வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 07, 2014

அங்கீகாரத்தின் முத்திரை

وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنْ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ

இந்த உலகில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும் மனிதர்கள் என்று யார் யாரோ பட்டியலிடப்படுகிறார்கள்.

இந்த பட்டியலின் உண்மையான தகுதிக்குரியவர் இமாம் புஹாரி, அவர் மரணித்து 1200 ஆண்டுகளை கடந்த பிறகும் அவரது பெயர் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. அவரது பணி அங்கீகாரம் பெற்றிருக்கிறது.

முஸ்லிம்களில் மிகவும் பாக்கியமான மனிதர். அவர் பெற்ற அங்கீகாரம் அற்புதமானது.

இரண்டாவது வேதம் என்ற நூலுக்குச் சொந்தக்கார்ர், திருக்குர் ஆனுக்கு அடுத்த படியாக அவருடை நூல் பேசப்படுகிறது.

எந்த ஒரு செயலும் அங்கீகாரம் பெற வேண்டும். இல்லை எனில் அதற்கு மதிப்பில்லை.

மதிப்பெண் பெறாத தேர்வுத்தாள்கள் எத்தனை பக்கங்கள் இருந்து என்ன பயன்?

சைத்தான் பெரிய அறிஞன், வணக்கசாலி, ஆனால் இறை அங்கீகாரம் பெறாத போது எல்லாம் வீணானது.

அபூஜஹ்ல் பெரிய தலைவன் – பெருமானார் துஆ கேட்குமளவு பெரிய ஆள்.

وفي الترمذي بإسناد صحيح :" اللهم أعز الإسلام بأحب هذين الرجلين إليك بأبي جهل أو بعمر بن الخطاب ، قال : وكان أحبهما إليه عمر.
அவனுடைய் பெயரும் உமர் தான் . தன்னுடைய பெயரில் இன்னொருவர் இருப்பதை சகித்துக் கொள்ளாத அவன் இளைஞரான் உமர் பின் கத்தாபை பெயரை மாற்றிக் கொள்ளச் சொன்னான். அவனே மாற்றியும் வைத்தான். இஸ்லாத்திற்கு வரும் வரை உமர் ரலி தன் பெயரை உமைர் என்றே வைத்துக் கொண்டார்கள்.
அரபு மக்களிடையே அபூஜ்ஹ்லுடைய பட்டப்பெயர் அபுல் ஹிகம் என்பதாகும்.
அந்த அளவு அரபு மக்களிடையே அவன் அறிவாளியாக இருந்தான்.
ஆனால் அவனது திறைமையும் மதிப்பும் அங்கீகாரம் பெறவில்லை. பெருமானார் அவனை அபூஜஹ்ல் என்றார்கள்.

அதனால் நாம் யார்? நமது திறமை என்ன ? எவ்வளவு நன்மைகளை செய்தோம்? செய்கிறோம் என்பது முக்கியமல்ல.

அல்லாஹ்விடமும் எவ்வளவு அங்கீகாரம் பெறகிறது என்பதே முக்கியம்.

அதனால் தான் இறை உத்தரவுப்படி கஃபாவை கட்டி முடித்தவுடன் இபுறாகீம் (அலை) அல்லாஹ்விடம் முறையிட்டார்கள்,

وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنْ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ

உலகில் மிக உன்னதமான அங்கீகாரம் பெற்ற மனிதர் இமாம் புகாரி ரஹ் அவர்கள்.

·        ولد الإمام البخاري في ليلة الجمعة الثالث عشر من شوال سنة أربع وتسعين ومائة 194 هـ،
·        ومات أبوه وهو صغير، فنشأ في حجر أمه،
·        فتوجّه إلى حفظ الحديث وهو في المكتب، وقرأ الكتب المشهورة وهو ابن ست عشرة سنة،
·        وقد كان أصيب بصره وهو صغير،
·        فرأت أمه في منامها إبراهيم الخليل، فقال: يا هذه، قد ردّ الله على ولدك بصره بكثرة دعائك - أو قال: بكائك - فأصبح بصيرًا.

