வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 20, 2011

ஜனநாயகம் சீர் செய்யப் பட வேண்டும்



ياداوود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب(26)
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون(30)

ஜனவரி 26 ல் இந்திய குடியரசு தினம்  கொண்டாடப் படுகிறது.
ஒரு மாபெரும் குடியரசு நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் நாம் பெருமிதம் அடைகிறோம். நம்மோடு சுதந்திரம் பெற்ற நாட்குகள் பல வற்றிலும் இப்போது சர்வாதிகாரம் இராணுவ அரசுகள் மக்கள் உரிமைகளை பறித்து வருகின்றன. நம்முடை ஜனநாயகம் சில குறைகள் இருந்தாலும் பாதுகாப்பாகவே இருக்கிறது.
ஒரு ஆட்சி பிடிக்காவிட்டால் அதை மாற்றி விட நம்மால் முடியும்.

1947 ஆகஸ்ட் 15 ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது.
இரண்டு ஆண்டுகளில் இந்தியாவுக்கு என ஒரு அரசியல் சாசணம் உருவாக்கப் பட்டது. ஆட்சி முறை தீர்மாணிக்கப் பட்டது. இந்தியா1950 ஜனவரி 26 ல் குடியரசாகியது.

குடியரசு என்றால் ?
ஆட்சியாளரை தேர்வு செய்யும் அதிகாரம் மக்களிடம் இருக்கும்.  ஆட்சியாளர் மக்களின் பிரதிநிதி.

இஸ்லாமிய அரசு முறையும் குடியாட்சியே!   
n  கலீபா(பிரதிநிதி) எனும் சொல்லே குடியாட்சியை பிரதிபலிக்கக் கூடியது
அபூபக்கர் (ரலி)  மக்களின் தேர்வு
عن جرير قال لي ذو عمرو يا جرير إن بك علي كرامة وإني مخبرك خبرا إنكم معشر العرب لن تزالوا بخير ما كنتم إذا هلك أمير تأمرتم في آخر فإذا كانت بالسيف كانوا ملوكا يغضبون غضب الملوك ويرضون رضا الملوك -   بخاري

n   மக்கள் விரும்பாதவர் இமாமத் செய்ய முடியாது.
இன்றைய குடியரசு முறையும் இஸ்லாமிய குடியரசு முறைக்கும் இரண்டு பிரதான வித்தியாசங்கள்
 முதலாவது, ஆட்சியாளர் தேர்வு முறை.
·        இன்றைய குடியரசு தேர்தல் election
·        இஸ்லாமிய குடியரசு- தேர்வு  selection

(உதாரணம்; அபூபக்கர் (ரலி) தேர்வு செய்யப் பட்டார்கள். பிறகு மக்களின் அங்கீகாரத்தை பெற்றார்கள், அவ்வாறே உமர் (ரலி) உஸ்மான் (ரலி) ஆகிய வர்கள்களும்

இரண்டாவது,  வித்தியாசம்,  இஸ்லாமிய ஆட்சியாளர்   மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் அல்லாஹ்வின் பிரதிநிதி. அல்லாஹ்வின் அதிகாரத்தை பூமியில் நிலைநாட்டுபவர்.

இந்த முறை சிறப்பாக செயல்பட ஆட்சியாளர்களிடம் தக்வாவும் மக்களிடம் பொருப்புணர்வும் அவசியம், அது குறைந்து போகிற கட்டத்தில் இதுவே மன்னரட்சிக்கு வழிவகுக்கும் . முஸ்லிம்களின் அரசியல் அப்படித்தான் தடம் புரண்டது.

இதிலிருந்து விடுபட விரும்பிய முஸ்லிம்கள் தேர்தல் பாணி அரசியலுக்கு மறினர்.
 19 ம் நூற்றாண்டிலிருந்து சந்தர்ப்ப சுழ்நிலைகள் காரணமாக  முஸ்லிம் உலகத்திலும் தோதல் அரசியல் வௌப்படத்தொடங்கியது.இப்போது  துருக்கி இரான் எகிப்து ஜோடான் லெபனான் மெராக்கோ குவைத் எமன் பாகிஸ்தான் பங்களாதேஷ் மலேஷயா செனகல் நைஜீயா போன்ற நாடுகளில் தோதல் பானி ஜனநாக நடைமுறை வழக்கில் இருக்கிறது. இந்தியா தொன்னாப்க்கா ஐரோப்பா வடஅமொக்கா ஆஸ்திரேலியா போன்ற முஸ்லிம்கள் பெரும் சிறுபான்மையினராக வாழ்கிற தேசங்களிலும் தோதல் அரசியலில் முஸ்லிம்கள் பங்கேற்று வருகிறாகள.

