வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 14, 2013

யூதர்களாகிவிடாதீர்கள்

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاءَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ(51)

மூஸா (அலை) அவர்களும் அவருடனிருந்த 6 லட்சம் யூதர்களும் ஆச்சரியமான முறையில் காப்பாற்றப்பட்ட நாள் ஆசூரவுடைய நாள் அதனால் இன்று நாம் நோன்பு நோற்றிருக்கிறோம். 
இவ்வாறு மிக ஆச்சரியமான முறையில்  காப்பாற்றப் பட்ட யூதர்கள் தங்களது கண்ணெதிரிலேயே பிர் அவ்னையும் அவனுடைய படைகளும் அழித்த அல்லாஹ்வுடைய ஆற்றலை கண்டார்கள்.
இத்தகைய தொரு நிகழ்வுக்கு பிறகு யூதர்கள் எந்த அளவு அல்லாஹ்வை பயப்படுகிறவர்களாக அவனுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் ?
ஆனால் அவர்கள் அப்படி நடந்து கொள்ள வில்லை. அல்லாஹ்வின் அருட்கொடைகளை அனுபவித்துக் கொண்டு அளவு கடந்த அகம்பாவம் கொண்டவர்களாகவும் தற்பெறுமை பிடித்ததவர்களாகவும் அல்லாஹ்வின் உத்தரவுகளை குயுக்தியால மீறுகிறவர்களாகவும் ஒரு கட்ட்த்தில் நபிமார்களையே கொலை செய்கிற அளவு கொடூரமானவர்களாகவும் மாறினார்கள்.
அதனால் அல்லாஹ்வின் சாபத்திற் குரிய்வர்களானார்கள்.

·       لَقَدْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَأَرْسَلْنَا إِلَيْهِمْ رُسُلًا كُلَّمَا جَاءَهُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَى أَنفُسُهُمْ فَرِيقًا كَذَّبُوا وَفَرِيقًا يَقْتُلُونَ(70)
·       لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنْ بَنِي إِسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاوُودَ وَعِيسَى ابْنِ مَرْيَمَ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ(78)
·       وَقَالُوا قُلُوبُنَا غُلْفٌ بَلْ لَعَنَهُمْ اللَّهُ بِكُفْرِهِمْ فَقَلِيلًا مَا يُؤْمِنُونَ(88 2;

மக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்கு முன்னுதரமாக ஆனாகள்
அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இவ்வாறு உத்தரவிடுகிறான்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا-23;69

முஸ்லிம்க்ள் யூதர்களை அடிக்கு அடி பின்பற்றுகிற ஒரு காலம் வரும் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்

عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم ليأتين على أمتي ما أتى على بني إسرائيل حذو النعل بالنعل حتى إن كان منهم من أتى أمه علانية لكان في أمتي من يصنع ذلك وإن بني إسرائيل تفرقت على ثنتين وسبعين ملة وتفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي
யூதர்களை நெருங்காமலும் அவகளுடைய இயல்பை பின்பற்றாமலும் நடக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும்
உலக சமுதாயங்களில் யூதர்களே முஸ்லிம்களிட்ம் அதிக விரோதம் காட்டக் கூடியவகள் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.
لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا وَلَتَجِدَنَّ أَقْرَبَهُمْ مَوَدَّةً لِلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى ذَلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ(82)
யூத இயல்புகள்
இனவாதம்

யூதனாக பிறந்தாலே அவன் சிறந்தவன் உயர்ந்தவன் என்ற கருத்து அவர்களிடம் அழுத்தமாக இருக்கிறது. அவர்கள் செய்கிற சகல அக்கிரமங்களுக்கும் இந்த உணர்வே காரணமாகும்

وَقَالُوا لَنْ يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنتُمْ صَادِقِينَ(111)