இமாம் புகாரியின் பார்வை திரும்ப கிடைத்த விச்யத்தில் மட்டுமல்ல. இன்னொரு ஆச்சரியமான விசயத்திலும் புகாரி இமாமுக்கும் இபுறாகீம் அலை அவர்களுக்கும் தொடர்பிருக்கிறது.

புகாரி இமாமிம் முப்பாட்டனார் முகீரா , அவர் தன் மகனுக்கு இபுறாகீம் என்று பெயர் வைத்தார். இபுறாகீம் தன் மகனுக்கு இஸ்மாயீல் என்றும், இஸ்மாயீல் தன் மகனுக்கு முஹம்மது என்றும் பெயர் வைத்தார்.

ஒரு அற்புதமான் வரலாற்றின் பொற் பாரம்பரியத்தை இமாம் புகாரியின் வமிசத்  தொடர் நாபகப்படுத்துகிறது.

இமாம் புகாரியின் பெயர் : محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبه الجعفي

இன்றைய உஸ்பெகிஸ்தான் முன்னர் குராசான் என்று அழைக்கப்பட்டது. குராஸான் பகுதியின் ஒரு முக்கியம் நகரம் புகாரா .

இன்றும்  உஸ்பெகிஸ்தான நாட்டின் ஐந்தாவது பெரிய நகரமாக புகாரா இருக்கிறது.

முஆவியா ரலி காலத்திற்குப் பிறகு இஸ்லாமின் கட்டுப் பாட்டிற்கு வந்த புகாரா நகரம் நீண்ட காலம் இஸ்லாமினுடைய கல்வி கலாச்சாரத்தின் கேந்திரமாக திகழ்ந்த்து, பெரும் அறிஞர்ப் பெருமக்கள் அங்கு தோன்றினார்கள். இமாம் ஜமஹ்ஸரீ அவர்களில் ஒருவர்.

எனினும அந்த ஊரில் பிறந்த மிக்கப் பெரிய பிரபலம் இமாம் புகாரி ஆவார். அவர் அந்த ஊரைச் சார்ந்தவர் என்பதால் அவருடைய பெயருடன் புகாரீ என்ற சொல் இணைப்பு பெற்றது.

இறுதியில் அந்த இணைப்பு அந்த ஊரை வரலாற்றில் காலம் கடந்தும் வாழச் செய்து விட்ட்து.

ஒரு ஊர் வாசியாக  இமாம் புகாரியைப் போல நம்முடைய ஊர்களுக்கு பெருமை சேர்ப்பவராக நாம் ஆகவேண்டும்.

குராஸானிலிருந்து ஹிஜ்ரத்தும் ஹதீஸை தேடிய பயணமும்

·        قام البخاري بأداء فريضة الحج وعمره ثماني عشرة سنة فأقام بمكة يطلب بها الحديث ثم رحل بعد ذلك إلى سائر مشايخ الحديث
அன்றைய  காலத்தில் ஹதீஸ் அறிவிப்பாளர்களை தேடி ஊர் ஊராக செல்வது அதை பரப்பு வதற்காக பயணங்கள் செய்வதும்  தீனுக்கான பெரும் சேவையாக இருந்த்து, இமாம் புகாரி தன்னை அந்தப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டார்.

ஹதீஸ்களுக்காக நாடு நாடாக நடந்தார். இமாம் புகாரி கூறுகிறார்

·        دخلت الشام و مصر و الجزيرة مرتين وإلى البصرة أربع مرات و أقمت بالحجاز ستة أعوام ولا أحصي كم دخلت إلى الكوفة و بغداد مع المحدثين

1080 - ஆயிரத்து என்பது பேர்களிடம் ஹதீஸ்களை   கற்றார்.

