வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 06, 2017

GST திட்டம் நல்லது. நோக்கம் தீயது

يَا دَاوُدُ إِنَّا جَعَلْنَاكَ خَلِيفَةً فِي الْأَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلا تَتَّبِعِ الْهَوَى فَيُضِلَّكَ عَنْ سَبِيلِ اللَّهِ} (صّ: 26(
ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டும்.  
பெருமானாரின் பிரார்த்தனை இரண்டு முக்கிய அம்சங்களைப்  புலப்படுத்துகிறது.
اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا
குடிமக்கள் விசயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்பவர்களாக இருக்க வேண்டும்.

சுஹைல் பின் அம்ர் ரலி மக்காவின் தலை சிறந்த பேச்சாளர். அவரது பேச்சுத் திறனால் முஸ்லிம்கள் அதிக துன்பத்தை அனுபவித்து வந்தனர். அவரால் ஏற்பட்ட துயரத்தின் அளவு எந்த அளவுக்கு இருந்தது என்றால் ? அவர் பத்று யுத்ததில் கைதியாக சிக்கி மதீனாவில் இருந்த போது உமர் ரலி அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே சுஹைலின் முன்பற்களை உடைத்துப் போட எனக்கு அனுமதி தருவீர்களா என்று கேட்டார்கள் .

சுஹைல் ஒரு எதிரி. அதிலும் இப்போது ஒரு கைதி. அவரைக் கொன்று போட்டால் கூட கேட்பதற்கு யாரும் இல்லை,

ஆனால் நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா ?

سهيل بن عمرو القرشي
خطيب قريش وفصيحهم، ومن أشرافهم.

فقال عمر بن الخطاب لرسول الله: " يا رسول الله دعني أنزع ثنيتي سهيل بن عمرو حتى لا يقوم عليك خطيبا بعد اليوم "، فأجابه رسول الله: " لا أمثل بأحد، فيمثل الله بي، وإن كنت نبيا ".

உமைய்யா கிலாபத்தின் மாமன்னர் அல்லாஹ்வை பற்றி நினைவூட்டப்பட்டதும் . அழுதார் அழுதார். அவரை சமாதானப்படுத்த முடியாமல் அருகிலிருப்பவர்கள் எழுந்து சென்று விட்டனர்.

وقال طاوس لسليمان بن عبد الملك: هل تدري يا أمير المؤمنين من أشد الناس عذاباً يوم القيامة؟ قال سليمان: لا أدري. قال طاوس: أشد الناس عذاباً يوم القيامة من أشركه الله في ملكه، فجار في حكمه. فاستلقى سليمان على سريره وهو يبكي، فما زال يبكي حتى قام عنه جلساؤه.


ஆட்சியாளரின் இரண்டாவது அம்சம் அவர் குடிமக்கள் விசயத்தில் கருணை காட்டுபவராக இருக்க வேண்டும்.

அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொள்வதற்கான செல்வத்தை அவர் தேடிக் கொள்ள வேண்டும். மக்களுக்கு அதன் மூலம் உபகாரம் செய்ய வேண்டும்.

துல்கர்ணனிடன் அணை கட்டித்தருமாறு கோரிய மக்கள் , அதற்கு கூலி தருவதாக கூறினார். அது தேவை என்று மறுத்த அவர் உடல் ஒத்துழைப்பு மட்டும் தறுமாறு கூறினார்.

قَالُوا يَاذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَى أَنْ تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا(94)قَالَ مَا مَكَّنَنِي فِيهِ رَبِّي خَيْرٌ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا(95)آتُونِي زُبَرَ الْحَدِيدِ حَتَّى إِذَا سَاوَى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انفُخُوا حَتَّى إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا(96)

ஆட்சியாளர்கள் அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வதற்கு தேவையான நிதியை இயற்கை வளங்கள் ,’
உபரியாக கிடக்கிற நிலங்கள்,
உற்பத்தியை பெருக்குவதன் மூலம் கிடைக்கிற வருமானங்களையே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வரி என்கிற பெயரில் மக்களிடமிருந்து இரத்ததை உறிஞ்சுகிற பணியை நல்ல ஆட்சியாளர்கள் செய்யக் கூடாது.

