வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 26, 2017

உள்ளத்தை உலுக்கிய மரணங்கள் தரும் ஒரே பாடம்

" عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْؤول عَنْ رَعِيَّتِهِ، الإِمَامُ رَاعٍ وَمَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْؤولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ ومَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ، -قَالَ: وَحَسِبْتُ أَنْ قَدْ قَالَ: وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَمَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ- وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ
[أخرجهما البخاري ومسلم في صحيحهما 

இது ஹதீஸ்களில் மிகப் பிரபலமானது
ஒவ்வொருவரும் அவரவரது பொறுப்புக்கள் விசயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டியதை உணர்த்துகிறது.
பொறுப்புகளில் தடுமாறும் பட்சத்தில் மறுமையில் கேள்விக்குள்ளாக நேரிடும் என்பது மட்டுமல்ல இந்த உலகிலும் கடும் பாதிப்புக்கள் ஏற்படும்.
குடும்பத் தலைவரோ தலைவியோ தமது பொறுப்புக்களில் கண்னும்கருத்துமாக இல்லை என்றால்
அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது பொறுப்புக்களை சரிவரி கவனிப்பதில் ஒரு சிறு குறை வைத்தாலும்
எங்கு எப்போது எந்த விளைவு அதனால் ஏற்படும் என்பதை கனிக்க முடியாது.
அந்த வகையில் கடந்த வாரத்தின் இரண்டு நிகழ்வுகள் சமூகத்தின் இதயத்தை உலுக்கி விட்டன.
ஒன்று வட்டியோடு தொடர்புடையது
இன்னொன்று காதலோடு தொடர்புடையது.
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நான்கு நாட்களுக்கு முன் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் கந்துவட்டி கொடுமை காரணமாக தீக்குளித்தார். இதில் அவரது மனைவி சுப்புலட்சுமியும், 2 குழந்தைகளும் பலியானார்கள்.
இரண்டு குழந்தைகளும் ஒரு பெண்மணியும் தீயில் உயிரோடு எரிந்த காட்சி நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியது.
திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இசக்கிமுத்து சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் மரணமடைந்தார்.
கந்து வட்டிக்கு மொத்த குடும்பமும் பலியாகிவிட்டனர்.
இந்நிலையில் கந்துவட்டிக்கு எதிரான எதிர்ப்புக்குரல் நாடு முழுதும் அதிகரித்து வருகிறது.
இந்த நிகழ்வில் நாட்டில் புறையோடிப்போன இரண்டு விவகாரங்களின் கோரமுகம் வெளிப்பட்டிருக்கிறது
ஒன்று கந்து வட்டியின் கொடுமை
வட்டி மனித வாழ்வில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
வட்டி தனி மனிதனுடை பண்பில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மனிதன் காசு ஆசை பிடித்தவனாக மாறிவிடுவான், இரக்கமற்றவனாகவும் மாறிவிடுவான்.
வட்டிக்கு கொடுப்பவனுக்கு மூல தனத்தைப் பற்றிக்கூட  அதிக கவலை இருக்காது. வட்டியைப் வசூலிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துவான், அதனாலே ஆங்கிலத்தில் வட்டிக்கு இண்ட்ரெஸ்ட் என்று சொல்லப்படுகிறது.
வட்டியை வசூப்பதில் அவன் பேயாக அலைவான். இதன் காரணமாகவே வட்டிக்காரனைப் பற்றி குர் ஆன் கூறும் போது பேய் பிடித்தவனைப் போல வட்டிக்காரன் மறுமையில் இருப்பான் என்று கூறுகிறது.
لَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ

அல்பக்ரா அத்தியாத்தின் 275 முதல் 281 வரையான 6 வசனங்கள் வட்டியைப் பற்றி மிகக் கடுமையாக பேசுகின்றன. அதிலு முசனம் வட்டிக்காரனுக்கான தண்டனைப் பற்றியே பேச்சுடனேயே தொடங்குகிறது,

இந்த உலகில் எப்படி நடந்து கொள்கிறானோ அதற்கேற்ப தண்டனை அவனுக்கு மறுமையில் கிடைக்கிறது.