·        كان الإمام البخاري يقول قبل موته: كتبت عن ألفٍ وثمانين رجلًا، ليس فيهم إلا صاحب حديث،

ومن أهم شيوخه
·        الإمام أحمد بن حنبل وإن لم يرو عنه في الصحيح،
·        وإسحاق بن راهويه روى عنه نحو الثلاثين رواية،
·        وأحمد بن صالح المصري،
·        وأبو نعيم الفضل بن دكين،

أعظمهم تأثيرا في نفس الإمام البخاري وشخصيته، وأجلهم مرتبة عنده هو الإمام علي بن عبد الله المديني، حيث قال البخاري فيه : " ما استصغرت نفسي عند أحد إلا عند علي بن المديني " انتهى. "تذكرة الحفاظ"
அவரது காலத்தில் ஹதீஸ் என்ற பெயரில் ஹதீஸ் அல்லாத பல செய்திகளும் ஹதீஸ் என்ற பெயரில் உலவின, சரியான ஹதீஸை கண்டு கொள்வதில் மக்கள் தடுமாற்றத்திற்கு ஆளாகிக் கொண்டிருந்தார்கள்.

கனவும் இலட்சியமும்

பல் இலட்சம் ஹதீஸ்களை மன்னம் செய்து தொகுத்துக் கொண்டிருந்த நிலையில், பெருமானார் அவர்கள் மீது அமரப் போகிற ஈக்களை துறத்துவதுவது விசிறி வீசி துறத்துவது போல கனவு கண்டார்.
அவருடை ஷைக் அபூஇஸ்ஹாக்கிடம் விளக்கம் கேட்டார். பெருமானாரின் ஹதீஸ்களிலிருந்து பொய்யை விலக்கும் காரியத்தில் இறங்கு என்று அவர் விளக்கம் கூறினார்.
أنت تذب عنه الكذب : قاله أبوإسحاق

அதற்குப் பிறகு ஸஹீஹ்ஆன ஹதிஸ்களை தொகுப்பதை உயிர் மூச்சாக கொண்டார்.

தான் மன்னமிட்டிருந்த 6 இலட்சம் ஹதீஸ்களிலிருந்து மிகத் துல்லியமாக ஸஹீஹானவற்றை தேர்வு செய்யும் பணியில் இறங்கினார்.

اختار الإمام البخاري من بين ستمائة ألف حديث كانت تحت يديه؛ لأنه كان مدقِّقًا في قبول الرواية، واشترط شروطًا خاصة في رواية راوي الحديث

அதற்கான விதிகளை தானே வகுத்துக் கொண்டர்.  இமாம் புகாரியின் அபரிமிதமான அறிவாற்றலுக்கு சான்று இது.

ஒரு செய்தியை உண்மை என்று ஏற்றுக் கொள்வதற்கு இமாம் புகாரி வகுத்த விதிகளை விட திட்டமான விதிகளை அவருக்குப் பின் யாரும் வகுக்க வில்லை.

பின்னால் வந்தவர்கள் அந்த விதிகளை தேவைக்கேற்ப சில தளர்வுகளையே செய்து கொண்டார்களே தவிர யாரும் மேலும் நெருக்க வில்லை.

சாதரணமாக ஹதீஸ் அறிவிப்பாளர்கள் கண்டு கொள்ளாத மூன்று நிபந்தனைகளை இமாம் புகாரி தனக்கு வகுத்துக் கொண்டார்.

1.   பிந்தின அறிவிப்பாளர் முந்தையவரின் காலத்தில் வாந்திருக்க வேண்டும். அத்தோடுஇருவரும் ஒருவரை ஒருவர் ஒரு தடவையாவது சந்தித்திருக்க வேண்டும்
2.   அறிவிப்பாளர்கள் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டும் போதாது, நடைமுறையில் கடைபிடிப்பவராகவும் இருக்க வேண்டும்
3.   ஹதீஸ்களை வரிசைப்படுத்துவதற்கு தனியான ஒரு வழி முறையை வகுத்துக் கொண்டார், அத்தியாயங்களை இஸ்லாமிய சட்ட விதிகளுக்கான விளக்கங்களாக அமைகிறவாறு குறிப்பிட்டார். அவரது தலைப்புக்களே இமாம் புகாரியின் அறிவுக்கு சான்று என்று அறிஞர்கள் கூறுவதுண்டு.

ஹிஜ்ரி 217 ல் தனது ஆதரப்பூர்வமான ஸ்ஹீஹை தொகுக்க துவங்கிய இமாம் புகாரி அதற்காக மதீனாவுக்கு வந்தார்.

