வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 23, 2017

எல்லை மீறாதே!

திருக்குர் ஆன் மக்களுக்குச் செய்யும் எச்சரிக்கைகளில் ஒன்று
எல்லை மீறக் கூடாது! .எது விசயத்திலும்!
அதிகப்படியான மமதை அல்லது அசட்டுத்துணிச்சல் ஆகிய இரண்டு குணங்கள் மனிதர்களை எல்லை மீற வைக்கின்றன.
என்னை உங்களால என்ன செய்து விட முடியும் என்ற அகம்பாவம் கொண்ட மனிதர்கள் பிறரது விவகாரங்களிலும் பொது விவகாரங்களிலும் எல்லை மீறி நடந்து கொள்கிறார்கள்.
அமெரிக்க அரசின் இரண்டு நடவடிக்கைகளை உதாரணமாக கூறலாம்.  
சிரியா ஈரான் இராக் சோமாலியா சூடான் லிபியா ஏமன் ஆகிய 7 நாடுகளின் முஸ்லிம் பயணிகளுக்கு தடை என்று சொன்னவர்கள் இப்போது எகிப்து சவூதி அரேபியா ஐக்கிய அமீரகம் கத்தார் ஜோர்டான் மொரோக்கோ துருக்கி ஆகிய
8 முஸ்லிம் நாடுகளின் பயணிகள் லாப்டாப் டேப்லட் போன்றவற்றை அமெரிக்க விமானங்களில் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என தடை விதித்திறார்கள்

தொடர்ந்து அமெரிக்கா முஸ்லிம் நாடுகளின் பயணிகளிகளின் உரிமையை பறித்து எல்லை மீறி நடந்து கொண்டு வருகிறது. இது அகம்பாவத்தின் உச்சமாகும்.
அசட்டுத் துணிச்சலிலும் எல்லை மீறுதல் நடக்கலாம்.
வாகனங்களில் செல்லும் போது சாலை நடை முறைகளை மீறுகிற பலரும் தவறாக எதுவும் நடந்து விடாது என்ற அசட்டு துணிச்சலில் எல்லை மீறுகிறார்கள்.
இதனால் எல்லாம் என்ன வந்து விடப்போகிறது ?  என்ற மனோ நிலையோடு நீதி தவறுவதில் நேர்மைக்கு மாறாக நடப்பதில் மக்கள் பல இடங்களிலும் எல்லை மீறுகிறார்கள். இதற்கான ஏராளமான உதாரணங்களை நமக்கு நாமே தேடிக் கொள்ளலாம்.
இதில் எதுவும் அல்லாஹ்வுக்கு பிடித்தமானது அல்ல,
எல்லை மீறீச் செல்கிற எவருக்குமான  எச்சரிக்கையாக.
ஒரு கட்டத்தில் மிக கடுமையாக அதே நேரத்தில் எளிதாக  அல்லாஹ் நம்மை சோதித்து விடுவான்.
பிர் அவ்ன் பல கட்டத்திலும் எல்லை மீறி நடந்து கொண்டான். மூஸா அலை அவர்கள் வெளிப்படுத்திய 10 விதமான அத்தாட்சிகளை பார்த்த பிறகும் அவன் திருந்த வில்லை. அவனுடைய உச்ச பட்ச எல்லை மீறல் எது தெரியுமா ? செங்கடல் பிளந்து யூதர்களுக்கு வழி விட்ட போது அவன் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும்.  பேராச்சரியமான ஒரு நிகழ்வில் யூதர்கள் காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள், சரி அவர்கள் தப்பித்து  போகட்டும் என பிர்அவ்ன் பின்வாங்கியிருந்தால்  அவனும் அவனது படை வீரர்களும் அவனது அரசும் தப்பி இருக்கும் . யூதர்களுக்கு அவன் செய்த இத்தனை அக்கிரமங்களுக்கும் மேலாக இனியும் அவர்களை அழித்து விட வேண்டும் என அவன் கடலில் இறங்கியது அவனது பெரும் எல்லை மீறலாகி விட்டது. மிக எளிதாக அந்தப்பேரர்சை அல்லாஹ் அழித்தான். தண்ணீர் வழி விடுவது தான் சிரமமானது. அது திரும்ப மூடிக் கொள்வது எளிதானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விடக்கூடியது,
குர் ஆன் கூறுகிறது.
 وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا 

பிர் அவ்ன் கடலில் இறங்கியதை بَغْيًا وَعَدْوًا  எல்லை மீறுதல் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இது எல்லோருக்காமான எச்சரிக்கை தான். ஒரு தடவை இரண்டு தடவை ஏன் பல தடவைகளில் எல்லை மீறும் போது எதுவும் நடக்க வில்லை என்று நினைத்தால் அது ஏமாளித்தனமாகும்.
கடைசி ஒரு தடவையில் ஏதாவாது நடந்து விடும் எனில் அதை உணரும் சக்தி கூட மனிதனுக்கு இருக்காது.

