வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 30, 2017

மீலாது! உலக மக்களின் நல்வாழ்வுகு வழிகாட்டும் நாள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீலாதுப் பெருவிழாக்களை நடைபெற்றுக்  கொண்டிருக்கின்றன,
இவ்வருடம்நவம்பர் 30 , டிசம்பர் 1 டிசம்பர் 2ஆகிய மூன்று தேதிகளில் உலகம்முழுவதும் பல்வேறு நாடுகளில் ரபீஉல் அவ்வல் 12வருகின்றது. அன்றைய தினம் மீலாது விழாவிற்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபு அமீரகம், பஹ்ரைனிலும் மாலத்தீவுகளிலும் வியாழக்கிழமை அதாவது நேற்று மீலாது விழாவுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்ஜீரியாபங்களாதேஷ்,எகிப்துஎத்தியோப்பியா, இந்தோனேஷியாஈராக்யமன், ஜோர்டான்குவைத்லெபனான்லிபியாமலேசியா,மாலத்தீவுமொராக்கோஓமன்,பாகிஸ்தான்தான்சானியாதுனீஷியா,இலங்கை ஆகிய நாடுகளில் இன்று அதாவது டிஸம்பர் ஒன்றாம் தேதி மீலாது விழாவுக்கான விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது, குவைத்தில் மூன்று நாட்கள் மீலாது விழா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாபுருணை உள்ளிட்ட சில நாடுகளில் 2 தேதி சனிக்கிழமை மீலாது விழாவிற்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் மகிழ்ச்சியோடு பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ்பாக்களை பாடியும் நற்காரியங்களை நிறைவேற்றியும் நபி தின விழாக்களை நடத்தி வருகின்றன. நன்மைகளின் சங்கமமாக ஒரு பிறந்த நாள் விழா இது போல வேறில்லை.   
நபி (ஸல்) அவர்களது பிறந்த பொன்னாளில் அவர்களது வாழ்க்கையின் இலட்சியத்தையும் அவர் கண்ட வெற்றியையும் நாம் உணர்வோம்.

وما أرسلناك إلا رحمة للعالمين

என்று அல்லாஹ் கூறுகிறான்,

இந்த உலகத்திற்கு அவர்கள் எத்தகைய அருட்கொடை என்பதை புரிந்து கொள்வோம்,  

பிறருக்கும் உணர்த்துவோம்.

இன்றைக்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற உலகம் எத்தகைய சீரகேடுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை நம் கண்களால நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.

தனி மனித வாழ்க்கை எவ்வளவு ஒழுக்க கேடுகள் மலிந்த்தாக மாறிவிட்டது ?

சென்னையில் கல்லூரியில் படிக்கிற ஒரு பெண்ண நான்கு வருடங்களாக இரண்டு பேர் ஒரு ஹோட்டலில் தொடர்ந்து பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்றால் மூன்று முறை அந்தப் பெண்ணுக்கு அபார்ஷன் ஆகியிருக்கிறது. இப்போது தான் அந்தப் பெண்ணின் பெற்றோர் புகார் செய்கிறார்கள் என்றால் தனிமனித மரியாதை எந்த அளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது ?  

சமூகம் எவ்வளவு குழப்பமாக இருக்கிறது ?

அதிகாரத்தின் கை மறைவில் ஏரளமான சொத்துக்களை திரட்டியவர்கள் இன்னும் ஹீரோக்களாகவே இருக்கிறார்கள்.
ஆட்சி அதிகாரத்தை பெரும் பணம் சேர்ப்பதற்கு பயன்படுத்தியவர்கள் இப்போதும் கடவுள் அவதாரமாக பார்க்கப் படுகிறார்களே!

அரசியல் எந்த அளவுக்கு ஆக்ரமிப்பு சிந்தனை கொண்ட்தாக மாறிவிட்ட்து ?