இந்த பணியின் முக்கியத்துவம் காரணமாக மதீனாவிற்குள் நுழையாவில் மதீனாவிற்கு வெளியே காத்திருந்த இமாம் புகாரி பெருமானார் (ஸல்) அவர்கள் கனவில் தோன்றி அனுமதியளித்த பிறகே மதீனாவிற்குள் நுழைந்தார். மதீனாவில் மஸ்ஜிதுன்னபவியின்  தற்போதைய 26 ம் நம்பர் கேட்டருகே அமைந்திருக்கிற மஸ்ஜிது இமாம் புகாரி பள்ளிவாசல் இருக்கும் இட்த்தில் தங்கிக் கொண்டு தன்னுடைய ஸஹீஹில் ஒவ்வொரு ஹதீஸை சேர்க்கும் போது மஸ்ஜிதுன் னபவியில் இரண்டு ரக அத் தொழுவிட்டு சேர்த்தார்.
كان البخاري لا يضع حديثًا في كتابه إلا اغتسل قبل ذلك وصلى ركعتين،


ஒரு ஹதீஸை சேர்ப்பதற்காக கடுமையான நிபந்தனைகளை தானாக உருவாக்கிக் கொண்ட போதும் மிகுந்த பேணுதலுடனும் பரக்கத்தை நாடியும் அவர் செயல்பட்ட விதம் தான் இமாம் புகாரியின் முயற்சிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தந்த்து,

ஹிஜ்ரி 217 ல் பணியை துவங்கிய இமாம் புகாரி 16 வருட உழைப்பில் ஸஹீஹுல் புகாரியை நிறைவு செய்தார். ஹிஜ்ரி 233 ல் பணி நிறைவுற்றது.

அத்தொகுப்பிற்கு
«الجامع المسند الصحيح المختصر من أمور رسول الله صلى الله عليه وسلم وسننه وأيامه
பெருமானாரின் செய்திகள் நடைமுறைகள் நாட்குறிப்புகளின் சுருக்கமான ஆதரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடருடனான ஹதீஸ்களின் திரட்டு என்று பெயரிட்டார்.

ஆயினும் அத்தொகுப்பு ஸஹீஹுல் புகாரி – இமாம் புகாரியின் ஆதாரப்பூர் திரட்டு என்ற பெயரிலே மக்களிடம் பெயர் பெற்றது.

·        بلغ عدد أحاديث صحيح البخاري مع وجود المكررة منها 7593 حديثاً حسب إحصائية الأستاذ محمد فؤاد عبد الباقي، اختارها الإمام البخاري من بين ستمائة ألف حديث كانت تحت يديه؛

இத்தொகுப்பில் இமாம் புஹாரியின் அறிவுத்திறனுக்கு சான்றாக ஏராளமான அம்சங்கள் அமையப் பெற்றிருக்கின்றன

இத்தொகுப்பில் இடம் பெற்ற ஹதீஸ்கள் அனைத்தும் இமாம் புகாரி வாய்வழியாக கேட்ட ஹதீஸ்களாகும்
·        ليس فيه حديث غلي سبيل المكاتبة

·         சுலாசிய்யாத் என்று சொல்லப்படுகிற மூன்று அறிவிப்பாளர்களை மட்டுமே கொண்ட 22 அறிவுப்புகள் இதில் உள்ளன

·         இத்தொகுப்பில் உள்ள முதல் ஹதீஸில் (إنما الأعمال  ) ஹதீஸ் அறீவிக்க பயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளும் உள்ளன. ஹத்தஸனா அஹ்பரனா ஸமிஃது – ஒரு ரிவாயத்தில் அன் னும் இருக்கிறது.

·         முதல் ஹதீஸின் அறிவிப்பாளர் மக்கீ இரண்டாம் ஹதீஸின் அறிவிப்பாளர் மதனீ

وقد انعقد إجماع الأمة على أن التراجم التي وضعها الإمام البخاري في كتابه نمت عن فهم عميق ونظر دقيق في معاني النصوص، حتى اشتهر بين أهل العلم قولهم: " فقه البخاري في تراجمه ".