தீமையை தடுப்ப்பதை விட்டுவிடுதல்

لَوْلَا يَنْهَاهُمْ الرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ عَنْ قَوْلِهِمْ الْإِثْمَ وَأَكْلِهِمْ السُّحْتَ لَبِئْسَ مَا كَانُوا يَصْنَعُونَ(63)

மறுமையை பற்றிய சிந்தனையிலிருந்து விலகுதல்

யூதர்கள் மறுமை சிந்தனையிலிருந்து முற்றிலுமாக விலகி விட்டிருந்தார்கள் அதனால் தான் யா பனீ இஸ்ராயீல என்றழைத்து யூதர்களுக்கு அறிவுறை சொன்ன இறைவன் பகரா அத்தியாத்தில் இரண்டு இடங்களிலும் மறுமையை அவர்களுக்கு நினைவூட்டினான

يَابَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِي الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ(47)وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ(48)
يَابَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِي الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ(122)وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَلَا تَنفَعُهَا شَفَاعَةٌ وَلَا هُمْ يُنصَرُونَ(123)

மறுமைய பற்றி பயமில்லாமல் போனதற்கு காரணம்யூதனாக பிறந்தாலே சொர்க்கம் என்ற இனவாத கருத்தாகும்

وَقَالُوا لَنْ تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودَةً قُلْ أَاتَّخَذْتُمْ عِنْدَ اللَّهِ عَهْدًا فَلَنْ يُخْلِفَ اللَّهُ عَهْدَهُ أَمْ تَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ(80)

மறுமையை பற்றி பயம் இல்லாமல் போனதால்எந்த அக்கிரமத்தையும் துணிந்து செய்தார்கள், நீதி நியாயம் என்பதற்கு அவர்களது வாழ்க்கையில் இடமில்லாமல் போய்விட்ட்து. ஒரு கட்ட்த்தில் அல்லாஹ்வின் உத்தரவுகளுக்க்கே அவர்களிடம் மரியாதை இல்லாமலாகிவிட்ட்து.

மாற்றுதல்
 
வேதத்தின் கருத்துக்களையே தமது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொண்டார்கள்

فَوَيْلٌ لِلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا فَوَيْلٌ لَهُمْ مِمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَهُمْ مِمَّا يَكْسِبُونَ

வட்டியை ஹலாலாக்கிக் கொண்டார்கள்

وَأَخْذِهِمْ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا(161)

தலைவர்களையும் வழிகாட்டிகளையும் கடவுள்களாக ஆக்கிக்கொண்டார்கள்
اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ

அல்லாஹ் ஹராமாக்கியதை பாதிரிகள் ஹலால் என்று சொன்னால் பாதிரிகளின் சொல்லை ஏற்றுக் கொள்வார்கள். பாதிரிகளை கடவுளாக்கி க் கொள்கிறார்கள் என்பதன் பொருள் இதுவே!!

மாயமந்திரம்சூனியம் 

இது போன்ற் நம்பிக்கைகளிலும் செயல்களிலும் உலக அளவில அதிக்மாக ஈடுபடுகிறவர்கள் யூதர்களே1
சுலைமான் அலை) அவர்களை சூனியக்கார்ர் என்று குறை சொன்ன யூதர்கள் உண்மையில் கெட்ட ஜின்கள் கற்றுக் கொடுத்த சூனியத்தை யூதர்களே அதிகம் பயனபடுத்தினார்கள். இன்றளவும் உலகில் சூனியத்தை அதிகம் பயன்படுத்துகிறவர்கள் யூதர்களே!
அரபு நாட்டு யூதர்கள் சூனியத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். போர்க்களத்தில் வீரத்தை காட்டுவதற்கு பதிலாக இந்த தாழ்ந்த தொழிலை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். – என்கிறார் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக பேரசிரியரும் அமெரிக்கருமான மாக்கோலஸ்.
யூதர்கள் எங்கு சென்றார்களோ அங்கெல்லாம் சூனியத்தை அவர்கள் பரப்பினார்கள் என்கிறார்ரெகோஸின்,
பெருமானார் (ஸல்) அவர்களை அழிக்கவும் முடக்கவும் யூதர்கள் சூனியத்தை பயன்படுத்தினார்கள்.
லபீது பின் அஃஸம் என்ற சூனியக்காரன் மூலம் பெருமானார் பயனப்டுத்திய சீப்பை பயன்படுத்தி சூனியம் செய்து அதை தர்வான் என்ற கிண்ற்றில் புதைத்தனர். பின்னர் அது மலக்குமார்களின் துணையுடன் அகற்றப்பட்ட்து .