மக்களின் சாதாரண உணவான மாட்டிறைச்சியை ஒரு உயர்ஜாதிச் சிந்தனை கொண்ட குழு தடை செய்கிறதே!

குறிப்பிட்ட சில நாடுகளைச் சார்ந்த மக்கள் தங்களது ஊருக்கு வரக்கூடாது என்று நாடுகள் தடை விதிக்கின்றனவே
ஒரு நீதியற்ற போக்கு எவ்வளவு பகிரங்கமாக அறிமுகப்படுத்தப் படுகிறது,

இத்தகைய காலகட்டத்தில் மீலாது விழாக்கள் அதிக முக்கியத்துவம் பெருகின்றன.

முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் உலகிற்கு அதிகமாக பேசப்பட வேண்டிய காலம் இது

ஏனெனில்
  
உலக மக்களுக்கு ஒழுக்கம் மிக்க ஒரு வாழ்க்கையை கற்றுக் கொடுத்தார்கள் நபி (ஸல்) அவர்கள். பார்வை பேச்சு செயல்பாடு ஏன் சிந்தனையிலும் கூட நல்ல விசயங்களுக்கு மட்டுமே இடமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். 

وعن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلممن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. رواه البخاري ومسلم.

أن النبي صلى الله عليه وسلم قال لمعاذ: ألا أخبرك بملاك ذلك كله؟ قلت: بلى يا نبي الله، فأخذ بلسانه وقال: كف عليك هذا، فقلت: يا نبي الله وإنا لمؤاخذون بما نتكلم به؟! فقال: ثكلتك أمك يا معاذ، وهل يكب الناس في النار على وجوههم إلا حصائد ألسنتهمالترمذي، 

فقال رسول الله صلى الله عليه وسلمليس المؤمن بالطعان ولا اللعان ولا الفاحش ولا البذيء. رواه الترمذي،

وقال عليه الصلاة والسلام: { العينان تزنيان، وزناهما النظر } [متفق عليه].
وقال عليه الصلاة والسلام. { يا علي، لا تتبع النظرة النظرة؟ فإن لك الأولى، وليست لك الآخرة } [رواه الترمذي

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: " إياكم والظن، فإن الظن أكذب الحديث 

மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை பிரகடணப்படுத்தினார்கள் என்பதோடு அதை மிகச் சிறப்பாக செயல்படுத்தியும் காட்டினார்கள். அவர் உருவாக்கிய சமத்துவ சமுதாயம் இன்றும் நிலைத்துக் கொண்டிருக்கிறது.

(إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ أَذْهَبَ عَنْكُمْ عُبِّيَّةَ الْجَاهِلِيَّةِ وَفَخْرَهَا بِالْآبَاءِ, مُؤْمِنٌ تَقِيٌّ وَفَاجِرٌ شَقِيٌّ, وَالنَّاسُ بَنُو آدَمَ وَآدَمُ مِنْ تُرَابٍ, لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ فَخْرَهُمْ بِرِجَالٍ أَوْ لَيَكُونُنَّ أَهْوَنَ عَلَى اللَّهِ مِنْ عِدَّتِهِمْ مِنْ الْجِعْلَانِ الَّتِي تَدْفَعُ بِأَنْفِهَا النَّتَنَ) رواه أبو داود 
قال: (إِنَّمَا أَهْلَكَ النَّاسَ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمْ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ فِيهِمْ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا) واه البخاري
وقال -صلى الله عليه وسلم- في خطبته في حجة الوداع: (لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى) رواه أحمد -

மது , விபச்சாரம், ஆபாசம், கொலை, கொள்ளை, சுரண்டுதல் வட்டி, ஆக்ரமிப்பு, இலஞ்சம், பிறருக்கு அநீதி இழைத்தல், அக்கிரமாக நடந்து கொள்ளுதல் அனைத்தையும் அனைத்தையும் மத நம்பிக்கைகும் மானுடத்திற்கும் எதிரானது என்று அறிவித்தார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : اجْتَنِبُوا السَّبْعَ المُوبِقَاتِ ، قَالُوا : يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ ؟ قَالَ : الشِّرْكُ بِاللَّهِ ، وَالسِّحْرُ ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالحَقِّ ، وَأَكْلُ الرِّبَا ، وَأَكْلُ مَالِ اليَتِيمِ وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ ، وَقَذْفُ المُحْصَنَاتِ المُؤْمِنَاتِ الغَافِلاَتِ

