வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 28, 2016

போர் நியதிகள்

போர்க்கால நியதிகள்
முஸ்லிம்களை சிறந்த உம்மத் என்று அல்லாஹ் கூறுகிறான்
كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر

எல்லா துறையிலும் முஸ்லிம்கள் சிறந்தவர்களாக இருந்தார்கள்

வணக்க வழிபாடுகள் கொடுக்கல் வாங்கலில் மட்டுமல்ல யுத்த துறையிலும் முஸ்லிம்கள் சிறந்தவர்களாகவே இருந்தார்கள்.

மனித வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
ஆதம் ஹவ்வா அம்மையாரை பூமிக்கு அனுப்பிய போது அல்லாஹ் கூறினான்
اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ

கூடுமானவரை சண்டையை தவிர்க்க முய்றசி செய்ய வேண்டும்.
முறைஷிஃ யுத்ததின் போதுமுஸ்லிம்கள் சண்டைக்கு தயாராகி விட்ட சூழலில் சண்டைக்கு வரவழைத்த எதிரிகள் மலைகளில் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.
சண்டை நடக்கும் என்று எதிர்பார்த்த தோழர்களுக்கு சண்டை நடை பெறாமல் போனது ஏமாற்றமாக இருந்தது. சண்டை நடக்க வில்லையே என தோழர்கள் ஆதங்கப்பட்டனர், தோழர்களின் இந்த உணர்வை அறிந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَيَّامِهِ الَّتِي لَقِيَ فِيهَا الْعَدُوَّ انْتَظَرَ حَتَّى مَالَتْ الشَّمْسُ ثُمَّ قَامَ فِي النَّاسِ فَقَالَ أَيُّهَا النَّاسُ لَا تَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ وَسَلُوا اللَّهَ الْعَافِيَةَ فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيُوفِ ثُمَّ قَالَ اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الْأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ- البخاري 3024
ஒரு போர்க்களத்தின் நடுவில் நின்று கொண்டு அல்லாஹ்விடம் அமைதியை கேளுங்கள் என்று சொன்ன தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டுமே.

முஸ்லிம்கள் இந்த அறிவுரையின் முக்கியத்தை புரிந்து கொள்ள வேண்டும். அமைதியையும் சமாதானத்தையுமே அல்லாஹ்விடம் அதிகம் கேட்க வேண்டும் எனில் அப்படி வாழவே எப்போதும் அவர்கள் ஆசைப்பட வேண்டும். சண்டை சச்சரவுகளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு நிற்க கூடாது.
இந்த நபி சண்டைக்கு அழைப்பு விடுக்க கூடாது என்பதை உணர்த்துவதாக ஹஸனுல் பஸரீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
واستدل بهذا الحديث على منع طلب المبارزة ، وهو رأي الحسن البصري ،

அலி ரலி அவர்களின் கருத்தும் இதை வலியுறுத்துகிறது.
وكان علي يقول : لا تدع إلى المبارزة ، فإذا دعيت فأجب تنصر ، لأن الداعي باغ
பத்ஹுல் பாரியில் இந்த ஹதீஸுக்கு கீழே அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் இந்த அற்புதமான கூற்றும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது
وقد قال الصديق " لأن أعافى فأشكر أحب إلي من أن أبتلى فأصبر "
பிரச்சனை ஏற்பட்ட பிறகு அதை தாங்கிக் கொள்வதை விட நிம்மதியாக இருந்து அல்லாஹ்வுக்கு நன்றி சொல்வதே சிறந்தது.
முஸ்லிம்களுக்கான மிக அற்புதமான வழிகாட்டுதல் இது. சண்டை சச்சரவு இல்லாமல் – பிரச்சனைகள் ஏற்படாமலும் ஏற்படுத்தாலும் நிம்மதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவே முஃமின்களின் அடையாளம்.
சண்டை என்றோ பிரச்சனை என்றோ வந்து விட்டால் முஸ்லிம் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து அதை எதிர்த்து நிற்க வேண்டும்

மேற்சொன்ன ஹதிஸ் வேறு சில அறிவிப்புக்களில் இப்படி இடம் பெற்றுள்ளது. (பத்ஹுல் பாரி)
وسلوا الله العافية : فإن بليتم بهم فقولوا اللهم )