வட்டிக்காரன் பேய்பிடித்தவனை போல எழுப்பப்படுவான், ஏனெனில் அவன் பேயாகத்தான் இந்த உலகில் நடந்து கொள்கிறான்.  அவனுக்கு இரக்கம் இருக்காது, வெட்கம் இருக்காது, மனிதாபிமானத்தின் எந்த அம்சமும் இருக்காது. எந்த அக்கிரமத்தையும் நியாயப்படுத்திக் கொள்ள அவன் தயங்க மாட்டான்,

ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ
வட்டியின் சமூக தீமையை இந்த வசனம் புலப்படுத்துகிறது, வட்டிக்காரன் தனக்கு எதையும் செய்துவிட்டு அதை நியாயப்படுத்த முயற்சி செய்வான்.

வட்டியினால் சிலர் இலாபமடைவார்கள், பலர் நஷடமும் வேதனையும் அடைவர், வட்டியினால் சமுதாயம் அழியும்.

வட்டியின் சமூகத் தீமைகள்

·         வட்டிப்பழக்கம் சமுதாய மக்களிடையே உழைக்கும் எண்ணத்தை எடுத்து விடும். இன்றும் நம் தமிழ்கத்தில் வட்டிக்கு கொடுக்கும் சில இனத்தவர்கள் உழைப்பு என்றால் என்ன என்பதையே அறியாதவர்களாக காசு பணத்தை வைத்து காசு பணத்திலே கொழிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதை பார்க்கலாம். அத்தகையோர். தேடி தேடித் வட்டிக்கு கொடுப்பார்கள், பிறகு தேடி தேடி ஏழைகளை சுரண்டு வார்கள். வட்டி வசூலிப்பதற்காக எத்தகைய அடாவடிக் கூட்டத்தையும் வைத்திருப்பார்கள். வட்டிக்காரன் முதலில் தனது குடும்பத்தை உழைக்கும் திறனை அழிக்கிறான். அடுத்து  பிறரின் உழைப்பை திருடுகிறான்,
·         வட்டி பெருகும் இடத்தில் விபச்சாரம் அதிகரிக்கும். வட்டி கட்ட முடியாதவர்களின் குடும்பப் பெண்களின் மானமும் மரியாதையும் பறி போகும்.
·         வட்டியினால் சிறு வியாபாரிகள் அழிந்து போவார்கள், பெரும் பணக்காரர்களே அனைத்து வியாபாரத்திற்கு சொந்தக்காரர்களாகி விடுவார்கள்
·         வட்டியினால் தற்கொலைகள் அதிகரிக்கும்.வட்டியில் மாட்டிக்கொள்கிற மனிதர்கள் தமது சொந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை தாங்கிக் கொள்வதைக் காட்டிலும் வட்டி கட்ட முடியவில்லையே என்பதில் அதிக சிரமத்தையும் மனக்கஷ்டத்தையும் அனுபவிப்பார்கள். வட்டிக்காரனின் தொல்லை தாங்க முடியாமல் போகிற போது தம்மையும் குடும்பத்தையும் மானம் மரியாதை பறிபோவதிலிருந்து காத்துக் கொள்ள தற்கொலை செய்து கொள்வார்கள்,

இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு, வெளியூரில் விடுதிகளில் தற்கொலை செய்து கொள்கிறவர்கள், குடும்பத்திற்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொள்கிறவர்களின் செய்திகள் அவ்வப்போது பத்ரிகைகளில் வந்து பரபரப்பை ஏற்படுத்து வதை நாம் அறிவோம்.

தற்போதைய நெல்லை மாவட்டத்தில் நிடந்த தீக்குளிப்பு அந்த வகையில் மிக கொடூரமான ஒரு நிகழ்வாகும்.