عن ابن عمر - رضي الله عنهما - قال: قال رسول الله صلى الله عليه وسلم: " كل مسكر خمر، وكل خمر حرام

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : ( لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْخَمْرِ عَشْرَةً عَاصِرَهَا وَمُعْتَصِرَهَا وَشَارِبَهَا وَحَامِلَهَا وَالْمَحْمُولَةُ إِلَيْهِ وَسَاقِيَهَا وَبَائِعَهَا وَآكِلَ ثَمَنِهَا وَالْمُشْتَرِي لَهَا وَالْمُشْتَرَاةُ لَهُ  رواه الترمذي (1295))

سيأتي زمان على أمتى ينزل فيه رجال على أبواب المساجد يركبون الركبان الفاخرة أزواجهن متبرجات كاسيات عاريات العنوهن فأنهن ملعونات

وروى مسلم عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم(إن الله تعالى طيب لا يقبل إلا طيباً، وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين) ، فقال تعالى: يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًاوقال تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام، وغذي بالحرام فأنى يستجاب له).

روى الإمام أحمد عن عمرو بن العاص رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: (ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسَنَة، وما من قوم يظهر فيهم الرشا إلا أخذوا بالرعب).

பெண்கள், சிறுபான்மையின மக்கள் அடித்தட்டு மக்களின் உரிமைகள் பேணப்பட வேண்டும் எனப்தற்காக தன்னுடைய இறுதி மூச்சு வரை பாடுபட்டார்கள்.

بي هريرة عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: (اللهم إني أحرج حق الضعيفين اليتيم والمرأة)، 
 قال النبي محمد صلى  خطبة الوداع الله عليه وسلم :( فأتقوا الله في النساء , فإنكم أخذتموهنّ بأمان الله , واستحللتم فروجهن بكلمة الله ) رواه مسلم
قال النبي محمد صلى الله عليه وسلم :(إنما النساء شقائق الرجال، ما أكرمهن إلا كريم، وما أهانهن إلا لئيم)

முஹம்மது நபி (ஸல்) அவர்களது சபையில் பெண்கள் தங்களது பிரச்சனைகளை முறையிடுகிற போது உடனடியாக நீதி வழங்கப்பட்டது.

குழந்தை வளர்ப்புக்கு உடனடி தீர்ப்பு

فقد أتت امرأة النبي - صلى الله عليه وسلم - فقالت: إن ابني هذا كان بطني له وعاء, وثديي له سقاء, وحِجري له حواء, وإن أباه طلقني وأراد أن ينتزِعَه مني فقال: « أنت أحقُّ به ما لم تنكحي » [أحمد وأبو داود].
கணவனின் தவறுக்கு உடனடி தீர்ப்பு