 وغضوا أبصاركم واحملوا عليهم على بركة الله   )

ஆனால் சண்டை ஏற்படுகிற சூழலில் கூட முதலில் ஆயுதத்தை தூக்குபவராக முஸ்லிம் இருக்க கூடாது என நபிகள் அறிவுறுத்துகிறார்கள்.
பொருத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை எதிரிகள் உங்களை வெட்டி விட்டால் சொர்க்கம் உங்களுக்காக காத்திருக்கிறது என்றார்கள்.
فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيُوفِ
எதிர்களை சந்திக்கிற நேரத்திலும் சண்டையோ எதிரிகளை அழிப்பதோ அல்ல பிரதானம் அவர்களுக்கு நமது நோக்கத்தை எடுத்துச் சொல்வதும் அதற்கவர்கள் கட்டுப்பட்டுவிட்டால் அவர்களை எந்த தொந்தரவுக்கும் ஆட்படுத்தக் கூடாது எனவும் பெருமானார் (ஸல்) உத்தரவிட்டார்கள்.

மதீனாவில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்களை பார்த்து குரோதம் கொண்ட யூதர்கள் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு பல வகையிலும் தொல்லை கொடுத்து வந்தனர். பல முறை புத்தி புகட்டப்பட்ட பிறகும் கூட முஸ்லிம்களை கருவறுத்து விட தொடர்ந்து அவர்கள் முயற்சி செய்தனர். இதானால் இறுதியில் யூதர்களின் பெரும் கோட்டை கொத்தளங்கள் இருந்த கைபர் பகுதியை நோக்கி பெருமானார் (ஸல்) அவர்கள் போர்த்தொடுத்தார்கள், மதீனாவிலிருது 100 மைல் தொலைவிலிருந்து கைபரில் யூதர்கள் வலுவான கோட்டைகள் அமைத்து தோட்டங்களை உருவாக்கி செழிப்பாக வாழ்ந்து வந்தனர். அக்கோட்டைகளை முற்றுகையிட்ட முஸ்லிம்களுக்கு வெற்றி எளிதாக இருக்க வில்லை. முதல் நாள் அபூபக்கர் ரலி இரண்டாம் நாள் உமர் ரலி ஆகிய பெரும் சஹாபாக்கள் தலைமை தாங்கி சென்றும் வெற்றி கிடைக்க வில்லல, நாளை நான் ஒருவரின் கையில் கையில் கொடியை தருவேன், அவர் அல்லாஹ்வை விரும்புகிறார். அவரை அல்லாஹ் விரும்புகிறான் என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
"لأعطين هذه الراية غدًا رجلًا يفتح الله على يديه، يحب الله ورسوله ويحبه الله ورسوله"

ஒவ்வொரு தோழரும் அது தாமாக இருக்க கூடாதா என எண்ணினர். அடுத்த நாள் பெருமானார் (ஸல்) அலி எங்கே என்று கேட்டார்கள். அலி (ரலி) அழைத்து வரப்பட்டார்கள். அவரிடம் கொடியை கொடுத்த பெருமானார் (ஸல்) அலியே! என்ன செய்யப் போகிறீர் என்று கேட்டார்கள். தன்னிடம் தனித்துவத்தோடு ஒப்படடக்கப் பட்ட கொடியை பெற்றுக் கொண்ட அலி (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே அவர்களும் நம்மை போல ஆகும் வரை அவர்களோடு போர் செய்வேன் என்று சொன்னார்கள் வேறெந்த தளபதியயக இருந்தாலும் இந்தக் கட்டத்தில் தன்னுடைய தளபதிக்கு மேலும் வெறியூட்டுகிற வார்த்தைகளையே கூறியிருப்பார். ஆனால் நபி (ஸல்_) அவர்கள் தன்னுடைய தளபதிக்கு சொன்ணார்கள்!
ا نفذ على رسلك حتى تنزل بساحتهم، ثم ادعهم إلى الإسلام، واخبرهم بما يجب عليهم من حق الله فيه، فوالله لأن يهدي اللهبك رجلًا واحدًا خير لك من أن يكون لك حُمْر النعم[