عَائِشَةَ قَالَتْ سُحِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِنَّهُ لَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّيْءَ وَمَا فَعَلَهُ حَتَّى إِذَا كَانَ ذَاتَ يَوْمٍ وَهُوَ عِنْدِي دَعَا اللَّهَ وَدَعَاهُ ثُمَّ قَالَ أَشَعَرْتِ يَا عَائِشَةُ أَنَّ اللَّهَ قَدْ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ قُلْتُ وَمَا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ جَاءَنِي رَجُلَانِ فَجَلَسَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالْآخَرُ عِنْدَ رِجْلَيَّ ثُمَّ قَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الْأَعْصَمِ الْيَهُودِيُّ مِنْ بَنِي زُرَيْقٍ قَالَ فِيمَا ذَا قَالَ فِي مُشْطٍ وَمُشَاطَةٍ وَجُفِّ طَلْعَةٍ ذَكَرٍ قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِي بِئْرِ ذِي أَرْوَانَ قَالَ فَذَهَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ إِلَى الْبِئْرِ فَنَظَرَ إِلَيْهَا وَعَلَيْهَا نَخْلٌ ثُمَّ رَجَعَ إِلَى عَائِشَةَ فَقَالَ وَاللَّهِ لَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ وَلَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ الشَّيَاطِينِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَأَخْرَجْتَهُ قَالَ لَا أَمَّا أَنَا فَقَدْ عَافَانِيَ اللَّهُ وَشَفَانِي وَخَشِيتُ أَنْ أُثَوِّرَ عَلَى النَّاسِ مِنْهُ شَرًّا وَأَمَرَ بِهَا فَدُفِنَتْ -  البخاري-5766 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வதுபோன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது. இறுதியில் ஒரு நான் அவர்கள் என்னிடம் இருந்த போது அல்லாஹ்விடம் (உதவி கோரிப்) பிரார்த்தித்துக்கொண்டேயிருந்தார்கள். பிறகு என்னிடம் ஆயிஷா (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் கேட்டுக்கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவளித்துவிட்டான் என்று கூறினார்கள். நான், என்ன அது, அல்லாஹ்வின் தூதரே* என்று கேட்டேன், அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்„ (கனவில்) என்னிடம் (வானவர்கள்) இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் என்னுடய தலைமாட்டிலும் இன்னொருவர் என்னுடைய கால்மாட்டிலும் அமர்ந்தனர். பிறகு அவர்களில் ஒருவர் மற்றவரிடம் இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்க. மற்றவர், இவருக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். முதலாமவர் இவருக்கு யார் சூனியம் வைத்தார்? என்று கேட்க மற்றவர், பனூஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் எனும் யூதன் என்று பதிலளித்தார். முதலாமர் எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது? என்று கேட்க, அடுத்தவர், சீப்பிலும் சிக்கு முடியிலும் ஆண் பேரிச்சம் பாளையின் உறையிலும் என்று சொன்னார். முதலாமர், அது எங்கே வைக்கப்பட்டுள்ளது.? என்று கேட்க, அடுத்தவர், தூஅர்வான் குலத்தாரின் கிணற்றில் என்று பதிலளித்தார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று அதைக் கூர்ந்து கவனித்தார்கள். சுற்றிலும் பேரிச்ச மரங்கள் இருந்தன. (சூனியப் பொருள் கட்டைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்) பிறகு ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) இருந்தது. அதன் பேரிச்ச மரங்கள் ஷைத்தானின் தலைகளைப் போன்று இருந்தன. என்று சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே* அந்தக் கட்டைத் தாங்கள் திறந்(து பார்த்)தீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இல்லை< எனக்கோ அல்லாஹ் ஆரோக்கியமளித்து குணப்படுத்திவிட்டான். அதைத் திறந்து காட்டினால் மக்கள் குழப்பமடைந்துவிடுவார்களோ என அஞ்சினேன் என்று சொன்னார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களின் ஆணையின் பேரில் அக்கிணறு தூர்க்கப்பட்டது.