கொள்ளைக் காரர்களுக்கு ம் அதற்கும் வித்தியாசம் கிடையாது,

இஸ்லாமிய நாடுகள் சில வற்றில் இப்போதும் கூட மக்களிடம் தனிப்பட்ட வரிசூல் இல்லை என்பதை பார்க்கலாம்.

இஸ்லாமிய வரி என்பது 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்ததில்லை.

விளைச்சல் நிலங்களிலிருந்து உஸ்ரு என்றழைக்கப்படும் நிலவரி – 10 சதவீதம் வசூலிக்கப்பட்டது.  உமர் ரலி அவர்கள் வெளிநாடுகளிலிர்நுது இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கும் அந்த உஸ்ரை அமுல் படுத்தினார்கள்.

கராஜ் என்ற நிலவரியும் இஸ்லாத்தில் இருந்தது.

முஸ்லிம்கள் உடன்படிக்கையின் மூலம் வென்ற நிலங்களிலிருந்து இந்த வரி வசூலிக்கப்பட்டது.  இந்த நிலவுடைமையாளர்கள் முஸ்லிம்களாகி விடுவார்கள் எனில் கராஜ் வரி நீக்கப்படும் அதற்குப் பிறகு உஸ்ரு எனும் ஜகாத் கடமையானால் அவர்கள் அதைக் கொடுப்பார்கள்.

முஸ்லிம்கள் போரின் மூலம் வெற்றி பெற்ற இடங்களில் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்கள் அனைவரிடமிருந்தும் கராஜ் நிலவரி வசூலிக்கப்படும். முஸ்லிம்கள் இதற்கும் மேல் உஸ்ரு என்ற ஜகாத்தையும் வழங்குவார்கள்.

இஸ்லாமிய நாடுகளில் வாழ்கிற சிறுபான்மையின் மக்கள் ஜிஸ்யா என்ற வரி செலுத்த வேண்டும். ஏழைகள், பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள், மீது இந்த வரி கிடையாது . உடல் ஊனமுற்றோர், புத்தி சுவாதீனமற்றோர், துறவிகள், மடாலயங்களில் வசிப்போர், தற்காலிக பயணிகள் ஆகியோரும் இந்த வரியிலிருந்து விலக்களிக்கப்படுவோர் ஆவர். போரிடத்தகுதி பெற்றிருக்கிற வசதியானவர்கள் மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்படும். போர் களில் கலந்து கொள்ள அவர்கள் நிர்பந்திக்கப்பட மாட்டார்கள் என்பதன் அடிப்படையில் பாதுகாப்பு வரியாக இந்த வரி வசூலிக்கப்படும். ஆண்டு தோறும் வசூலிக்கப்படும் இந்த தொகை ஆட்களின் வசதிக்கு ஏற்ப இருக்கும் என்றாலும் வெகு சொற்பமான தொகையே இதி ல் வசூலிக்கப்படும்.

ஆணால் தற்போதை அரசு அமைப்புக்கள் தங்களுடைய ஆடம்பர செலவுகளை ஈடுகட்டுவதற்காக சாமாணிய மக்களை சுரண்டுகிற வரி விதிப்பை செய்கிறார்கள்,  ஐரோப்பிய பாணி அரசுகளின் மாபெரும் தீமை இது. ஜனநாயகத்தின் பெயரால் நடை பெருகிற பெரும் கொள்ளையாக இந்த வரி வசூலிப்பு நடவடிக்கைகள் மாறிவருகின்றன.

இருபது ரூபாயுக்கு செல்போன் ரீஜார்ச் செய்கிற ஏழையிடமிருந்து 8 ரூபாய் வரை வரி வசூலிக்கப்படுகிறது. சுமார் பாதியளவு.

நம்முடைய நாட்டில் போட்டி போட்டுக்கொண்டு மத்திய மாநில அரசுகள் மக்கள் நுகரும் பொருட்களின் மீதும் சேவைப் பணிகள் மீது வரிகளை விதிக்கத் தொடங்கின.

பக்கத்து நாடான பாக்கிஸ்தானிலும் பங்களாதேஷிலும் 30 ரூபாயுக்குள் விற்கப்படுகிற பெட்ரோல் நம்முடைய நாட்டில் 70 ரூபாயுக்கு விற்கப்படக் காரணம் அதன் மீது மத்திய மாநில அரசுகள் விதித்திருக்கிற வரிகளே ஆகும்.

