வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Friday, July 17, 2015

பெருநாள் சிந்தனை. மனம் விரும்புதே!


அனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்கள்!
அல்லாஹ் இன்றைய புனிதமான மகிழ்ச்சியை என்றும் தந்தருள்வானாக!

இந்தப் பெருநாளில் நாம் முக்கியமாக எண்ணிப்பார்க்க வேண்டிய ஒரு செய்தி,
நம்முடை தீனிய வாழ்க்கை பெரிதும் குழப்பத்திற்கு ஆளாகியிருக்கீறது.
இதற்கு இரண்டு காரணங்கள்
ஒன்று கொள்கையில் ஏற்படுகிற தடுமாற்றங்கள்

இரண்டாவது மனோ இச்சைப்படி செயல்படும் போக்கு அதிகரித்திருப்பது. 

இந்த மாதம் முழுவதும் நாம் நோன்பு நோற்றோம்.
நோன்பு மார்க்கத்தின் மிக முக்கியமாக வலியுறுத்தப்பட்ட கடமை.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ(183)
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ مُرْنِي بِأَمْرٍ آخُذُهُ عَنْكَ قَالَ عَلَيْكَ بِالصَّوْمِ فَإِنَّهُ لَا مِثْلَ لَهُ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ , يَقُولُ الصِّيَامُ : أَيْ رَبِّ , إِنِّي مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ فَشَفِّعْنِي فِيهِ , وَيَقُولُ الْقُرْآنُ : رَبِّ , إِنِّي مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ , فَيُشَفَّعَانِ " .
நமது இந்தப் பட்டினிமுடிந்தவர்கள் முடியாதவர்கள் பெரியவர் சிறுவர்மேற்கொண்ட பட்டினியால் அல்லாஹ்வுக்கு எந்த நன்மையும் சேர்ந்து விடப்போவதில்லை.
நாம் செய்கிற அனைத்து வணக்கஙளும் நமது நன்மைக்காகவே யாகும்.
நோன்பு நமது மனதை கட்டுப்படுத்தியது.
ஒரு நிய்யத்திற்கு நாம் கொடுத்த மரியாதை அலாதியானது.
அரசுப் பொறுப்பேற்கிற போது ஆர்ப்பாட்டமாக அமைச்சர்கள் ஏற்கிற உறுதிமொழிகளை விட அந்த சாமாணிய நிய்யத் அபரிமிதமான மரியாதையை கொண்டிருந்தது.
பசித்தது. யாரும் பார்க்கவில்லை என்றாலும் நாம் உணவைத் தொடவில்லை.
கடும் வெயில் தாகம் வாட்டியது, தண்ணீர் தேவை என்றாலும் அதை நாம் நாடவில்லை.
எப்போதும் எதை நோக்கியாவது பரபரத்துக் கொண்டிருந்த நம்முடைய மனம் ஒரு கட்டுப்பாட்டில் இருந்தது. தீயைதைப் பார்க்க வில்லை. கேட்கவில்லை. பேசவில்லை.
இந்த மனக்கட்டுப்பாட்டை தொடர்ந்து நாம் கடை பிடித்தாக வேண்டும்.
நம்முடைய மனம் இறைன் நமக்கு கொடுத்த ஒரு மாபெரும் சக்தி
மனதில் ஏற்பட்ட தீர்மாணம் தான் மகத்தான செயல்களை செய்ய மனிதனைத் தூண்டியது.
இஸ்லாம் தோன்றிய காலத்தின் மாபெரிய வல்லரசாக இருந்த பாரசீகத்தின் சாஸானியப் பேரரசின் தலை நகராக மதாயின் நகரம் இருந்தது. செல்வச் செரூக்கும் படைபலமும் பொருந்திய அந் நகரத்தை நோக்கி முஸ்லிம் படை வீரர்கள் விரைந்து கொண்டிருந்தனர். இடையே திஜ்லா– டைகிரிஸ் – நதி குறுக்கிட்டது. அப்போது வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.
படைத்தளபதி சஃது பின் அபீ வக்காஸ் ரலி தயங்கி நிற்கவில்லை. ஹஸ்புனல்லா சொல்லி ஆற்றில் இறங்கினார். படையும் இறங்கியது. ஒரு லோட்டா கூட சேதமில்லாமல் அக்கறையை கடந்தது முஸ்லிம் படை பிறகு அவர்கள் மதாயின் நகரத்தை வெற்றி கண்டனர்.
أمر سعد المسلمين أن يقولوا: حسبنا الله ونعم الوكيل.. ثم اقتحم بفرسه دجلة, واقتحم الناس وراءه, لم يتخلف عنه أحد, فساروا فيها كأنما يسيرون على وجه الأرض حتى ملؤا ما بين الجانبين, ولم يعد وجه الماء يرى من أفواج الفرسان والمشاة, وجعل الناس يتحدثون وهم يسيرون على وجه الماء كأنهم يتحدون على وجه الأرض؛ وذلك بسبب ما شعروا به من الطمأنينة والأمن, والوثوق بأمر الله ونصره ووعيده وتأييده
மனதில் ஒன்றை உறுதியாக தீர்மாணித்துக் கொண்டால் ஆறு கூட மணல் மேடு போல ஆகிவிடுகிறது.
உலகில் சாமாணிய மக்களால் நினைத்தும் பார்க்க முடியாத பல காரியங்களை சாதனை மனிதர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள் அனைத்திற்கும் காரணம் அவர்களுடைய  மன வலிமை.யேயாகும்.

மனிதர்களின் மகத்தான பலமாக இருக்கிற மனம் தான் மனிதனின் மாபெரும் ஆபத்தாகவும் இருக்கிறது.
மனதை தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறவர்கள் வெற்றி பெறுகிறார்கள். மனம் போன் போக்கில் நடக்கத் தொடங்குகிறவர்கள் தங்களுடை வாழ்ழையும் அந்தஸ்த்தையும் இழப்பார்கள்
எத்தனை பெரிய மனிதர்களை மனோ இச்சை வீழ்த்தியிருக்கிறது.
·         பிர் அவ்னை வீழ்த்தியது
·         காரூனை சாய்த்தது.
·         அபூஜஹ்லை அழித்தது.
நபிமார்களோடு இவர்களுக்கு நெருக்கமான தொடர்பு இருந்த போதும் கூட இவர்கள் அழிந்தார்கள்.
அதே போல எத்தகைய அருமையான சந்தர்பத்தை மனோஇச்சைக் காரர்கள் தவறவிடுவார்கள்.
அரபு நாட்டில் காதலுக்கு உதாரணமாக இருந்த லைலா மஜ்னு கதையின் நாயகன் கைஸ். லைலாவின் மீது பித்துக் கொண்டு அலைந்த போது , அவனுடைய பெற்றோர் அவனுக்கு நல்ல சிந்தனை ஏற்பட கஃபாவுக்கு அழைத்துச் சென்று துஆ செய்ய ஏற்பாடு செய்தனர். இந்தப் பெரிய ஏற்பாட்டில் கஃபாவுக்கு சென்று முல்தஸிமின் கதவைப் பிடித்துக் கொண்ட கைஸ் இப்படி கேட்டான்.
إلهي تبت من كل المعاصي ولكن حب ليلي لا أتوب
எது வாழ்க்கையை அழிக்குமோ அதையே வரமாக கேட்கிற பைத்தியக் காரச்
சிந்தனை மனோ இச்சைக்கு அடிமைப்படுவதன் விளைவேயாகும்.
கைஸ் ஹஸன் ரலியின் கால கட்டத்தில் வாழ்ந்தவன். தனக்கு கிடைத்த ஆட்சிப் பொறுப்பை முஸ்லிம் உம்மத்தின் நன்மை கருதி முஆவியா ரலியிடம் கொடுத்து விட்டதாக ஹஸன் ரலி சொல்லிக் கொண்டிருந்தார்கள். இடையே புகுந்த கைஸ் கேட்டான். நீங்கள் அரசை ஏன் லைலாவிடம் கொடுத்திருக்க கூடாது?
அப்போது ஹஸன் ரலி சொன்னார்கள் أنت مجنون
இத்தகையோர் எந்தக் கட்டத்திலும் நல்வழி பெறுவது சாத்தியமில்லை.
தம் மனோ விருப்பப்படியான் வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறவர்கள அறிவை இழப்பார்கள். உண்டு கழிப்பதையும் சுகித்து வாழ்வதையுமே வாழ்க்கை என்று நினைப்பார்கள். அதன் பின் பிளைவை பின்னர் அனுபவிப்பார்கள்.
رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ(2)ذَرْهُمْ يَأْكُلُوا وَيَتَمَتَّعُوا وَيُلْهِهِمْ الْأَمَلُ فَسَوْفَ يَعْلَمُونَ(3)
நல்ல சாப்பாடு  சுகமான வாழ்வு என்பது மட்டுமே மனோ இச்சை கொண்டவர்களின் குறிக்கோளாக இருக்கும்.  இத்தகைய இயல்பை காபிர்களின் இயல்பு என்று குர் ஆன் குறிப்பிடுகிறது.
இந்த இயல்பு கம்பீரமான மனிதனை வெகு சீக்கிரத்தில் பல்லத்தில் தள்ளிவிடும்.
விலங்குகள் தான் மனம் விரும்பியபடி வாழ்பவை
குரங்குபிடிக்கிறவன் குரங்கின் மனோ இச்சையைப் பயன்படுத்தியே அதை கைப்பற்றுகிறான்.
வாய் குறுகிய வயிறு பெருத்த பானைக்குள் குரங்குக்குப் பிடித்த சட்டென்று வெளியே எடுக்க முடியாத பொருட்களை போட்டு வைப்பார்கள். அதை எட்டிப் பார்க்கிற குரங்கு அதை வெளியே இழுக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது பிடித்து விடுவார்கள். உள்ளே இருக்கிற தீணியின் மீது மனதைப் பறி கொடுக்கிற குரங்கு தப்பிக்க முயற்சி செய்யாது.
உணவின் மீதான ஆசை குரங்கை வீழ்த்துகிறது என்றால் காமம் கம்பீரமான  யானையை படுகுழிக்குள் தள்ளிவிடுகிறது.
யானையை பிடிக்க பழக்கப்படுத்தப்பட்ட யானை அதன் மீது சல்லாபமாக உரசவிடுவார்கள். அந்த உரசலில் மயங்கி தன் இடத்தைஇனத்தை விட்டு தனியே பிரிந்து வருகிற யானையை கும்கி யானை குழிக்குள் தள்ளிவிடும்.
மனோ விருப்பத்திற்கு கட்டுப்பட்டவன் தான் செய்கிற அருவருப்பான செயலை அழகானதென்று கருத ஆரம்பித்து விடுவான்.
وقال عبد الله بن عون البصري :"إذا غلب الهوى على القلب،استحسن الرجل ما كان يستقبحه". 
மனோ இச்சைக்கு ஆட்பட்டவர்கள் தமக்கு கிடைத்த வெற்றியை இழப்பார்கள்.
ஹ்ஜ்ரி 600 லிருந்து ஒரு ஐம்பது ஆண்டு காலம் முஸ்லிம்களை செங்கிஸ்கான் அழித்தொழித்தான். பக்தாது மட்டும் எஞ்சியிருந்தது, புகாரா சமர்கந்து குராஸான் போன்ற பகுதிகளில் சிறப்பு மிக்க வாழ்க்கைக்குப் பிறகு முஸ்லிம்கள் சீரழிந்து போனார்கள். செங்கிஸ்கானுடைய இனமான தாத்தாரியர்களை எதிர்த்து மூச்சு விடக்கூட முஸ்லிம்கள் பயந்தார்கள்.
إذا قيل لك إن التتر إنهزموا فلا تصدق
ஒரு சிறு படையை வைத்துக் கொண்டு செங்கிஸ்கானை எதிர்த்து ஐய்னு ஜாலூத் யுத்த்தில் ரமலான் 25 நாள் வெள்ளிக்கிழமை ஜலாலுத்தீன் குவாரிஜ்மி வெற்றி கொண்டார்.
மபெரும் செல்வங்களின் புதையல் முஸ்லிம்களுக்கு கிடைத்தது, அந்தப் பெரும் படையில் பங்கேற்ற மன்னர்கள் கொள்ளைப் பொருளுக்கு அடித்துக் கொண்டனர். மாபெரும் வெற்றி கண்ட முஸ்லிம்களின் படை சிறுமை கண்டது. ஜலாலுத்தீனை சிந்து நதி வரை ஓட ஒட விரட்டி அடித்தான் செங்கிஸ்கான். தலை தப்பினால் போதும் என அவர் தப்பி ஓடினார்.
இரண்டு தலைவர்களின் மனோ இச்சை ஒரு மாபெரிய வெற்றியை அர்த்தமற்றதாக்கிவிட்டது. அதுவும்  வெற்றி தேவைப் பட்ட ஒரு முக்கிய சந்தர்ப்பத்தில். இந்த இழப்பின் அடுத்த விளைவு என்ன தெரியுமா? அப்பாஸிய கிலாபத் சரிந்தது. இஸ்லாமிய பேரரசின் தலை நகரன பக்தாது தாதாரியப் படைகளால் துவம் சம் செய்யப்பட்டது.  வரலாற்றின் வலி மிகுந்த நாட்கள் அவை.   
மனோ இச்சைக்கு கட்டுப்படுவதால் ஏற்படுகிற தீய விளைவுளில் ஒரு சில முக்கிய விளைவுகள்
·         மனோ இச்சைக்கு ஆட்பட்டவனுக்கு குறிப்பிட்ட கொள்கை ஒன்றும் இருக்காது. ஆதாரப்பூர்வமான செய்திகளை கூட அற்பமான காரணங்களைச் சொல்லி நிராகரிப்பான்.
·         மனோ இச்சை கொண்டவன் தன் சமூகத்தை எதிரிகளுக்கு காட்டிக் கொடுப்பான்.
·         மனோ இச்சை கொண்டவன் தன் சமூகத்தை ஒற்றுமைப் படுத்துவதற்கு பதிலாக பிளவு படுத்துகிற வேளையிலேயே ஈடுபடுவான் 
·         திருக்குர் ஆன் மனிதர்களை எச்சரிக்கிறது, மனோ இச்சை நரகத்திற்குள் தள்ளிவிடும்.
فَأَمَّا مَنْ طَغَى * وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا * فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى} (النازعـات:37ـ 39 ) . 

அதே குர் ஆன் நமக்கு ஒரு நற்செய்தியையும் சொல்லுகிறது.

{وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى * فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى} (النازعـات:40،41

இந்த ரமலானில் நமது மனோ இச்சையை தடுத்து பக்குவப்படுத்தி நாம் பழக்கப்பட்டிருக்கிறோம்.
இனி வரும் காலங்களில் அந்தப் பயிற்சியை நடை முறைப்படுத்துவோம். நம்முடைய இன்றைய வாழ்வியல் மனோ விருப்பத்தை மையமாக கொண்டதாகவே இருக்கிறது.
நமக்கு எது பிடிக்கிறதோ அது வே முக்கியம்.
கொள்கையிலும் கூட அப்படித்த்தான் இருக்கிறோம். ஆய்ந்தறிந்து ஒரு கோட்பாட்டை பின்பற்றுவதில்லை.  போதிய சிந்தனையில்லாமல் நமக்கு பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக ஒரு குழுவை – அது தப்பான வழியில் சென்றாலும் உறுதியாக ஆதரிக்கிற போக்கு முஸ்லிம் சமூகத்தில் வலுத்து வருகிறது.
நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும் ஒரு நல்ல நாளில் அதிகமாக குப்பைகளை கிளர வேண்டாம் என்பதற்காக தவிர்க்கிறேன்.

சுருக்கமாக நாபகத்தில் வையுங்கள் இன்றைய இளைஞன் ஏதாவது ஒரு இயக்கத்தில் அமைப்பில் இருப்பதை விரும்புகிறான். அந்த அமைப்பிற்கான தேர்வும் ஆதரவும் அவனது சொந்த மனோ விருப்பத்தின் அடிப்படையிலேயே அமைகிறது. முன்னோடிகளின் வழி காட்டுதலின் படி அல்ல.
ஹதீஸ்களை மருக்கிற – குர் ஆனில் சந்தேகப்படுகி ஒரு கூட்டம் உருவாகியிருக்கிறது. தங்களுடைய ஆள் சொன்னான் என்பதற்காக இதன் பாரதூர விளைவுகளை ஆராயம்ல் ஒரு கூட்டம் அவர்கள் பின்னே சென்று கொண்டிருக்கிறது.
ஒருத்தருக்கு ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டம் பிடித்திருக்கிறது என்றால் அவர் அதை மட்டுமே மார்க்கமாக நினைக்கீறார்.
அதே போல ஒரு வருக்கு ஜகாத்தை மொத்தமாக ஒரு நபருக்கு கொடுப்பது பிடித்திருந்தது என்றால் அவர் அதை மட்டுமே மார்க்க மாக பார்க்கிறார். மற்றவர்கள் ஜகாத் கொடுப்பதை விமர்ச்சிக்கிறார்.
இத்தகைய மனப்போக்கு கொண்டவர்கள் உண்மையில் மார்க்கத்தை பின்பற்றுவதில்லை தமது மனோ விருப்பத்தையே மார்க்கமாக்கி கொண்டிருக்கிறார்கள்
அதே போல் நமது வாழ்க்கை அமைப்பின் ஒவ்வொரு விசயமும். வீட்டை பராமரித்தலிலிருந்து திருமணம் மற்ற வைபவங்கள் சமூக நலச் செயல்பாடுகள் அனைத்திலும் தம் மனோ விருப்பத்தையே பிரதானப்படுத்துகிற போக்கை பார்க்கிறோம்.
பெருமக்கள் இருவர் சொன்ன கருத்தை சொல்லி நிறைவு செய்கிறேன்.
قول علي-رضي الله عنه- : إن أخوف ما أخاف عليكم اتباع الهوى وطول الأمل،أما اتباع الهوى فيصد عن الحق ، وأما طول الأمل فينسي الآخرة.
 وقال رجل للحسن البصري: يا أبا سعيد أي الجهاد أفضل؟ قال: جهاد هواك.
இந்த ஈகைத் திருநாளில் இந்தச் செய்தியை நாபகத்தில் இருத்திக் கொள்வோம். இன்றைய நமது சமுதாயத்தின் பெரும் பிரச்சனை ஒரு பக்கத்தில் மனோ இச்சைய மார்க்கமாக ஆக்கிக் கொண்ட போக்கும் இன்னொரு பக்கம் மார்க்கம் எனறெல்லாம் இல்லாமல் வாழ்க்கையையே மனோ விருப்பத்திற்கு அமைத்துக் கொள்வதுமாகும்.
நாம் நமது மனோ இச்சையோடு போராடி அதை ஒரு கட்டுப்பாட்டுகுள் – அல்லாஹ் ரஸுல் தந்த தீனின் எல்லைக்குள் நிறுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
அல்லாஹ் இத்தகை தீய சூழலிருந்து நம் உம்மத்தை பாதுகாப்பானாக! ரமலானில் நாம் பழக்க்கப்படுத்திக் கொண்ட படி மனோ இச்சைய கட்டுப்படுத்தி வாழ்கிற தவ்பீக்கை தந்தருள்வானாக!
மீண்டு ஒரு முறை ஈது முபாரக!


No comments:

Post a Comment