அலீ! நிதானமாக செல்! அவர்களுக்கு இஸ்லாமிய அழைப்பை கொடு! அவர்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளை எடுத்துச் சொல்! அல்லாஹ் உன் மூலம் ஒருவருக்கு நோர்வழியை தருவது சிவப்பு ஒட்டகைகள் கிடைப்பதை விடச் சிறந்தது என்றார்கள்/

படைத்தளபதியை போராளியாக ஆக்குவதை விட அழைப்பாளியாக ஆக்குவதையே நோக்கமாக கொண்டார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,

முஸ்லிம்கள் இதை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

மென்மையான பணிவான அழைப்பையும் மீறி யுத்தம் நடைபெரும் என்றால் அந்த யுத்தத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) உத்தரவிட்டார்கள்.

உலகில் யுத்தங்களின் போது நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகளை திட்டவட்டமாக வரையறுத்தது இஸ்லாம்
ஜிஹாதை ஒரு கெட்ட வார்த்தையாகவும் தீவிரவாதமாகவும் சித்தரிக்கிறவர்கள் எவரும் ஜிஹாதிற்கு எதிரான நடவடிக்கைகளின் அக்கிரமத்தைப் பற்றி வாய் திறப்பதே இல்லை.

உண்மையில் ஜிஹாது என்பது மிக உன்னதமான போர் நியதிகளை கொண்ட யுத்த முறையாகும்.

இன்றைய நவீன போர் நியதிகள் உருவாவதற்கு பன்னூறு வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் போர் நியதிகளை வகுத்துக் கொடுத்ததுள்ளது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் திருக்குர் ஆனும் அறிவுரைகளாக சொன்னவற்றை இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் போர் விதிகளாக தொகுத்து கொடுத்தார்கள்.

பகீஹ் முஹம்மது அபுல் ஹஸன் ஷைபானி தான் உலகில் போர் விதிகளைப் பற்றிய முதல் சட்ட நூலை எழுதியவராகும். அவருடை சியருல் கபீர் சியருஸ் ஸஈர் ஆகிய இரு நூட்களில் போர் விதிகள் சிறப்பாக பேசப்பட்டிருக்கின்றன,
இதன் காரணமாகவே ஜெர்மனியில் அவரது பெயரில் ஒரு அமப்பு செயல்படுகிறது.
فالفقيه محمد أبي الحسن الشيباني أول من وضع قواعد ومبادئ وأحكام هذا العلم في كتابيه السير الكبير وكتابه السير الصغير، وتكريما له  أنشأت في ألمانيا جمعية تحمل اسمه.

போர் நியதிகள் குறித்து இஸ்லாம் கூறியிருக்கிற சட்ட ஒழுங்குகளைப் பற்றி பிரான்ஸீன் சட்ட அறிஞர்  லாம்பீர் கூறுகிறார்.

இஸ்லாமின் சட்ட அமைப்பில் உள்ள அடிப்படை அம்சங்கள் இன்றை தேவைக்கேற்ப சரியாக உருவாக்கப்படுமானால் முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் எந்த வகையிலும் குறைவில்லாத ஒரு சட்ட அமைப்பை நாம் உருவாக்க முடியும். இன்றைய மேற்குலகு உருவாக்கியிருக்கிற ஆபத்தான கருத்துக்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

யுத்தங்களில் இஸ்லாம் கடை பிடிக்க கூறுகிற அடிப்பைடைகளில் முக்கியமானது .

உயிர்களைப் பாதுகாப்பது முக்கியம் – அவன் எதிரியாக இருந்தாலும்

فقال تعالى (من أجل ذلك كتبنا على بنى إسرائيل أنه من قتل نفسا بغير نفسا أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم ر سلنا بالبينات ثم أن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون) المائدة الآية 32

சம்பந்தமில்லாதவர்களோடு சண்டையிடுவது தடுக்கப்பட வேண்டும்.