كانت خولة من ربات البلاغة والفصاحة والجمال، وعاشت مع زوجها حياة فقيرة معدمة، ولكنها كانت سعيدة وراضية بما قسمـه الله لها، وذات يوم وبينما خولة تصلي راكعة ساجدة، وما إن أنهت صلاتها حتى جاءها زوجها أوس مداعباً، فنفرت منه، فاحتار وتملّكه الغضب، فحرّمها على نفسه كما حُرّمت عليه أمه، وقال لها قول الجاهلية:
"
أنت عليّ كظهر أمي"، وكان هذا القول في الجاهلية أشد أنواع الطلاق، إذ لا رجعة للزوجة فيه إلى زوجها، وعُرف باسم (الظهار).
فلما سمعت خولة هذا القول من زوجها تألّمت كثيراً، وذهبت إلى الرسول الكريم صل الله عليه وسلم، شاكية إليه يمين زوجها، قائلة له:
"
إن أوساً تزوجني وأنا شابة مرغوب فيَّ، وبعد أن كبرتْ سني، ونثرتُ له ما في بطني، وكثُر ولدي، جعلني كأمّه، ولي منه صِبْيَةٌ صغار، إن ضمّهم إليه ضاعوا، وإن ضممتُهم إليّ جاعوا، أكلَ مالي، وأفنى شبابي، حتى إذا كبرتْ سنّي وانقطع ولدي، ظاهَرَ مني..."
قالت عائشة رضي الله عنها: ولم تزل تشتكي إلى رسول الله حتى بكيت وبكى من كان معنا من أهل البيت رحمة لها ورقة عليها، فبينما هي كذلك بين يدي رسول الله صلى الله عليه وسلم تكلمه، نزل عليه الوحي، ونفسُ خولة تكاد تخرج خوفاً من أن تنزل الفرقة والأمر بالطلاق.
وبعد أن نزل الوحي سُرّيَ عن رسول الله صلى الله عليه وسلم وهو يبتسم وقال:
"
يا خولة! قالت: لبيك، ونهضت إليه قائمة بفرح، فتبسّم رسول الله صلى الله عليه وسلم ثم قال:أنزل الله فيك وفيه، -أي زوجها- ثم تلا عليها قوله تعالى:
قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ* الَّذِينَ يُظَاهِرُونَ مِنْكُمْ مِنْ نِسَائِهِمْ مَا هُنَّ أُمَّهَاتِهِمْ إِنْ أُمَّهَاتُهُمْ إِلا اللائِي وَلَدْنَهُمْ وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنْكَرًا مِنَ الْقَوْلِ وَزُورًا وَإِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ* وَالَّذِينَ يُظَاهِرُونَ مِنْ نِسَائِهِمْ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُوا فَتَحْرِيرُ رَقَبَةٍ مِنْ قَبْلِ أَنْ يَتَمَاسَّا ذَلِكُمْ تُوعَظُونَ بِهِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ* فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِنْ قَبْلِ أَنْ يَتَمَاسَّا فَمَنْ لَمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ سِتِّينَ مِسْكِينًا ذَلِكَ لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ (سورة المجادلة 1– 4).


சொத்தில் உடனடிப் பங்கு

أخرج ابن جرير :في سبب نزول آيات المواريث عن السدي يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلادِكُمْ أنه قال : كان أهل الجاهلية لا يورّثون الجواري ولا الصغار من الغلمان ، لا يرث الرجل من ولده إلا من أطاق القتال ، فمات عبد الرحمن أخو حسان الشاعر ، وترك امرأة يقال لها : أم كجّة ، وترك خمس أخوات ، فجاءت الورثة يأخذون ماله ، فشكت أم كجّة ذلك إلى النبي صلّى اللّه عليه وسلّم ، فأنزل اللّه تبارك وتعالى هذه الآية : فَإِنْ كُنَّ نِساءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثا ما تَرَكَ وَإِنْ كانَتْ واحِدَةً فَلَهَا النِّصْفُ ثم قال فى أم كجّة : وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِنْ لَمْ يَكُنْ لَكُمْ وَلَدٌ فَإِنْ كانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ.

 عن جابر قال جاءت امرأة سعيد بن الربيع إلى رسول الله صلى الله عليه و سلم فقالت : يا رسول الله هاتان ابنتا سعيد بن الربيع قتل أبوهما معك في أحد شهيدا وإن عمهما أخذ مالهما فلم يدع لهما مالا ولا تنكحان إلا ولهما مال فقال يقضي الله في ذلك فنزلت آية الميراث

விருப்பமில்லா திருமணம்

قد روى أحمد وأبو داود وابن ماجه عن ابن عباس رضي الله علنهما أن جارية بكرا أتت رسول الله صلى الله عليه وسلم فذكرت أن أباها زوجها وهي كارهة، فخيرها رسول الله صلى الله عليه وسلم.