மேல் விபரங்களுக்கு வேலூர் அல்பாக்கியாதுஸ்ஸாலிஹாத் வெளியிட்ட தமிழ் தப்ஸீர் ஜவாஹிருல் குர் ஆன் முதல்பாகம் 275 – 276 வாசித்துக் கொள்க!) 

ஏமாற்றுதல்- ஹலாலை பொருட்படுத்தாமை

وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَائِمًا ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا لَيْسَ عَلَيْنَا فِي الْأُمِّيِّينَ سَبِيلٌ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ(75)
وَأَخْذِهِمْ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا(161)

நல்லதை சொல்வார்கள் செய்ய மாட்டார்கள்  
    
أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ أَفَلَا تَعْقِلُونَ(44)

உலக ஆசை

وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ وَمِنْ الَّذِينَ أَشْرَكُوا يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنْ الْعَذَابِ أَنْ يُعَمَّرَ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ

நன்றி கெட்ட தன்மை

உலகில் வேறெந்த சமுதாயத்தையும் விட அதிகமாக அல்லாஹ்வின் அருளைப் பெற்ற சமுதாயமாக யூத சமுதாயம் இருந்த்து.

يَابَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِي الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ(47)

ஒருவருக்குப் பின் ஒருவராக ஏராளமான நபிமார்களை அல்லாஹ் அருளினான்.
ثُمَّ قَفَّيْنَا عَلَى آثَارِهِمْ بِرُسُلِنَا

ஒரு தண்டையாக தீஹ் பாலைவனத்தில் (இப்பொது அது இஸ்ரவேலர்களின் பாலைவனம் என்றழைக்கப்படுகிறது) அவர்களை அல்லாஹ் 40 வருடங்கள் சிறை வைத்த போதும் கூட அவர்களுக்கு மன்னு சல்வா என்ற உணவை அருளாக வழங்கி அவர்களது பசியை போக்கினான். மேகங்களை நிழலாக கொடுத்தான்.

பாறையிலிருந்து பணிரென்று நீருற்றுக்களை உறபத்தி செய்து கொடுத்தான்.

وَظَلَّلْنَا عَلَيْكُمْ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمْ الْمَنَّ وَالسَّلْوَى
وَإِذْ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ

அவர்கள் வளர வள்ர அவர்களது ஆடைகளும் தாமாக வளர்ந்தன என திருக்குர் ஆனுடைய விரிவுரைகள் கூறுகின்றன.

இவ்வளவு நிஃமத்துக்கள் கிடைக்கிற போது அல்லாஹ் என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்படுகிறோம் என்று சொல்ல் வேண்டியது மக்களின் கடமை
ஆனால் யூதர்களோ

அகம்பாவத்தின் உச்சக் கட்டம்  நீ சொன்னது கேட்ட்து அதற்கு  மாறுசெய்வோம்

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمْ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا

ந்ன்றி கெட்டு நடந்து கொண்டார்கள். குறும்புத்தனம் காட்டினார்கள்

وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ(58)فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِنْ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ

அந்த நன்றி கெட்ட தனத்தின் உச்சமாக சிலைகளை வணங்கத் தயாரானார்கள் . எங்களுக்கும் ஒரு சிலை வேண்டும் என்று மூஸா நபியிடமே கேட்டார்கள்

قَالُوا يَامُوسَى اجْعَل لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ

காலமெல்லாம் இழிவு

இத்தகைய போக்கினால் தீராத இழிவுக்கும் கேவலத்திற்கு ஏழ்மைத்தனத்திற்கும் யூதர்கள் ஆளானார்கள்.