تعالى ( وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين, واقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين, فإن انتهوا فإن الله غفور رحيم,

அநீதி கலையப்பட வேண்டும்

ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها أسم الله كثيرا ولينصرن الله من ينصره أن الله لقوى عزيز) الحج39ـ 40
மோசடி உடன்படிக்கை மீறல்கள் தடுக்கப்பட வேண்டும்

: (إن شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون, الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون, فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون) الأنفال: 55: 58

பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவ வேண்டும்

تعالى (وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا آخر جنا من هذه القرية الظالم أهلها وأجعل لنا من لدنك وليا وأجعل لنا من لدنك نصيرا) النساء 75,

இஸ்லாமிய யுத்த வரையறைகளை மிக சிறப்பாக அமுல் படுத்திக் காட்டினார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள். அதில் மேலும் பல மனிதாபி மான அம்சங்களை அவர்கள் சேர்த்தார்கள். தவறுகளை கலைந்தார்கள்
முதியவர்கள் அடைக்கலம் தேடியோர் பெண்கள் சிறுவர்கள் கொல்லப்ப்படக்கூடாது
ففي وصية الرسول صلى الله عليه وسلم لقادة الجيش في كافة الغزوات قال (انطلقوا باسم الله وعلى بركة رسوله لا تقتلوا شيخًا ولا طفلاً ولا صغيرًا ولا امرأة ولا تغلوا "أي لا تخونوا"، وأصلحوا وأحسنوا إن الله يحب المحسنين)، وقال أيضًا: (لا تقتلوا ذرية ولا عسيفًا، ولا تقتلوا أصحاب الصوامع

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ وُجِدَتْ امْرَأَةٌ مَقْتُولَةً فِي بَعْضِ مَغَازِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ النِّسَاءِ وَالصِّبْيَانِ -  البخاري 3015

இந்த ஹதீஸில் இரண்டு செய்திகள் இருக்கின்றனன.

1.       போராட்டக்களத்திலும் கூட பெண்கள் சிறுவர்கள் பாதிக்கப்படக் கூடாது.
2.       அவ்வாறு தவறு நடை பெற்றுவிடுமானால் உடனே தலைவர் அதை கண்டித்து திருத்த வேண்டும்

நம்முடைய ஜனநாயக நாட்டில் இறந்த பசு மாட்டின் தோலை உரித்தார்கள் என்பதால் குஜராத் மாநிலத்தின் அகமதாபாதிலிருந்து 360 கிமீ தொலைவில் உள்ள உனா நகரில் நான்கு தலித்துகள் மீது தாக்குதல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியவர்கள், அதை மிக தைரியமாக ஊடகங்களிலும் பதிவேற்றம் செய்தனர்.

நாட்டு மக்களுக்கு பெறுப்பேற்றுள்ள பிரதமர் இதுவரை இது குறித்து வாய் திறக்க வில்லை/.

அதே போல மத்தியப் பிரதேசத்தில் இரண்டு முஸ்லிம் பெண்கள் மாட்டிரைச்சியை விற்பனைக்காக எடுத்துச் சென்ற போது ஒரு குழு அவர்களை தாக்கியுள்ளது. அந்த முஸ்லிம் பெண்களை கைது செய்த காவல் துறை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. உயர்ஜாதிப் பெண்கள் காவல் நிலையத்தில் அதிகாரிகளின் முன்னிலையிலேயே இரண்டு அப்பாவிப் பெண்களை தாக்கப்படுவதை தைரியமாக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் அதில் ஈடுபட்ட ஓரிருவரை கைது செய்த காவல் துறை அவர்களை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்துள்ளது

இது குறித்தும் நட்டின் உயர்பீடத்திலிருக்கிற பிரதமர் இதுவரை வாய் திறக்க வில்லை.

அபூபக்கர் ரலி அவர்கள் இன்னும் பல நியதிகளை வீரர்களுக்கு கூறினார்கள்

فهذا أبو بكر الصديق أول خليفة للمسلمين يوصي أمير أول بعثة حربية في عهده أسامة بن زيد فيقول: (لا تخونوا ولا تغلوا ولا تغدورا ولا تمثلوا ولا تقتلوا طفلاً صغيرًا ولا شيخًا كبيرًا ولا امرأة ولا تقطعوا نخلاً ولا تحرقوه ولا تقطعوا شجرة مثمرة ولا تذبحوا شاة ولا بقرة ولا بعيرًا إلا لمأكلة وسوف تمرون على قوم فرَّغوا أنفسهم في الصوامع فدعوهم وما فرَّغوا أنفسهم له)

, وفي وصيته لأميره على الجيش المتوجه الى الشام زاد أبو بكر على ما سبق فقال (ولا تقاتل مجروحًا فإن بعضه ليس منه، أقلل من الكلام فإن لك ما وعي عنك، وأقبل من الناس علانيتهم وكلهم إلى الله في سرائرهم ولا تحبس عسكرك فتفضحه ولا تهمله فتفسده، وأستودعك الله الذي لا تضيع ودائعه).