இந்த வரிகளால் பெரிதும் பாதிக்கப்படுவது இந்திய சாமாணிய மக்களே ஆவார்கள்.

தற்போது நாட்டில் அமுல் படுத்தப்பட்டிருக்கிற ஜி எஸ் டி வரி விதிப்பு முறை என்பது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளதத்தகதே! நாடு முழுவதிலும் ஒரே மாதிரி வரி என்பது பலவகையிலும் மக்களுக்கு நன்மையாக அமையும்

ஒரு இடத்தில் வரி கட்டி விட்டால் நாடு முழுவதற்கும் அது பொருந்து,

ஆனால் இப்போது மத்திய அரசு ஜி எஸ் டி ஐ அவசர கதியில் அமுல் படுத்தியதில் இரட்டை சுமைகளை சுமக்கிற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்/

ஜி எஸ் டி என்ற மத்திய அரசின் வரிகளும் இப்போது விதிக்கப்படுகிற எஸ் ஜி டி என்ற மாநில அரசின் வரிகளும் இப்போது விதிக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாது மக்களின் மிகச் சாதாரணமான வசதிவாய்ப்புக்களுக்கு அதிகப்படியான வரி போடப்பட்டிருக்கிறது, உதாரணத்திற்கு ஏசி உணவகத்தில் இட்லி சாப்பிட்டால் அதற்காக இட்லி விலையை விட மூன்று மடங்கு அதிகமாக வரி செலுத்த வேண்டியிருக்கீறது.

இதே போல மக்களின் மிக சாமாணி தயாரிப்புக்களான கடலை மிட்டாய் போன்றவையும் வரி விதிப்பிலிருந்து தப்பவில்லை,.

தற்போதை மத்திய அரசை தேர்ந்தெடுத்ததற்காக மக்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாக இந்த வரி விதிப்பை கருத வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கீறது.

கடுமையாக வரி விதித்தது மட்டுமல்ல. இதை நியாயப்படுத்தி பேசுகிற மத்திய அரசிற்கு பொருப்பான அமைச்சர்கள் அதிகாரிகளின் பேச்சு மக்களின் மீது இவ்வளவு சுமைகளை ஏற்றீ இருக்கிறோமே என்ற கவலையின் பாற்பட்டதாக இல்லாமல் ஆணவத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு பேசுவதும் நம்முடைய நாட்டின் ஜனநாயக அமைப்பு சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கிற தோற்றத்தை ஏற்படுதுகிறது.

பொதுவாகவே நம்முடைய நாட்டு மக்கள் வரி விதிப்பு விசயங்களை இது வரை கண்டு கொண்டதில்லை, தொழில் நிறுவனங்கள் மட்டுமே வரி விதிப்புக்கள் குறித்து விவாதிப்பவையாக இருந்தன.

ஆனால் வரியினால் அதிகம் பாதிக்கப்பட்டது அப்பாவி பொதுமக்களே அதிகம்.

சம்பாதித்து கொட்டு கிற பணக்காரர்களுக்கும் கூட அதிக பட்ச வரி விதிப்புகளும் தெளிவற்ற சட்டங்களும் அரசு அதிகாரிகளின் அராஜக நடை முறைகளும் பெரும் மன சஞலத்தை தருவதாக அமைந்திருக்கீறது.

இதற்கெல்லாம் காரணம் ஆட்சிக்கு வந்த பிறகு பெரும் பண்க்கார நாட்டு அரசர்களைப் போல் நமது ஜனநாயக நாட்டின் அதிகார வர்க்கம் செயல் படுவதாகும்

அரசாங்கத்தின் ஆடம்பர  செலவுகளை குறைப்பதற்கு எந்த வித நடவடிக்கையும் இல்லை.

ஊழலை தடுப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை.

மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தருகிற எந்தச் சிந்தனையும் இல்லை

மக்களிடமிருந்து  அவர்களது பாக்கெட்டுகளிலிருக்கிற பணத்தை பறிப்பதை மட்டுமே திட்டமாக கொண்டு அரசுகள் செயல்படுகின்றன்.

ஜி எஸ் டி யை அமுல் படுத்தியதற்குப்பின்னால் தற்போதைய மத்திய அரசின் இந்த்த்துவா கோட்பாட்டு வெறித்தனமும் மறைந்திருக்கிறது.