وَضُرِبَتْ عَلَيْهِمْ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِنْ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ

உலக வரலாற்றில் யூதர்களின் அத்தியாம் என்பது சோகமயமானது. அவர்களுடையை தீய இயல்புகளால் முஸ்லிம்களுடை ஆட்சிக் காலத்தில் தவிர மற்ற இடங்களில் அவர்கள் ஓட ஓட விரட்டப்பட்டார்கள்:. கண்ட இடங்களில் கொல்லப்பட்டார்கள், தேடித்தேடி சூறைய்யடப்பட்டார்கள். உலகின் பரிதாபத்திற்குரிய ஒரு இனமாக பயந்து பயந்து வாழவேண்டிய ஒரு இனமாக யூத இனம் ஆகிப்போனது,

இன்று அவர்கள் செல்வாக்குப் பெற்றிருப்பது போல தெரிந்தாலும் உண்மையில் அந்த செல்வாக்கு அவர்களுடையது அல்ல. அமெரிக்க பிரிட்டன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் செல்வாக்கும். இத்தகைய ஒரு செல்வாக்கு கிடைத்தால் தவிர அவர்களால் தலைநிமிட முடியாது என்று குர் ஆன் கூறுகிறது

ضُرِبَتْ عَلَيْهِمْ الذِّلَّةُ أَيْنَ مَا ثُقِفُوا إِلَّا بِحَبْلٍ مِنْ اللَّهِ وَحَبْلٍ مِنْ النَّاسِ 3; 112

இந்த நாடுகளுடைய கைகள் இஸ்ரேலை விட்டு விலகுமானால் யூதர்கள் பழையபடி வரலாற்றின் அனாதைகளாக மாறிவிடுவார்கள்
 
திருக்குர் ஆன் அவர்களை சபிக்கிறது. அந்தச் சாபம் கியாமத் நாள் வரை தொடரும்.
 திருக்குர் ஆன் யூதர்களின் இயல்புகளில் ஏராளமானவற்றைச் சொல்லிக் காட்டுகிறது.  காரணம் அவர்கள் விச்யத்தில் நாம் எச்சரிக்கை அடையவேண்டும் என்பதற்காகவும் அவர்களைப் போல நாம் ஆகிவிடக் கூடாது என்பதற்காவும் தான்,

என்வே யூதர்களைப் போல
  • ·         முஸ்லிம் என்றாலே உயர்ந்தவன்- என்ற இனவாதம் கூடாது
  • ·     தீமையை தடுப்பதை விட்டு விடக் கூடாது
  • ·     மறுமையை பற்றிய சிந்தனையிலிருந்து  விலகிவிடக் கூடாது.
  • ·     மார்க்கத்தின் சட்டங்களை சுய விருப்பத்தின் பேரில் மாற்ற      முயசி செய்யக் கூடாது 
  • ·     மாயமந்திரம்சூனியத்தில் ஈடுபாட காட்டக் கூடாது
  • ·      பிறருக்கும் மட்டும் நல்லதை சொல்லி நாம் கைகொள்ளாமல் இருந்து விடக் கூடாது.
  • ·      உலக ஆசை அதிகமாகிவிடக் கூடாது
  • ·      அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டு  நடந்து கொள்ளக் கூடாது
  • ·     மார்க்கத்தின் சட்டங்கள் உத்தரவுகள் சொல்லப்படுகிற போது இதை எல்லாம் செய்ய முடியாது என்று நினைக்கவோ பேசவோ அவ்வாறு நடக்கவோ கூடாது..


2 comments:

  1. நல்ல கட்டுரை...

    ReplyDelete
  2. Anonymous8:56 PM

    ما شاء الله

    ReplyDelete