சித்தரவதையை பெருமானார் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்

عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اغْزُوا بِاسْمِ اللَّهِ وَفِي سَبِيلِ اللَّهِ وَقَاتِلُوا مَنْ كَفَرَ بِاللَّهِ اغْزُوا وَلَا تَغْدِرُوا وَلَا تَغُلُّوا وَلَا تُمَثِّلُوا وَلَا تَقْتُلُوا وَلِيدًا

நாயைக் கூட சித்த்ரவதை செய்யாதே!

فقال صلى الله عليه وسلم (إياكم والمثله ولو بالكلب العقور
மரங்களை தோட்டங்களை சிதைக்க கூடாது என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ قَتَلَ صَغِيرًا أَوْ كَبِيرًا أَوْ أَحْرَقَ نَخْلًا أَوْ قَطَعَ شَجَرَةً مُثْمِرَةً أَوْ ذَبَحَ شَاةً لِإِهَابِهَا لَمْ يَرْجِعْ كَفَافًا- احمد 21334

இவ்வாறு செய்தவன் தன் மீதான குற்றங்களுக்கு மேலதிக நன்மை கொண்டவனாக திரும்ப மாட்டான்.  அந்த அளவு இந்தக் குற்றங்கள் பெரியவை.

இன்று யுத்தங்களின் பெயரால் நாடு நகரங்கள் எவ்வாறு சிதைக்கப்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம்.

60 வருடங்களுக்கு முன் ஜப்பானுடைய ஹிரோஷிமா நகரத்தின் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டின் தாக்குதலில் அந்த நகரம் பல தலைமுறைகளுக்கு அப்பாலும் கதிர் வீச்சின் தாக்குதலுக்கு ஆளாகிவருகிறது.

இன்றைய நாகரீக உலகம் மனித உரிமை, சுத்ந்திரம் மனிதாபிமானம் என்றெல்லாம் வாய்கிழிய பேசுகிறது. யுத்தம் சண்டை என்று வருகிற போது தமது எதிர் நாடுகள் விசயத்தில் எந்த நியதியையு ம் கடை பிடிப்பதில்லை. வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்ற அடிப்படையில் பலமானவன் சொல்வதே நீதியும் நியாயமுமாகிறது, அதனால் அக்கிரமங்களும் அநீதிகளும் சட்டத்தின் அடிப்படையில் நீதியாயகவும் தர்மாமாகவும் ஆகிவிடுகின்றன,

இன்றைய அரசுகள் நடந்து கொள்ளும் நடைமுறைகளையும் இஸ்லாமிய ஜிகாதின் ஒழுங்குகளையும் ஒரு கணம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அறிவுடைய அனைவரின் மீதும் கடமையாகும்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த ஒரு தலைவர்யுத்தங்கள் காட்டு மிராண்டித்தனமாக நடந்ததாக சொல்லப் படுகிற காலத்தில் போர்க்களத்தில் எதிரி வீரர்களை சித்திரவதத செய்யக் கூடாது என்று தடுக்கிறார்.
நாகரீகமும் சுத்ந்திரமும் உச்சத்திலிருப்பதாக பேசப்படுகிற தற்காலத்தில் நிலமம எப்படி இருக்கிறது என்று யோசித்துப் பார்க்கிறோம்.

யுத்த காலத்தில் கடை பிடிக்கிற நெறிமுறைகளை கூட சமாதான காலத்தில் கடை பிடிக்காத அரசுகளை நாம் பார்க்கிறோம்.