ஆயிரத்து நானூறு வருட்த்திற்கு முன் பெண்ணின் விருப்பத்திற்கு மதிப்பளித்து உடனடி தீர்ப்பு வழங்கினார்கள் பெருமானார் (ஸல்)

இன்று கேரளாவைச் சார்ந்த ஹாதியா என்ற முஸ்லிம் பெண் நட்த்தி வரும் சமூக நீதிப் போராட்ட்த்தை பற்றி சிந்தித்துப் பாருங்கள்

கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது ஒரே மகள் அகிலாவுக்கும்,24 ஷபின் ஜகான் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்காகவே அகிலா தனது பெயரை ஹாதியா என மாற்றிக் கொண்டார்.

ஷபின் ஜகான் தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணி அமர்த்தவே திருமணம் செய்து கொண்டதாகவும் அசோகன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தனது மகளை மீட்டு தரக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் அசோகன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருமணத்தை கடந்த மே 24ஆம் தேதி ரத்து செய்தது. மேலும் அசோகனோடு அவரது மகளை அனுப்பி வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஷபின் ஜகான் மேல் முறையீடு செய்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி உத்தரவிட்டது. ஹாதியாவிடம் விசாரணை மேற்கொள்ள இயலவில்லை என என்ஐஏ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் ஹாதியாவை நவம்பர் 27-ம் தேதி ஆஜர்படுத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேச காவல்துறையினர் அனுமதிக்காத காரணத்தால் தனது தரப்பு கருத்தை சத்தமாக பதிவு செய்தார் ஹாதியா. இஸ்லாம் மதத்துக்கு மாறு என்று என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, ஷெபின் ஜஹன் என் கணவர், அவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். நான் முஸ்லிம், எனக்கு நீதி வேண்டும் என்று அவர் சத்தம் போட்டு கத்தினார்.

உலகத்திற்கே கேட்ட அவரது கதறலை நீதிமன்றம் இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு சரியான தீர்ப்பு இன்னும் வரவில்லை.

வயது வந்த புத்தி சுவாதீனமுள்ள ஒரு பெண்ணின் திருமணத்தை நீதி மன்றம் இரத்து செய்த கொடுமை எவ்வளவு அநீதியானது ? எத்தகைய கண்டனத்திற்குரியது ?

நாடே இன்று அந்தப் பெண்மணிக்குப் பின்னால் திரண்டு நிற்கிறது, ஆனால் நீதி மன்றம் இன்னும் தயங்கிக் கொண்டிருக்கிறது.

நான் என் கணவரோடு செல்வேன் என்று அந்தப் பெண் பிடிவாதமாக கூறிக் கொண்டிருக்கிற நிலையிலும் கணவரோடு அவரை சேர்த்து வைப்பதற்கு நீதிமன்றம் தாமதிப்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது.

நூற்றி பத்து கோடி மக்கள்கணக்கற்ற செய்தித்தாள்கள் தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களின் கண்ணுக்கு நேரேயே ஒரு பெண்ணின் அடிப்படையை உரிமையை நீதிமன்றம் பறிக்கிறது,
ஒரு பொய்யான காரணத்தைக் கூறி.

நம்முடைய நாட்டில் நீதிமன்றங்கள் எத்தகைய தீர்ப்பை வழங்குகின்றன ?

ஆண் ஆணோடு குடும்பம் நடத்துவதை மனித உரிமை என்று நமது நாட்டு நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்
ஒரு ஆணும் பெண்ணும் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்வதை நமது நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்கின்றன .