வட்டியின் அழிவுப்பாதையை சமூகம் உணர வேண்டும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் கொஞ்ச நஞமாவது மகிழ்ச்சியில் வாழ்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் மதுவிலிருந்தும் வட்டியிலிருந்தும் விலகி நிற்பதேயாகும்.

சிறுவியாபாரிகளும் பெரு வியாபாரிகளும் வட்டிக்காரனின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் இருக்க வேண்டும்

கடன் தருகிறேன் என திரும்ப் திரும்ப வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அழைக்கின்றன, கடன் அட்டைக்காரர்கள் ஆசை வார்த்தை கூறுகிறார்கள்.

முஸ்லிம் சமுதாயம் தனது அடிப்படையை மறந்து விடக் கூடாது.

அல்லாஹ்வின் எச்சரிக்கையை உதறிவிடக் கூடாது.

فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ ۖ

முஸ்லிம் சமுதாயம் அல்லாஹ்வின் வாக்குறுதியை உறுதியாக நம்ப வேண்டும். பிற மக்களும் அதை பிரச்சாரம் செய்ய வேண்டும்.

يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ) سورة البقرة، 276 .


இந்த வசனம் சாமாணியமானதல்ல.  

 வட்டியை நியாயப்படுத்த முயலும் இன்றைய பொருளாதாரக் கோட்பாட்டாளர்களுக்கு எதிராக கொடி பிடித்து நிற்கிற திருக்குர் ஆனின் உறுதியான நிலைப்பாடாகும்.

முஸ்லிம்கள் அல்லாஹ்வின் இந்த வாக்குறுதியில் தமது நம்பிக்கையை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையை அதனடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

முஹம்மது ரஸூல் (ஸல்) அறிவுரைகள் வட்டி விசயத்தில் கூறும் கடும் எச்சரிக்கைகளை நாம் மறந்து விடக் கூடாது.

عن جابر رضي الله عنه قال: (لعن رسول الله صلّى الله عليه وسلّم: آكل الرّبا، وموكله، وكاتبه، وشاهديه، وقال: هم سواء

وعن ابن مسعود رضي الله عنه، عن النّبي - صلّى الله عليه وسلّم - أنّه قال: (ما أحدٌ أكثر من الرّبا إلا كان عاقبة أمره إلى قِلَّة) سنن ابن ماجه .

عن عبد الله بن حنظلة غسيل الملائكة أنّه قال: قال رسول الله صلّى الله عليه وسلّم: (درهم ربا يأكله الرّجل وهو يعلم أشدُّ من ستٍّ وثلاثين زنيةً) أخرجه أحمد 


கந்து வட்டி வங்கி வட்டி என எந்த வட்டியும் நமக்கு தேவையில்லை என உறுதியேற்க வேண்டும்

இன்னொன்றும் கவனிக்கத்தக்கது ஏதோ தனிமனிதர்கள் தான் கந்து வட்டி வசூல் செய்கிறார்கள் என பலரும் நினைக்கின்றனர். வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் வழங்கும் அமைப்புக்களும் கூட கந்து வட்டிக்காரகளே!

ஒரு மாதத்திற்குரிய தவனையை செலுத்தாவிட்டால், ஓரிரு மாதங்களின் தவணையை செலுத்தா விட்டால் கடன் வாங்கிய தொகையை விட வட்டித் தொகை அதிகரித்து விடும் /

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَأْكُلُوا الرِّبا أَضْعَافاً مُضَاعَفَةً وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ) سورة آل عمران



முஸ்லிம்களும் அவசரத்திற்காக சூடு வட்டிக்குள் விழுந்து விடக்கூடாது.

முஸ்லிம் ஜமாத் அமைப்புக்கள் ஏழைகள் தமது அவசரத் தேவைகளுக்கு கடன் பெறுகிற பைத்துல் மால்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இப்போது நெல்லையில் ஏற்பட்டது போல ஒரு சம்பவம் முஸ்லிம் உம்மத்தில் ஏற்பட்டு விடக் கூடாது அல்லாஹ் பாதுகாப்பானாக!
அப்படி ஏற்படுமானால் ஒட்டு மொத்த சமுதாயமும் குற்றவாளிகளாக வேண்டியதாகிவிடும்.