இது போல சுவையான நுனுக்கமான செய்திகள் ஏராளமாக உண்டு

ஸஹீஹுல் புகாரியை இமாம் புகாரியிடமிருந்து 90,000 பேர் பாட படித்துள்ளனர். இன்று வரை நாள் தோறும் கோடிக்கணக்கான மக்கள் அதை படித்து வருகின்றனர்.   ஏராளமான விரிவுரைகள் அதற்க உண்டு தொன்மையான விரிவுரைகள் மட்டும் 56 என ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.
تاريخ التراث العربي أحصاها في 56 شرحاً.

தற்காலத்திலும் நிறைய விரிவுரைகள் வந்துள்ளன, எவ்வளவு என அறுதியிட்டு சொல்வது இயலாது.

எங்களுடைய உஸ்தாது – பாக்கியாத்தின் முன்னாள் முதல்வர் – தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா முன்னாள் தலைவர் -  ஷைகுத் தப்ஸீர் - அல்லாமா சித்தையன் கோட்டை கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்களும் இல்ஹாமுல் பாரி என்ற பெயரில் புகாரியின் சில பகுதிகளுக்கு அரபியில் விரிவரை எழுதியுள்ளார்கள்.  அதை தனது சொந்த செலவில் பதிப்பித்தும் உள்ளார்கள்.

இவ்வாறு நாட்டுக்கு நாடு நாளுக்கு நாள் விரிவுரைகள் எண்ணிக்கை வளர்ந்து வருவது ஸஹீஹுல் புகாரி யின் தனிச்சிறப்பிற்கும். இமாம் புகாரியின் அறிவாற்றலுக்கும் சான்றாகும்.

உலகம் முழுவதிலும் குர் ஆனைப் போல புகாரியையும் ஓதுகிற பழக்கம் இருக்கிறது. தமிழகத்தில் காயல்பட்டினம், காயா மொழி , முத்துப் பேட்டை ஆகிய ஊர்களில் நூற்றாண்டுகளாக பொதுமக்களால் புகாரி ஓதப்படுகிறது. தினந்தோறும் ஒரு ஹதீஸீற்கான  விளக்கம் தரப்படுகிறது.

இமாம் கஸ்ஸாலி அவர்கள் மவ்தாகிற போது அவரது நெஞ்சின் மீது புகாரி இருந்த்து.
مات الغزالي و صحيح البخاري على صدره

இந்த அளவு புகாரி இமாம் தொகுத்த ஹதிஸ் தொகுப்பு மக்களிடம் மாபெரும் அங்கீகாரத்தை பெற்றது. அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற்றிருந்தாலே தவிர இது சாத்தியமில்லை.

இமாம புகாரி ஹதீஸை தேடுவதிலும் பின்னர்  ஸஹீஹை தரம் பிரிப்பதிலும்  பெரும் முய்ற்சி செய்தார் . அவர் வேறு எந்த காரியத்திலும் கவனம் செலுத்த வில்லை
 இமாம் புகாரியை பற்றி ஒரு கருத்து

·        وكان الحسين بن محمد السمرقندي يقول: كان محمد بن إسماعيل مخصوصًا بثلاث خصالٍ مع ما كان فيه من الخصال المحمودة، كان قليل الكلام، وكان لا يطمع فيما عند الناس، وكان لا يشتغل بأمور الناس، كل شغله كان في العلم

அவரின் அந்த ஆழ்ந்த முயற்சிக்கு பெரும் வெற்றி கிடைத்த்து.  ஒரு சிறந்த தொகுப்பை அவர் தந்தார்.
எந்த ஒரு முயற்சியும்  வெற்றி பெறும்

ஆனால் அவர் இவ்வளவு பெரிய  அங்கீகாரம் பெறுவத்ற்கு  அவருடைய  தக்வாவும் பெருமானாரின் மீதான நேசமும் காரணமாகும்

இந்த உலகில் பலரையும் பல செயல்களையும் அல்லாஹ் அங்கீகரிக்கிறான். ஆனால் அவ்வாறு அங்கீகரிக்கப் பட்ட சில மனிதர்களும் சில செயல்களும் இறை அங்கீகாரத்திற்கான சின்னமாக இந்தப் பூமியில் நிலைத்து விடுகின்றன

ஸஹீஹுல் புகாரி அச்சின்ன்ங்களீல் ஒன்று

இபுறாகீம் நபியின் வாழ்க்கையை போலவே தக்வாவின் வாழ்க்கையால் உயர்ந்த அங்கீகாரத்தை இமாம் புகாரி பெற்றார்.