மாநிலங்களின் தனி அதிகாரத்தை குறைத்து சர்வாதிகாரம் படைத்த இந்துத்து அரசு என்ற இலக்கை பின்னணியாக வைத்தே அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.

திட்டம் நல்ல திட்டம் தான். அதன் தற்போதைய மத்திய அரசின் நோக்கம் வஞ்சகம் நிறறந்தது. மட்டுமல்ல, மக்களுக்கு அதிக துன்பத்தை தரக்கூடியது.

தனது வஞ்சக திட்டத்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக மாநில அரசுகளை சமாளிக்க அவற்றின் வரியை ஏற்குமாற் மக்களை மத்திய அரசு நிர்பந்தப் படுத்தியுள்ளது.  இதனால் காலை பசிக்காக சாப்பிடுகிற இரண்டு இட்லிக்காக கூட மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் வரி செலுத்த வேண்டிய நிர்பந்தத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் மீது கருணை அற்ற போக்கே இதற்கு காரணமாகும்.

மக்களின் மீது கருணை அற்ற போக்குள்ளவர்கள் ஆட்சியில் தொடர்வார்கள் எனில் ம்க்கள் அதிக சிரமத்தை அணுவிக்க நேரிடும் என்பது மட்டுமல்ல அல்லாஹ்வின் பரக்கத் குறைந்து விடும் என்பதும் நாம் அச்சப்பட வேண்டிய ஒன்றாகும்

قال الوليد بن هشام: إن الرعية لتفسد بفساد الوالي وتصلح بصلاحه.

 وقال سفيان الثوري لأبي جعفر المنصور: إني لأعلم رجلاً إن صلح صلحت الأمة وإن فسد فسدت الأمة، قال: ومن هو؟ قال: أنت! وقال ابن عباس: إن ملكاً من الملوك خرج يسير في مملكته مستخفياً بمكانه، فنزل على رجل له بقرة فراحت البقرة فحلبت له قدر حلاب ثلاثين بقرة، فتعجب الملك لذلك وحدثته نفسه بأخذها، فلما راحت عليه من الغد حلبت على النصف مما حلبت بالأمس، فقال له الملك: ما بال حلابها نقص، أرعت في غير مرعاها بالأمس؟ قال: لا، ولكني أظن أن ملكنا هم بأخذها فنقص لبنها، فإن الملك إذا ظلم أو هم بالظلم ذهبت البركة. فعاهد الملك الله سبحانه وتعالى في نفسه أن لا يأخذها، فراحت من الغد فحلبت حلاب ثلاثين بقرة، فتاب الملك وعاهد ربه: لأعدلن ما بقيت!.

நமது பிரதமர் இது வரை அஜ்மீருக்கு செல்ல வில்லை. ஆனால் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.

நாட்டின் மழை வளம் வெகுவாக குறைந்திருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக அவர் இன்னும் அஜ்மீருக்கு செல்லாத்தை அதிகாரிகள் சுட்டுக்காட்டவே செய்கிறார்கள், ஆனால் அவரது மனம் அங்கே செல்ல மறுக்கிறது.

அவர் இஸ்ரேல் என்கிற பயங்கர வாதத்திற்கு மிக உற்சாகமாக செல்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைதி தீர்மாணங்களை பகிரங்கமாக மீறி வருகிற நாடு அது.

அது மட்டுமக்கள் பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து அவர்களது தாய் மண்ணில் சட்ட விரோத குடியேற்றங்களை உலக நாடுகளின் கருத்தை மீறி உருவாக்கி வருகிற நாடு அது.

நாட்டு நன்மையில் அக்கறை செலுத்தாமல். அதிகார ஆணவத்தின் வெளிப்பாடாகவே அவரது செயல்கள் தொடர்ந்து அமைந்து வருகின்றன.

ஆட்சியாளர்களின் இத்தகைய போக்கு நாட்டின் எதார்த்தமான அமைதியை மட்டுமல்ல . அல்லாஹ் வைத்திருக்கிற சத்தியத்தின் செழிப்பையும் கூட எடுத்து விடும்.

அல்லாஹ் பாதுகாப்பானாக!


No comments:

Post a Comment