வெள்ளம் வரும் முன்னே அணை கட்டிவிட உம்மத் சிந்திக்கவும் செயல்படவும் வேண்டும்.

நெல்லை சம்பவத்தில் கவனிக்க வேண்டிய இரண்டாவது முக்கிய செய்தி  அதிகாரிகளின் அலட்சியமாகும்.
இசக்கிமுத்து 6 முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால்தான் இந்தக் கொடுமை நிகழ்ந்ததாக புகார் எழுந்தது.
நாட்டில் பொதுவாகவே மக்களின் புகார்களை விசாரிப்பதற்கு அதிகாரிகளுக்கு நேரம் இருப்பதில்லை. குறை தீர்ப்பு முகாம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பாகவே நடந்து முடிந்து விடுகிறது.
தனி நபர்கள் தாங்களாக தேடிக் கொள்ளும் தீவினைகளுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்பது அதிகாரிகளின் பொதுவான சிந்தனையாக இருக்கிறது.
பாதிக்கப்பட்ட ஒருவன் தம்மிடம் தவிர வேறு யாரிடம் செல்ல முடியும் என்று அவர்கள் யோசிப்பதில்லை.
ஒவ்வொரு அதிகாரியும் தம்மிடம் ஒரு வழக்கு வருகிற போது அதை தன்னுடைய குடும்பத்தை சாந்த் வழக்காகவும் கோரிக்கையாகவும் கருத வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. நீதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதை பேசுகையி இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
يتصف بصفات الرسول صلى الله عليه وسلم القائل لأصحابه"إنما أنا لكم مثل الوالد لولده". رواه أبو داود والنسائي
அநீதி இழைத்து விடக்கூடாது என்பதில் அதிகாரிகளுக்கு அதிகப்பட்ச கவனம் அவசியம்.

நீ உன்னுடைய பலம் சக மனிதனுக்கு அநீதி இழைத்து விட உன்னைத் தூண்டும் எனில். உனக்கு அநீதி இழைத்து விட அல்லாஹ்விற்கு இருக்கும் ஆற்றலை என்னிப்பார். உமர் ரலி.