போர்க்களத்தில் அல்ல; போர்க்களத்திற்கு வெளியே – குற்றம் செய்தவர்கள் அல்ல, குற்றச் சாட்டுக்கு உள்ளானவர்கள் எப்படி எல்லாம் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் பிடிபட்ட விசாரனைக் கைதிகளை அடைப்பதற்கென்றே உருவாக்கப் பட்ட குவாண்டமோ சிறைக் கூடங்கள் உலகின் படு மோசமான சித்திரவதைக் கூடங்களாக திகழ்ந்ததை இப்போது ஊடகங்களே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

அப்துர் ரஹ்மான் என்ற கைதி கையில் நகச்சுத்து வந்ததற்காக சிறை மருத்துவர்களிடம் கையை காட்டிய போது அவருக்கு மயக்க ஊசி கூட கொடுக்காமல் அவரது விரலையே வெட்டி விட்டார்கள் அமெரிக்கர்கள்.

நம்முடைய நாடு ஜனநாயக நாடு மனித உரிமைகளை மதிக்கிற நாடு என்றெல்லாம் போற்றப்படுகிறது, இங்கே காஷ்மீரில் நம்முடைய இராணுவம் வைத்திருக்கிற சித்திரவதைக் கூடங்களும் அங்கே செய்யப்படுகிற சித்திரவதைகளால் காஷ்மீர் மக்கள் அனுபவிக்கிற கொடுமைகளும் ஏராளமானவை, எளிதில் சொல்லி விட முடியாதவை. ஆண்மையை இழந்தவர்கள் , ஊணமுற்றவர்கள், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டும்.

காஷ்மீரில் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அங்கு 15 பேருக்கு ஒரு இராணுவ வீரர் என்ற அளவில் இராணுவத்தை நிறுத்தி வைத்திருக்கிற அரசும் மக்களை கடுமையாக ஒடுக்கி வருகிறது.
மக்கள் அத்தனை பேரையும் குற்றவாளிகா பார்க்கிறது.
காஷ்மீர் பற்றி தி ஹிந்து தமிழ் நாளேட்டில் வந்துள்ள ஒரு கட்டுரை காஷ்மீரின் நிலையை அந்த மக்களுக்கு நீதி மறுக்கப்படுவதையும் பிரதிபலிக்கிறது.