ஈஷா யோகா மையம் தனது இரண்டு மகள்களை சாமியாராக்கி மொட்டை யடித்து கட்டுப் படுத்தி வைத்திருக்கிறது என்று பெற்றோர்கள் நீதிமன்றத்தில் முறையிட்ட போது அப்பெண்கள் விரும்பினார்கள் என அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டன நமது நீதி மன்றங்கள்

ஹாதியா வழக்கு இன்னும் தீராத அதிசயமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நமது நாட்டின் நீதிமன்றங்கள் இந்துத்தாவின் அடிமைகளாகி வருகின்றனவோ என்ற சந்தேகம் அழுத்தமாக எழுகிற நேரம் இது

இந்த மீலாது பெருவிழாவின் போது பெருமானார் (ஸல்) பெண்களின் உரிமைகளை நிலை நாட்டச் செய்த முயற்சிகளை எண்ணிப் பார்க்கிறோம்,

பெருமானாரை “உங்களுக்கு நான் செய்த அருள்” என்று அல்லாஹ் வர்ணிக்கிறானே அது பெண்களுக்கு மிகப் பொருத்தமாக இருப்பதை இப்போது எண்ணிப் பார்க்கிறோம்.  

உலகின் அமைதியும் செழிப்பும், இறையச்சம், பரஸ்பரம் மரியாதை, ஒழுக்கம், உயர்ந்த குணங்கள், நீதி இவற்றின் அடிப்படையிலேயே சாத்தியமாகும் என்பதை தெளிவுபடுத்தினார்கள்.

قال النبي صلى الله عليه و سلم: (("أهل الجنة ثلاثة: ذُو سُلطان مقسط مُوفق ؛ ورَجل رَحيم رقيق القلب لكل ذِي قربى ومسلم ؛ وعَفيف متفف ذو عيال"

عَنْ أَبِي أَيُّوبَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : ((يَدُ اللَّهِ مَعَ الْقَاضِي حِينَ يَقْضِي وَيَدُ اللَّهِ مَعَ الْقَاسِمِ حِينَ يَقْسِمُ "))

عن أبي هريرة رضي الله عنه قال: قيل للنبي صلى الله عليه وسلم: من أكرم الناس؟ , قال: " أتقاهم 

قال صلى الله عليه وسلم: «إنّ الصدق يهدى إلى البر وإنّ البر يهدى إلى الجنّة وإنّ الرجل ليصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا» أخرجه أبو داود

قال صلى الله عليه وسلم: «اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق النّاس بخلق حسن» حسن رواه الترمذي

قال صلى الله عليه وسلم: «لو أنّكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتعود بطانا» حسن رواه الترمذي

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : ((أَفْضَلُ الْجِهَادِ كَلِمَةُ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ أَوْ أَمِيرٍ جَائِرٍ "

  
கோவையில் ஆளும் கட்சி வைத்த பேனர் ஒன்று சரிந்து விழுந்ததில்
ஒரு இளைஞன் இறந்து போனான்,
இந்த இளைஞனை கொன்றது யார் ? என சில இளைஞர்கள் சாலையில் எழுதி வைத்தார்கள்.
நீதி கேட்ட அந்த இளைஞர்களை காவல் துறை விசாரிக்கிறது.

இந்த நிலை தொடரும் எனில் எப்படி ஒரு சமூகம் அமைதியாக வாழ முடியும் ?

முஹம்மது நபி (ஸல்) அவர்களது பிறந்த நாள் ஒழுக்க்க கேட்டிற்கு எதிராக , ஆபாசத்திற்கு எதிராக, அநீதிக்கு எதிராக , மக்களை ஒடுக்கி வைப்பதற்கு எதிராக – இனவாத மதவாத கருத்துக்களுக்கு எதிராக மக்களை நல்வழிப்படுத்தும் ஒரு திருநாளாகவும் இருக்கிறது.

அகில உலகிற்கும் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு அருட்கொடையாகவே திகழ்கிறார்கள் என்பதற்கான சாட்சி அது.

அந்த நபியின் வழியில் நாமும் உலகமும் செல்ல அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

No comments:

Post a Comment