 كتب عمر رضي الله عنه الى أحد ولاته موعظة فقال: أما بعد, فاذا دعتك قدرتك على الناس الى ظلمهم, فاذكر قدرة الله عليك في نفاذ ما يأتي اليهم وبقاء ما يؤتى اليك"
அதிகாரி மறைந்து கொள்ளவும் கூடாது.
 يقول النبي صلى الله عليه وسلم "من ولاه الله شيئا من أمور المسلمين فاحتجب دون حاجتهم وخلتهم وفقرهم احتجب الله دون حاجته وخلته وفقره يوم القيامة"
இதை நாம் ஒவ்வொரு நீதி பஞ்சாயத்துக்களின் போதும் நாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நீதி கேட்டு வரும் கோரிக்கையை எந்தக் கட்டத்திலும் அலல்சியப்படுத்தக் கூடாது.,
அத்தகைய ஒரு அலட்சியம் தான் இசக்கி முத்துவின் குடும்பத்தின் கோர முடிவுக்கு காரணமாகிவிட்டது.
இது போல ஒன்றல்ல இரண்டல்ல பல நூற்றுக்கணக்கான அலட்சியங்களின் மொத்த உருவாகத்தன் நமது தமிழ் நாட்டின் அதிகார் வர்க்கம் இருக்கிறது.
இப்போது இசக்கிமுத்துவுக்கு கந்துவட்டிக்கு பணம் கொடுத்த தென்காசி காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி, அவரது கணவர் தளவாய்ராஜ், மாமனார் காளி ஆகிய 3 பேர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 306, 511 மற்றும் தமிழ்நாடு கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ், பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில் ஒரு சிறு அளவிளான நடவடிக்கை முன்னதாக மேற்கொள்ளப்பட்டிருக்குமானால் ஒரு குடும்பத்தை பாதுகாத்திருக்கலாம் என்பதல்ல, தம்ழி மக்களின் மனசாட்சியை உலுக்கிய இத்தகைய கோரத்தை நடக்க விடாமல் தடுத்திருக்க முடியும் என்பது மிக முக்கியமாகும்.
அல்லாஹ் நம் மீது கருணை காட்டக்கூடிய அதிகாரங்களை நமக்கு தந்தருள்வானாக!
தமிழகத்தை பாதித்த இன்னொரு முக்கிய மரணம்
கோவையைச் சேர்ந்த ஹைதர் செரீப் என்பவரின் மகள் ருக்ஷானா, 21. பி.எஸ்சி., பட்டதாரியான இவர், 16ம் தேதி மாயமானார். சாய்பாபா காலனி போலீசில் உறவினர்கள், 19ம் தேதி புகார் அளித்தனர். ருக்ஷானா மொபைல் போனில் இருந்து கடைசியாக, சரவணம்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன சாப்ட்வேர் இன்ஜினியரான பிரசாந்த், 25, என்பவருடன் பேசியது தெரிந்தது. பிரசாந்தை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
பிரசாந்த் மேட்டுப்பாளையத்திற்கு அருகிலுள்ள கல்லாற்றில் ருக்ஷானாவை கொலை செய்து புதைத்து வைத்த செய்தி கிடைத்தது,
சமுதாயம் அடைந்த அதிர்ச்சி அளவற்றது,
ஒரு முஸ்லிம் பெண்னுக்கு அதுவும் அழகான படித்த பொண்ணுக்கு இப்படி ஒரு கதியா என அங்கலாய்க்காதவர்கள் யாரும் இல்லை,
பெண்ணுடைய பெற்றோரும் உறவுக்காரர்களும் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழும் காட்சியை புகைப்படத்தில் பார்த்த யாரும் கண்கலங்காமல் இருக்க முடியாது,
இந்த விவகாரத்தில் இப்போது புலப்படுவது என்ன ?
அந்தப் பெண் மாற்று மதத்தை சார்ந்த ஒருவரை காதலித்தது அவருடன் நெருக்கமாக இருப்பது பற்றிய பல போட்டோக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன, சில வருடங்களாக காதலித்திருக்கிறார், கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வரை தனியாக அவருடன் செல்கிற அளவுக்கு வாய்ப்புக்களை பெற்றிருக்கிறார் என்றால்
இதில் குற்றவாளிகளாக பெண்ணின் பெற்றோர்களே முதன்மையாக தெரிகிறார்கள்.