ஜனவரி 1989 முதல் 2016 ஜூன் வரை 94,391 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்; 22,816 பெண்கள் விதவைகள்ஆக்கப்பட்டிருக்கின்றனர்; 1,07,569 குழந்தைகள் அநாதைகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர்; 10,193 பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றனர் என்கிறது காஷ்மீர் ஊடக சேவையகம்.
2011-ல் காஷ்மீர் மனித உரிமை ஆணையம் வெளியிட்ட ஒரு செய்தி காஷ்மீரிகள் எதிர்கொள்ளும் ஆயுதப் படைகளின் ரத்த வெறியாட்டத்தை வெளியே கொண்டுவந்தது. வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா, பண்டிபூர், குப்வாரா மாவட்டங்களில் 38 இடங்களில் 2,730 அடையாளம் தெரியாத சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியது மனித உரிமைகள் ஆணையம். இந்தச் சடலங்கள் அனைத்தும் அடையாளம் காணப்படாத பயங்கரவாதிகள் என்ற பெயரில் பாதுகாப்புப் படையினரால் அழுத்தம் தரப்பட்டுப் புதைக்கப்பட்டடிருக்கின்றன.
இதே சம்பவம் இன்னொரு நாட்டில் நடந்திருந்தால் ஒட்டுமொத்த நாடும் கொந்தளித்திருக்கும். காஷ்மீர் என்பதாலேயே இந்தியா சகஜமாகக் கடந்து செல்ல முடிந்தது.
இந்திய அரசு இராணுவத்திற்கு தாம் நினைக்கும் எவர் வீட்டினுள்ளும் புகுந்து எவரையும் விசாரணை என்ற பெயரில் தூக்கிச் செல்லும், எவரையும் சுட்டுத்தள்ளும், யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லா அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறது.
தம்முடைய ஒரு போராட்டத் தலைவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காஷ்மீர் மக்கள் நடத்தி வரும் துப்பாக்கி சூட்டில் இதுவரை சுமார் 60 க்கும் மேற்பட்டோர் அதிகாரப்பூர்வமாக பலியாகி யுள்ளனர். அவர்களின் பெரும்பாலோர் இளைஞர்கள்
கூட்டத்தை கலைப் பதற்காக அரசு பயன் படுத்திய பெல்லட் துப்பாக்கிகள் காஷ்மீரிகளை கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கியிருக்கிறது
பெல்லட் துப்பாக்கியில் சிறிய பெல்லட்டுகள் குறைந்தது 100-வது இருக்கும். அவை காரீயத்தினால் செய்யப்பட்டவை. பால் பேரிங் போலவோ அல்லது வேறு வடிவத்திலோ பெல்லட்டுகள் இருக்கும். பெல்லட் துப்பாக்கியை ஒருமுறை இயக்கினால் 100 மீட்டருக்கு குண்டுகளை வீசி எறியும்.
பெல்லட் துப்பாக்கிகளைப் குறிப்பிட்ட தூரத்தில் இருந்து இதை பயன்படுத்தினால் மட்டுமே சேதம் ஏற்படாது. அருகாமையில் பயன்படுத்தினால் கண், காது போன்ற பாகங்கள் பாதிக்கப்படலாம். பெல்லட்டுகள் மெல்லிய திசுக்களை துளைத்துச் செல்லும். பெல்லட் ரக துப்பாக்கிகளை தேவை ஏற்படும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுவும் இடுப்புப் பகுதிக்கு கீழ் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் இதில் எந்த நியதியையும் கடை பிடிக்காத நம்முடைய இராணுவம் காஷ்மீரிகள் என்ற ஒற்றைக் காரணத்தில் அவர்கள் மீது கண் மூடித்தனமான தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனால் . பல்லாயிரக்கணக்கானோர் ஊனமுற்றவர்களாகாவும் கண்பார்வையற்றவர்களாகவும் ஆகியுள்ளனர்,
இந்தப் பெரும் தாக்குதல்  குறித்து உலக நாடுகள் கேள்வி கேட்க தொடங்கிய பிறகு சர்வசாதராணமாக 10 நாட்கள் கழித்து காஷ்மீருக்கு சென்ற உள்துறை அமைச்சர் அதை பயனபடுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

காஷ்மீரிகள் கல் எறிகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இதுவரை கல்லெறிந்ததில் பாதிக்கப்பட்டவர்கள் 600 க்கும் குறைவான வீரர்களே என்பதையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட உயிரிழந்த மக்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

காஷ்மீரிகளை மனிதர்களாக கருதி இந்திய இராணுவம் நடந்து கொள்ள வேண்டும் என இந்திய மக்களாகிய நாம் நமது இராணுவத்தை கேட்டுக் கொள்கிறோம்.

மத்தியை ஆட்சியை செய்கிற அரசு மதமாச்சரிய கண்ணோட்டத்தோடு காஷ்மீர் விவகாரத்தை அணுக வேண்டாம். அது நம் நாட்டுக்கு நன்மை பயக்காது என்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லையைப் பாதுகாக்கிற நம்முடை வீரர்களை போற்று கிற அதே நேரத்தில் அரசியல் பலிகடாவாக இராணுவம் பயன்படுத்தப் படக்கூடாது என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

போர்க்கால நியதிகளைக் கூட கடந்து கடுமையான சூழல் காஷ்மீரில் நிலவுவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய அரசை இந்திய முஸ்லிம்களாகிய நாம் கேட்டுக் கொள்கிறோம்.

அல்லாஹ் காஷ்மீரிகளுக்கு நிவாரணத்தையும் அமைதியையும் தந்தருள்வானாக!

காஷ்மீரிகள் அமைதிக்கான வழி வகைகளை யோசிக்க வேண்டும். நிலமையை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருப்பதை விட அமைதி நிம்மதிக்கான சாத்தியப்பட்ட வழி வகைகளை யோசிக்க வேண்டும். அல்லாஹ் அதற்கேற்ற சிந்தனையை காஷ்மீரிகளுக்கு தந்தருள்வானாக!






1 comment:

  1. கண்ணீருடன் உருவாக்கப்பட்ட ஜும்ஆ உரை கலங்கிய உள்ளத்துடன்....

    ReplyDelete