலகி நில்

معنى قوله : ((لا تغضب)) اجتنب أسباب الغَضَب، ولا تتعرَّض لما يجلبه) [فتح البارى،لابن حجر]

ஒரு வார்த்தையில் மொத்த நற்குணத்தையும் விளக்கிய அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹ்
وقيل لابنِ المبارك : (اجْمَعْ لنا حُسنَ الخلق في كلمة، قال : تركُ الغَضَب)

குடும்ப விவகாரங்களில் அடிக்கடி கோபம் கூடாது.

கோபத்தில் நிகழ்ந்த தலாக்குகள்
கோபத்தில் நிகழ்ந்த சண்டைகள் தாக்குதல்கள்
நிமிட நேரத்தில் மொத்த வாழ்க்கையின் அமைதியை பறித்துப் போட்டுள்ளன,

கோபத்தை கட்டுப்படுத்துபவனே பலசாலி

وعن أبي هريرة رضي الله عنه، أنَّ رسول الله صلى الله عليه وسلم قال : ((ليس الشَّديد بالصُّرَعة، إنَّما الشَّديد الذي يملك نفسه عند الغَضَب)) [رواه البخارى ومسلم]

வாழ்க்கையில் வெற்றி பெற இப்னு உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் கூறும்  மூன்று வழி முறைகள்

قال عمرُ بنُ عبد العزيز : (قد أفلحَ مَنْ عُصِمَ من الهوى، والغَضَب، والطمع) [شرح صحيح البخارى،لابن بطال]



அல்லாஹ்விற்காக, தீனுக்காக, பண்பாடுகளை பாதுகாப்பதற்க்காக கோப்ப் படுவது மட்டுமே அனுமதிக்கப் பட்டது.
قال الله تعالى : " يَا أَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنَافِقِينَ وَاغْلُظْ عَلَيْهِمْ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيرُ " [التوبة:73]

நமது சுயத்திற்காக – கோப்ப் படுவது அறவே தவிர்க்கப் பட வேண்டும்.
நமது சுயத்திற்காக என்றால் …
ü  தற்பெருமை ,
ü  கேலி,
ü  சர்ச்சை,
ü  பழிவாங்கும் உணர்ச்சி
ü  பேராசை
ü  பொறாமை
ü  ஆகியவற்றுக்காக கோபப் படுவதாகும்.,

நம்மில் பலர் கோபத்திற்கு வீரம் என்றும் ரோஷம் என்றும் சுய மரியாதை என்றும் பெயர் சூட்டிக் கொள்கின்றனர்.

மிக எச்சரிக்கையக நடந்து கொள்ள வேண்டிய இடம் இது.
இமாம் கஸ்ஸாலி (ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். இந்தப் போக்கு அறியாமையின் அடையாளமாகும்.

ومن أشد البواعث على الغَضَب عند أكثر الجهال؛ تسميتهم الغَضَب شجاعةً، ورجوليةً، وعزة نفس، وكبر همَّة، وتلقيبه بالألقاب المحمودة، غباوةً وجهلًا، حتى تميل النفس إليه وتستحسنه

தேவையற்ற கோபத்திதை தவிர்க்கும் வழி
1.   அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவது. அவூது சொல்வது.
قال سبحانه : " وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ [الأعراف: 200]، ومعنى قوله ينزغنك أي : يغضبنك "،
2.       அல்லாஹ்வின் கோபத்தை எண்ணிப் பார்ப்பது.

قال الله تعالى : " وَاذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ " [الكهف: 24] قال عكرمة : يعني إذا غضبت،
அல்லாஹ் நம்மை கோபித்தால் என்ன ஆகும் என்பதை யோசித்தால் போதும் நம்மை விட பாவிகள் யாரும் இல்லை என்பதும் அல்லாஹ்வை விட தண்டிக்கும் சக்தி நமக்கு அதிகம் இல்லை என்பதும் புலனாகும்
பிறகு கோபம் தானாக தணிந்து விடும்.

أن الفضيل بن عياض كان إذا قيل له : إنَّ فلانًا يقع في عرضك، يقول : والله لأغيظنَّ مَن أمره، يعني : إبليس، ثم يقول : اللهم إن كان صادقًا فاغفر لي، وإن كان كاذبًا فاغفر له .

ஒரு சில தனிப்பட்ட நபர்கள் கோபத்தில் விட்ட முத்தலாக்குகள் தான் இன்று சமூகத்தை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது என்பதை  எண்ணிப்பார்க்க வேண்டும்.

நாம் தரமான மனிதர்களாக வாழ்வதற்கு அருவருப்பான இந்த ஆறு குணங்களை விட்டு விலகிக் கொள்வோம் ,
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

9 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ் அருமையான பதிவு பல தகவளை ஞாபகப்படுத்திய கட்டுரை

    ReplyDelete
  2. جزاكم الله خيرا كثيرا يا أستاذ

    ReplyDelete
  3. جزاكم الله خيرا كثيرا يا أستاذ

    ReplyDelete
  4. جزاكم الله خيرا كثيرا يا أستاذ

    ReplyDelete
  5. Assalam Allah Hafiz and mercy to u jazaakallaah haira

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹ்


    அல்லாஹு அக்பர்

    ReplyDelete