இமாம் புகாரியை தொடர்ந்து ஸஹீஹான ஹதீஸ்களை திரட்டித் தரும் ஒரு பெரும் பாரம்பரியம் உருவானது. இமாம் முஸ்லிம் இமாம் திர்மிதி இமாம் நஸஈ ஆகியோர் இமாம் புகாரியின் மாணவர்களே!

இமாம் புகாரியின் வாழ்க்கையும் புகாரி நூலுக்கு கிடைத்த பிரம்மாண்டமான அங்கீகாரமும் நமக்கு இந்தப் பாட்த்தை வழங்குகின்றன.

இமாம் புகாரி இன்னும் பல நூட்களை தொகுத்தார். அனைத்துமே பிரபலமானவை

·        التاريخ الكبير )) جمع فيه أسامي من روى عنه الحديث من زمن الصحابة إلى زمنه (( التاريخ الأوسط )) و (( التاريخ الصغير )) و (( الأدب المفرد )) و (( الكنى )) و (( الوحدان )) و (( الضعفاء ))

புகாராவின் ஆளூநர் காலித் பின் அஹமத் தன் மாளிகையில் வந்து புகாரியை தாரீஹுல் கபீரை கற்றுக் கொடுக்குமாறு  கேட்டுக் கொண்டார். இமாம புகாரி அதற்கு மறுத்து விட்டார்.

அதனால் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார்.
புகாராவிற்கு வரலாற்றுப் பெறுமை சேர்த்த இமாம் புகாரி தன் சொந்த ஊரிலிருந்து வெளியேறி அருகிலுள்ள  கர்த்தங்க் என்ற சிற்றூரில் குடியேறினார்.

நல்லவர்களுக்கு இடையூறு செய்கிறவர்களை நாயன் அல்லாஹ் விடுவதில்லை.

இமாம் புகாரியை வெளியேற்றிய காலித் பின் அஹமதை ஒருகாரணத்திற்காக  அப்போதைய கலீபா அல் முஃதமிதின் சகோதர்ர் சிறைப்பிடித்தார்.

இமாம் புகாரி கர்தன்கில் ஒரு ஈதுல் பித்ருடைய இரவில் வபாத்தானார்.

அல்லாஹ் செய்த ஓற்றுமை ஷவ்வாலில் பிறந்த அவர்கள் ஷவ்வாலில் வபாத்தானார்கள்.
·        وفــــــاتــــه توفي ليلة السبت بعد صلاة العشاء , وكانت ليلة عيد الفطر , ودفن يوم الفطر ..
بعد صلاة الظهر سنة ست وخمسين ومائتين 256 هـ بخَرتَنك وهي قرية بالقرب من بخارى وهي القرية التي ولد فيها رحمه الله تعالى
·        فقد خدم السنة النبوية , ووقف حياته لها , وخلف تراث الأمة الإسلامية

எந்த முயற்சியும் வெற்றி பெறும். அல்லாஹ்வின் அங்கீகாரத்தை பெறுவது எந்த அளவு முக்கியமானது. அதன் பலன் எந்த அளவு பிரம்மாண்டமானது என்பதற்கு இமாம் புகாரியும் அவருடையை ஸஹீஹுல் புகாரியும் சிறந்த உதாரணமாகும்.


அந்தப் பெரும்கனாரின் பரக்கத்தால் அல்லாஹ் நமக்கு சிறந்த கல்வியையும் அங்கீகரிக்கப்படுகிற அமல்களையும் தந்தருள்வானாக!

2 comments:

  1. Aameen.jazakallah halrath. Deoband darul uloomilum Quran polave buhari odhappattu thamam seyyappaduhiradhu..
    P.j ponra ayokkiyarhal buhari imamai kevalappadutthuvadhu qiyamatthin adaiyalam.

    ReplyDelete
  2. மிக அழகிய கட்டுரை

    ReplyDelete