இன்றைய குடியரசு முறையின் பெரும் தீமை
-       தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு ஆட்சியாளர்கள் சுயநலமிகளாக மாறுவது.
-      அதுவே இன்றைய குடியாசுகளின் பெரும் பிரச்சினை,
“today world democracies are suffering from a major vacuum, which is the vacuum of spirituality,”  khdami former priminster of iran

இந்நிலை மாற வேண்டுமானால் ஆட்சியாளர்கள் தங்களை இறைவனின் பிரதிநிதியாக உணரத் தலைப்பட வேண்டும். அப் போது சிறந்த ஆட்சியாளர்கள் கிடைப்பார்கள். (உ..தா) உமர் ரலி பல நிகழ்வுகள்
·        காணாமல் போன அரசாங்க ஒட்டகத்தை தேடிப் புறப்பட்ட உமர் (ரலி)யிடம் ஒருவர் கேட்டார். ஒரு அடிமையை ஏவக்கூடதா? பதில்:  இது பற்றி என்னிடம்தான் விசாரிக்கப் படும் எனது அடிமையிடம் அல்ல.
·        அரசாங்க ஒட்டகத்தை குளிப்பாட்டிக் கொண்டிருந்த் உமர் (ரலி)யிடம் ஒருவர் கேட்டார்.ஒரு அடிமையை ஏவக்கூடதா? பதில் : اي أعبد مني

இத்தகைய ஆட்சியாளர்களை  இனி வரலாற்றில் மட்டுமே பார்க்க முடியும் என்றாகிவிட்ட்து.

ஊழல் நிர்வாகச் சீர்கேடு மதவெறிச் சக்திகளின் ஆதிக்கம் ஆகியவற்றால் இந்திய ஜனநாயகம் மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகிக் கொண்டு வருகிறது. 

நாடு கேடிகளிடமும் கோடிகளிடமும் சிக்கி சீர் குலைந்து வருகிறது. 
இந்திய மக்கள் மிக அவசரமாக இந்த சீரழிவை தடுக்க கடமைப்பட்டிருக்கிறார்கள் 
கயமைத்தனம் கொண்ட ஊழல் மதவாத அரசியல் வாதிகளை அடையாளம் கண்டு திட்டவட்டமாக அவர்களை புறக்கணிக்க முன்வர வேண்டும். 
ஊழல் அரசியல் வாதிகளுக்கு இன்னும் துதி பாடிக் கொண்டிருக்க கூடாது.

·        இலஞ்சப் பேர்வழிகளும் குண்டர்களும் நாட்டை சுரண்டுவதை முதலில் மக்கள் உணர வேண்டும்.
·        அரசியல் விழிப்புணர்வு வேண்டும். ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
·        நிதி, வெளிவிவகாரக் கொள்கைகளை மக்கள் கவனிக்க வேண்டும்,
·        காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடக்கூடாது.
·        வாய்ப்புள்ளோர் அரசியலில் பங்கேற்க வரவேண்டும்
·        நல்லவர்களை தேர்வு செய்தல்
·        அரசு உத்திரவுகளுக்கு கட்டுப்படுதல் 
நாம் அக்கறையுடன் இருந்தால் நமக்கு அக்கறையானவர்கள் கிடைப்பார்கள்.

عن عوف بن مالك عن رسول الله صلى الله عليه وسلم قال خيار أئمتكم الذين تحبونهم ويحبونكم ويصلون عليكم وتصلون عليهم وشرار أئمتكم الذين تبغضونهم ويبغضونكم وتلعنونهم ويلعنونكم قيل يا رسول الله أفلا ننابذهم بالسيف فقال لا ما أقاموا فيكم الصلاة وإذا رأيتم من ولاتكم شيئا تكرهونه فاكرهوا عمله ولا تنزعوا يدا من طاعة   مسلم
அப்போது தன் குடியரசுத் தத்துவம் பாதுகாக்கப் படும். 
அதிக தகவலுக்கு இக்கட்டுரையை வாசிக்கவும் 

No comments:

Post a Comment