எந்தப் பொறுப்புணர்வின் அடிப்படையில் குடும்பம் நகர்ந்தது என்ற கேள்வி பிரதானமாக எழுகிறது,
وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْؤولَةٌ عَنْ رَعِيَّتِهَا
இதில் தாயின் பங்கு பிரதானமானது.
ஒரு தாயிக்கு தன் மகளின் முகக்குறிகளை வைத்தே அவளை அடையாளம் காண முடியும் எனும் போது, வெளியே செல்லும் மகள்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க தவறும் பட்சத்தில் ஏற்படும் விளைவு எவ்வளவு கொடூரமாகிவிட்டது ?
இது போன்ற நிகழ்வுகள் பல முஸ்லிம் சமூகத்தில் நடக்கத் தொடங்கி விட்டன.
ஒவ்வொரு முஸ்லிம் குடும்பமும் தனது குழந்தைச் செல்வங்களை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் பொறுப்புணர்வை சற்றும் தட்டிக் கழித்து விடக்கூடாது,
முஸ்லிம் குடும்பங்களில் குடும்பத்தலைவர்கள் சம்பாதித்துக் கொடுப்பதை மட்டுமே கடமையாக செய்து விட்டு ஒது ங்கிக் கொள்கின்றனர்.
அதே போல குடும்பத் தலைவிகள் அன்புக்கு கட்டுப்ப்பட்டு வளர்ந்த பிள்ளைகளுக்கு வேலைக்காரர்களாக மட்டுமே ஆகிவிடுகின்றனர், அவர்களை கட்டுப் படுத்தும் தைரியத்தை இழந்து விடுகின்றனர்,
அத்தோடு பல சந்தர்ப்பத்திலும் குழந்தைகளின் தவறுகள் தெரிய வருகிற போது கணவரிடமும் மற்றவர்களிடமு மானம் மரியாதை கருதி எடுத்துச் சொல்லாமல இருந்து விடுகின்றனர்
அதே போல முஸ்லிம் பெற்றோர்கள் தாயும் தந்தையுமே தமது பிள்ளைகளின் குறைகள் எடுத்துச் சொல்லப்படும் போது கோபப்படுகின்றனர். குறை சொன்னவர்களை அடிக்காத குறையாக திருப்பி அனுப்புகின்றனர், பல நேரத்திலும் அவர்களுடைய குழந்தைகளின் தவறுகள் அவர்களுக்கே தெரிய வந்தாலும் உடனடியாக ஒரு கவுன்சிலிங்கிற்கு செல்ல தயங்குகின்றனர்.
விசயம் கை மீறி ஒரு ஆலோசனைக்கு செல்லலாம் அல்லது பிள்ளைகளை கண்டிக்கலாம் என அவர்கள் முடிவு செய்வதற்குள் போது காரியம் விபரீதமாகிவிடுகிறது,
பல பெற்றோர்களுக்கு காதல் என்ற வலையில் சிக்காமல் தங்களது பிள்ளைகளை பாதுகாக்க தெரிவதில்லை, அவ்வாறு காதல் வலையில் விழுந்து விட்ட பிள்ளைகளை கையாளவும் தெரிவதில்லை.
இது குறித்து முஸ்லிம் குடும்பங்களை பாதுகாப்பதற்கு ஜமாத்துக்கள் கவுன்சிலிங்குகளை ஏற்படுத்தி மானக்கேட்டை பயப்படுவதை விட குழந்தைகளின் இழப்பை பயந்து கொள்ளுமாறு அவர்களுடைய ஈமானிய இழப்பை பயந்து கொள்ளுமாறூ அறிவுறுத்த வேண்டும்.
பெற்றோர்களுக்க் நிறைவாக ஒரு செய்தி – பிள்ளைகளின் வளர்ப்பு சரி வர இல்லை என்றால் பெற்றோர்களும் சேர்ந்து நஷ்டவாளிகளாக வேண்டியது வரும் என்பதை திருக்குர் ஆனின் கஹ்பு அத்தியாயம் கூறுகிறது.
وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَا أَن يُرْهِقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا (80فَأَرَدْنَا أَن يُبْدِلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِّنْهُ زَكَاةً وَأَقْرَبَ رُحْمًا

குடும்பத்திலும் அதிகாரத்திலும் பொறுப்புணர்வு குறைவால் ஏற்படும் பாதிப்புக்களை சமீபத்திய இந்த மரணங்கள் நமக்கு அழுத்தமாக உணர்த்து கின்றன.

அல்லாஹ் நமது குடும்பங்களை நமக்கு கண்குளிர்சியானதாக ஆக்குவானாக! நமது குடும்பத்தை இறையச்சமுள்ள குடும்பகா வார்த்தெடுக்க நம்மை பொறூப்பாளியாக்குவானாக!
நமது அதிகாரிகாரிகளை நம் மீது கருணை காட்ட கூடியவனாக ஆக்குவானாக!

வட்டியின் நிழல் கூட படாமல் வாழ்வதற்கு நமக்கு தவ்பீக் செய்வானாக!

1 comment: