வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 21, 2014

வழிகாட்டுவோம்

சமிபத்தில் ஒரு குடும்ப பிரச்சினை தொடர்பாக சம்பந்தப் பட்டவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்,
வசதியான குடும்பம்.
நிறுவனத்தை பராமரிப்பதில் பாட்டனாருக்கும் பேரனுக்கும் தகறாறு முற்றி நிற்கிறது.
இடையில் தலையிட்ட குடுமபத்தின் பெண்மணி ஒரு கருத்தை சொன்னார்.
“நீங்கள் பெரியவராக இருந்தும். பேரனுக்கு செல்லத்தையும் செல்வத்தையும் கொடுத்தீர்கள். எது விசயத்தில் யார் விசயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல் செய்ய வில்லை.  “
எனக்கு சூரீரென்று உறைத்த பேச்சு அது.
நம்மில் ஒவ்வொருவருடைய கடமை, நமது பிள்ளைகளுக்கு நமது பணியாளர்களுக்கு, நம்மைச் சார்ந்தவர்களுக்கு வழிகாட்டுதல் செய்வது.
அன்பையும் செல்வத்தையும் விட அதிக முக்கியப் பயன் தரக்கூடியது.
ஒவ்வொரு தொழுகையிலும் நாம் அல்லாஹ்விடத்தில் வழிகாட்டுமாறுதான் கேட்கிறோம்.
ஒவ்வொரு ரக அத்திலும் பாத்திஹா சூரா ஓதவேண்டும்.
பாத்திஹாவின் பிரதான அம்சமே!
 என்பது தான்اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ(6

 (பாத்திஹா சூராவை விளக்கவும் )

அல்லாஹ்விட்த்தில் சோறுதா! வேலை தா ! காசு தா! சுகம் தார் என்று எதையும் கேட்பதில்லை. ஹிதாயத்தை தா என்று கேட்கிறோம்.

ஏனெனில் எல்லாவற்றையும் விட ஹிதாயத் முக்கியம். எல்லாம் இருந்தும் ஹிதாயத்தை இல்லை எனில் அனைத்தும் வீண்.

வழிகாட்டுதலை – மட்டுமே நாம் அல்லாஹ்விடம் கேட்கிறோம் என்பது வழிகாட்டுதல் எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்துகிறது.

அதே நேரத்தில் இன்னொரு முக்கிய செய்தியும் கவனத்திற்குரியது.

சோறு தண்ணீர் காசு சுகம் ஆகியவற்றை அல்லாஹ் அனைவருக்கும் கொடுக்கிறான்,. ஹிதாயத்தை அவன விரும்புகிறவர்களுக்கு கொடுக்கிறான்.

அல்லாஹ் அவன் விரும்புகிறவர்களுக்கு கொடுக்கிற ஹிதாயத்தை நாம் அல்லாஹ்விடம் கேட்கிறோம் என்பது நாம் நேசிக்கிறவர்களுக்கு நாம் செய்கிற பெரிய நன்மை வழிகாட்டுதலை தருவது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது பிள்ளைகள் நமது சகோதரர்கள் நம்மைச் சார்ந்த மற்ற யாரின் மீதும் நாம் அன்பு வைத்திருக்கிறோம் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதன் சரியான அடையாளம் அவர்களுக்கு நம்மால் முடிந்த வழிகாட்டுதலை செய்வதாகும்.

எங்களுடைய உஸ்தாது பி எஸ் பி ஜைனுல் ஆபிதீன் ஹழ்ரத் சொல்வார்கள்.  
“மல ஜலம் கழித்த பிறகு எப்படி சுத்தம் செய்வது என்பதை தம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு தந்தை சொல்லிக் கொடுக்க வேண்டும்”

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடை மடியில் வளர்த்த உம்மு சலமா அம்மாவின் பிள்ளைகளை உண்வருந்தும் போது பக்கத்தில் உட்கார வைத்து

يَا غُلامُ سَمِّ اللَّهَ ، وَكُلْ بِيَمِينِكَ ، وَكُلْ مِمَّا يَلِيك
என்று சொல்லிக் கொடுப்பார்கள்.

عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : كُنْتُ غُلامًا فِي حِجْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَفِي رِوَايَةٍ : كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَا غُلامُ سَمِّ اللَّهَ ، وَكُلْ بِيَمِينِكَ ، وَكُلْ مِمَّا يَلِيكَ " فَمَا زَالَتْ تِلْكَ طُعْمَتِي بَعْدُ . هَذَا حَدِيثٌ ، حَسَنٌ ، عَالٍ ، مُتَّفَقٌ عَلَى صِحَّتِهِ . أَخْرَجَهُ الْبُخَارِيُّ فِي الأَطْعِمَةِ

 பெருமானார் ஸல் எதையெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள் ?

முன்னதாக ஆடைய தூக்காதே!

عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ حَاجَةً لَا يَرْفَعُ ثَوْبَهُ حَتَّى يَدْنُوَ مِنْ الْأَرْضِ
மல ஜலம் கழிக்கும் – சுத்தம் செய்யும் முறை
عَنْ سَلْمَانَ قَالَ قِيلَ لَهُ لَقَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ كُلَّ شَيْءٍ حَتَّى الْخِرَاءَةَ قَالَ أَجَلْ لَقَدْ نَهَانَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ بَوْلٍ وَأَنْ لَا نَسْتَنْجِيَ بِالْيَمِينِ وَأَنْ لَا يَسْتَنْجِيَ أَحَدُنَا بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ أَوْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ عَظْمٍ

மாதவிடாய் முடிந்த பிறகு வாசனைப் பொருளை பயன் படுத்து!.
عَنْ عَائِشَةَ أَنَّ امْرَأَةً سَأَلَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ غُسْلِهَا مِنْ الْمَحِيضِ فَأَمَرَهَا كَيْفَ تَغْتَسِلُ قَالَ خُذِي فِرْصَةً مِنْ مَسْكٍ فَتَطَهَّرِي بِهَا قَالَتْ كَيْفَ أَتَطَهَّرُ قَالَ تَطَهَّرِي بِهَا قَالَتْ كَيْفَ قَالَ سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِي فَاجْتَبَذْتُهَا إِلَيَّ فَقُلْتُ تَتَبَّعِي بِهَا أَثَرَ الدَّمِ- البخاري
நகம் வெட்டுவது எப்படி?
ஒரு வீட்டின் கதவை தட்டுகிற போது எப்படி நடந்து கொள்ளனும்? என்பதெற்கெல்லாம் பெருமானார் நமக்கு வழிகாட்டினார்கள்.

இத்தகைய வழி காட்டும் இயல்பு நாம் பிறருக்கு செய்யும் மிகப்பெரும் கொடையாகும்.

சமீபத்தில் ஒரு வியாபாரியிடமிருந்து கிடைத்த செய்தி.
மார்க்கெட்டில் நன்றாக தொழில் செய்த வியாபாரி ஒருவர் நொடிந்து போனார். காரில் சென்று கொண்டிருந்தவர் கால நடையாக ஒரு சாலையில் நடந்து கொண்டிருந்தார். அவருடைய முன்னாள் தொழில் நண்பர் – காரில் சென்று கொண்டிருந்தவர் அவரைப் பார்த்து காரை அருகில் நிறுத்தி. காருக்குள் ஏறுமாறு சொன்னார், நலன் விசாரித்தார். பல செதிகளையும் விசாரித்த பிறகு இரண்டு இலட்ச ரூபாய் பணத்தை  எடுத்துக் கொடுத்து “ இன்ன இடத்தில் தோட்டங்கள் குத்தகைக்கு கிடைக்குது, அதை வாங்கி தக்காளி பயிர் பண்ணு ! இப்ப தக்காளிக்கு நல்ல மதிப்பு இருக்குது என்று சொன்னார்.

திடீரென கிடைத்த உதவியில் திக்கு முக்காடிய அவர் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர் சொன்ன மாதிரி நிலத்தை குத்தகைக்கு எடுத்து தக்காளி பயிற்ட்டார். சமீபத்தில் தக்காளி விலை வானைத்த தொட்டதல்லவா ? அந்த சந்தர்ப்பத்தில் நொடிந்து போன அந்த வியாபாரி  மார்க்கெட்டை கட்டுப்படுத்துமளவுக்கு பெரும் வியாபாரியாக மாறினார்.

அவரைப் பெருத்த வரை இரண்டு இலட்ச ரூபாய் உதவி கிடைத்ததே அதை விடப் பெரியது  அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அந்த தொழில் தோழர் வழிகாட்டினார் அல்லவா அதுவேயாகும்.

மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது மேல் என்று ஒரு பழ மொழி இருக்கிறது.

மீன் கொடுத்தால் ஒரு வேளை உணவுக்கு மட்டும் தான் பயன்படும். மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால் வாழ்நாள் முழுவது பயன்படும் அல்லவா?

தன்னிடம் யாசகம் கேட்டு வந்த ஒரு தோழருக்கு பெருமானார் வழி காட்டியதை பாருங்கள்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَجُلًا مِنْ الْأَنْصَارِ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ فَقَالَ أَمَا فِي بَيْتِكَ شَيْءٌ قَالَ بَلَى حِلْسٌ نَلْبَسُ بَعْضَهُ وَنَبْسُطُ بَعْضَهُ وَقَعْبٌ نَشْرَبُ فِيهِ مِنْ الْمَاءِ قَالَ ائْتِنِي بِهِمَا قَالَ فَأَتَاهُ بِهِمَا فَأَخَذَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ وَقَالَ مَنْ يَشْتَرِي هَذَيْنِ قَالَ رَجُلٌ أَنَا آخُذُهُمَا بِدِرْهَمٍ قَالَ مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا قَالَ رَجُلٌ أَنَا آخُذُهُمَا بِدِرْهَمَيْنِ فَأَعْطَاهُمَا إِيَّاهُ وَأَخَذَ الدِّرْهَمَيْنِ وَأَعْطَاهُمَا الْأَنْصَارِيَّ وَقَالَ اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَامًا فَانْبِذْهُ إِلَى أَهْلِكَ وَاشْتَرِ بِالْآخَرِ قَدُومًا فَأْتِنِي بِهِ فَأَتَاهُ بِهِ فَشَدَّ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُودًا بِيَدِهِ ثُمَّ قَالَ لَهُ اذْهَبْ فَاحْتَطِبْ وَبِعْ وَلَا أَرَيَنَّكَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا فَذَهَبَ الرَّجُلُ يَحْتَطِبُ وَيَبِيعُ فَجَاءَ وَقَدْ أَصَابَ عَشْرَةَ دَرَاهِمَ فَاشْتَرَى بِبَعْضِهَا ثَوْبًا وَبِبَعْضِهَا طَعَامًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَجِيءَ الْمَسْأَلَةُ نُكْتَةً فِي وَجْهِكَ يَوْمَ الْقِيَامَةِ إِنَّ الْمَسْأَلَةَ لَا تَصْلُحُ إِلَّا لِثَلَاثَةٍ لِذِي فَقْرٍ مُدْقِعٍ أَوْ لِذِي غُرْمٍ مُفْظِعٍ أَوْ لِذِي دَمٍ مُوجِعٍ - ابودلوود

நமது பிள்ளைகளுக்கு வாழும் வழி முறையை நாம் வழி காட்ட வேண்டும். ஒவ்வொரு விசயத்திலும்.
·         படிப்பது
·         பழகுவது
·         உரையாடுவது
·         தனி மனித ஒழுக்கங்கள்
·         வீடு சார்ந்த பழக்கங்கள்
·         சமூக பண்பாடுகள் அனைத்திலும்.

இந்தியாவின் தலை சிறந்த தொழில் அதிபரான பிர்லா குழுமங்கள் இந்தியாவில் இன்றும் மரியாதைக்குரிய வியாபார நிறுவன்ங்களாகும்.
அதனுடைய தற்போதைய தலைவர் குமாரமங்களம் பிர்லா ஒரு பேட்டியில் சொல்கிறார்.
எவ்வளவு வியாபாரம் செய்தாய் என்பதை விட எப்படி வியாபாரம் செய்தாய என்பதே முக்கியம் என எங்களது தந்தை சொல்வார். அதனால் எங்களுடைய வியாபார கோட்பாடுகளில் பண்பாடு ஒரு முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

ஒரு தந்தையின் வழி காட்டுதல் ஒரு பெரிய நிறுவனத்திற்கு அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு எத்தகைய உன்னத இயல்பை கொடுக்கிறது ?

கிளேஷியஸ் கிளே வாக இருந்து பின்னாள் முஹம்மது அலியாக மாறிய உலக குத்துச் சண்டை சாம்பியன் 22 வயதில் தான் பெற்ற வெற்றிக்கான காரணத்தை சொல்கிறார்.

என்னுடை பயிற்சியாளர் – கோச்- மிஸ்டர் பிரடஸ் அடிக்கடி சொல்வார்
இரண்டாவதாக வருபவரை உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை

நாம் யாருக்கு பொறுப்பாளர்களாக இருக்கிறோமோ அவர்களுக்கு வழி காட்ட வேண்டும் அது நம்முடைய கடமை என்பதை நாம் உணர வேண்டும்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ الْإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ قَالَ وَحَسِبْتُ أَنْ قَدْ قَالَ وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ – البخاري

நம்மைச் சார்ந்தவர்களுக்கு தேவையான விசயத்தில் தேவையான வித்த்தில் வழி காட்டனும் என்ற சிந்தனை இருந்தால் மட்டுமே அதற்கான முயற்சி நம்மிடமிருந்து பிறக்கும். அப்போது வழிகளும் தானாக திறக்கும்

அத்தகைய ஒரு சிந்தனையே நம்மிடம் இல்லாவிட்டால்?

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியான அன்று என்னுடை நண்பரின் மகளுக்கு 11 ம் வகுப்பில் முதல் குரூப் வாங்குவதற்காக ஒரு பள்ளிக்கு சென்றேன். அல்ஹமது லில்லாஹ் கிடைத்து விட்டது. அதற்காக பணம் கட்டுகிற இடத்திற்கு சென்ற போது அந்தப் பள்ளியின் ஒரு முஸ்லிம் மாணவியை கவுண்டரில் இருந்த ஆசிரியை ஆச்சரியமாக பார்த்து பேசி ஏசிக் கொண்டிருக்கிறார்.
“480 மார்க் வாங்கிட்டு ஏன் மூன்றாவது குரூப்பை தேர்ந்தெடுக்கிறாய்? எச் எம்மிடம் சரியாக கேட்டாயா?  உன் பெற்றோர்கள் எங்கே! என்று கேள்விகளால் துழைத்துக் கொண்டிருந்தார். அந்த மாணவியோ அசட்டுத்தனமாக ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்துக் கொண்டிருந்தாள்.

கடைசியாக அந்த டீச்சர் கேட்டார். நீ என்ன ஆகவேண்டும் என்று நினைக்கிறாய்? உடனடியாக அந்தப் பெண் சொன்னாள் :டாக்டராகனும். தலையில் அடித்துக் கொண்ட அந்த ஆசிரியை டாக்டராகனும்னா மூணாவது குரூப் எடுத்த எப்படி? என்றவர் எங்கே உன் பெற்றோர் அவர்களை கூப்பிடு என்றார். நான் பார்த்தேன் பிள்ளை ஆசிரியரிடம் அனுப்பி விட்ட பெற்றோர்கள். ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

நான் அந்த மாணவியின் பெற்றோரைச் சந்தித்து பேசினேன். உங்கள் மகள் பின்னாள் என்ன படிக்க வேண்டும் நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். டாக்டராக என்றார்கள். பிறகு எப்படி மூன்றாவது குரூப்பை தேர்வு செய்தீர்கள் என்றேன் எங்களுக்கு ஒன்றும் தெரியாது மகள் சொன்னால் அதற்கு சரியென்றோம் என்றார்கள். ஏ ஏன் இப்படி தேர்ந்தெடுத்தாய என்று மாணவியிடம் கேட்டேன். பள்ளிக் கூடத்தில் இது பற்றீ யாரும் சொல்லித்தரவில்லை என்று அந்த மாணவி சொன்னார்.

வழி காட்டுதல் குறித்து சிந்திக்காதவர்கள் இப்படித் தான் இருப்பார்கள். நாம் தான் வழி காட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் நான்கு பேரிடம் விசாரித்தாவது ஒரு வழியை சொல்லுவார்கள்.

ஒரு தந்தை பைக் வேணும் என்று கேட்கிற கல்லூரி மாணவனிடம் சொன்னார்.
வாங்கித் தருகிறேன். நான் என்ன ஆசைப்பட்டேன் என்றால்?  நீ இன்ஞினியராக வேலைக்குப் போய் உன்னுடைய காசில் பைக் வாங்கி வந்து என்னிடம் காட்ட வேண்டும் என்று நினைத்தேன் என்றார்.

ஒரு அம்மா முதன் முதலாக கல்லூரிக்கு புறப்படுகிற தன் மகளுக்கு சொல்கிறார்
உனக்கு ரொம்ப சிரமப்பட்டு இந்தக் கல்லூரியிலே இந்த கோர்ஸுக்கு இடம் வாங்கிக் கொடுத்தோம். அதுக்காக நாங்க பட்ட சிரமம்  என்ன என்று உனக்கே தெரியும். கவனமா படி! ஒண்ணு ஞாபகத்துல வச்சுக்க படிப்ப விட ஏன் உயிர விட நம்ம மார்க்கம் தான் நமக்கு பெரிசு.

கல்லூரிக்கு வண்டியோறுகிற பையனை வழியனுப்ப வந்த தந்தை சொல்கிறார். தம்பீ! பத்தோட பதிணொன்னா இருந்திராத! ஒத்தையானாலும் தனி முத்தாக இரு!

இத்தைகைய வழிகாட்டுதல்கள் கிடைக்கப் பெறுகிறவர்கள் தங்களது வாழ்நாளில் என்றைக்கும் பெற்றோரை – வழி காட்டியை மறக்க மாட்டார்கள். மட்டுமல்ல தானும் உயர்ந்து சமூகத்தையும் உயர்த்துவார்கள்.

நம்மிடம் குறை சொல்கிற பழக்கம் இருக்கிறது, நல்ல விசயத்திற்கு வழிகாட்டுகிற இயல்பும் – பழக்கமும் – தகுதியும் பெரும்பாலும் இருப்பதில்லை. நம்மைச் சுற்றி நடக்கிற பிரச்சினைகளுக்கும் சீர்கேடுகளுக்கும் அது தான் பிரதான காரணம்.

ஏன் இப்படிச் செய்தாய் என்ற வார்த்தையை விட இப்படிச் செய்திருக்கலாமே என்ற வார்த்தை அர்த்தம் உள்ளது. வெற்றிக்கும் சீர் திருத்த்திற்கும் துணை செய்யக் கூடியது.

அதற்கு வழிகாட்டுவோம் என்ற உணர்வு அவசியம். நம்முடைய ஆண்களுக்கும் பெண்களுக்கும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹிதாயத் செய்வானாக!
















1 comment:

  1. ஹஜ்ரத் அற்புதமான கட்டுரை தொடர்ந்துஎழுந்துங்கள்¡

    ReplyDelete