அதனால் தான் திருக்குர் ஆன் பல இடத்திலும் எல்லை மீறுதலை கண்டிக்கிறது,
யுத்த களத்திலும் கூட எல்லை மீறக் கூடாது என எச்சரிக்கிறது,
யுத்த களத்தில் பொதுவாக நியதிகள் கவனிக்கப்படாது.  எந்த இராணுவமும் கட்டுப்பாடக நடந்து கொள்ளாது. ஆனால் இஸ்லாம் இராணுவத்திற்கும் யுத்த களத்திலும் பெரும் கட்டுப்பாட்டை வலியுறுத்தியது, களத்திலும் கூட எல்லை மீறக்கூடாது என அறிவுறுத்தியது,
وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا ۚ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (190)


எல்லை மீறுதலில் மூன்று வகை
1.   அல்லாஹ் விவகாரத்தில்
2.   தனது சொந்த விவாகாரங்களில்
3.   பிறர் விவகாரங்களில்
மூன்றிலும் எல்லை மீறுதல் கூடாது.

அல்லாஹ் விவகாரங்களில் எல்லை மீறுதல் என்றால் என்ன ?

அல்லாஹ் விசயத்தில் எல்லை மீறி அவனுக்கு எந்தக் கெடுதலும் செய்ய பலவீனமான மனிதர்களுக்கு சக்தி கிடையாது.

எத்தகைய வன்மத்தோடு அல்லாஹ்வின் விவகாரத்தில் நடந்து கொண்டாலும் அதனால் அல்லாஹ்வுக்கு சிறு பாதிப்பும் ஏற்படாது.

عن أبي ذر الغفاري رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم، فيما روى عن الله تبارك وتعالى في الحديث القدسي أنَّ الله جل جلاله قال: ((يا عبادي، إنكم لن تبلغوا ضـري فتضـروني، ولن تبلغوا نفعي فتنفعوني، يا عبادي، لو أن أولكم وآخركم، وإنسكم وجنكم، كانوا على أتقى قلب رجل واحد منكم، ما زاد ذلك في ملكي شيئًا، يا عبادي، لو أن أولكم وآخركم، وإنسكم وجنكم، كانوا على أفجر قلب رجل واحد، ما نقص ذلك من ملكي شيئًا...


எல்லை மீறுதல் மூலம் அல்லாஹ்விற்கு தீங்கு செய்ய முடியாது என்றாலும் அல்லாஹ்வின் உத்தரவுகளுக்கும் அந்தஸ்திற்கும் மாற்றமாக நடந்து கொள்வது எல்லை மீறுதலாகும் . அது மனிதன் தனக்குத்தானே இழைத்துக் கொள்ளும் தீங்காகும்.

அல்லாஹ்வை பற்றிய சரியான நம்பிக்கை இன்மையால் அல்லது அறியாமையால் மக்கள் அல்லாஹ் விசயத்தில் எல்லை மீறுகிறார்கள்.

எதற்கும் தன்னிடம் கேட்குமாறு அதுவும் பணிந்து அச்சடக்கத்தோடு கேட்குமாறு அல்லாஹ் கூறுகிறான்.

 ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ 

இறைவனிடம் ஏன் கேட்க வேண்டும் என்று நினைப்பதும், கேட்டால் என்ன அவன் உடனே கொடுத்து விடுகிறானா என நினைப்பதும் எல்லை மீறும் சிந்தனையாகும்.

وعن أبي هريرة رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((إنه مَنْ لم يَسألِ الله يغضب عليه- الترمذي

وعن عبدالله بن عمرو بن العاص رضي الله عنهما، قال رسول الله صلى الله عليه وسلم: ((القلوب أوعية، وبعضها أوعى من بعض، فإذا سألتم الله عز وجل - أيها الناس - فاسألوه وأنتم موقنون بالإجابة؛ فإن الله لا يستجيب لعبد دعاه عن ظهر قلب غافل)) مسند أحمد

வணக்க வழிபாடுகளில் மார்க்கம் குறிப்பிட்ட அளவை மீறிச் செல்வது எல்லை மீறுதலாகும்.

அப்துல்லாஹ் பின் அம்ருப் பின் ஆஸ் ரலி அவர்களுக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய அறிவுரை நல்ல விசயங்களில் கூட எல்லை மீறுதலை தடுக்கும் ஒரு முக்கிய மான வழிகாட்டுதலாகும்., இஸ்லாத்தின் சத்திய தன்மைகான சான்றுகளில் ஒன்றாகும்.

அல்லாஹ்வின் அந்தஸ்திற்கும் மார்க்கத்தின் வழிகாட்டுதல்களுக்கும் மாற்றமான சிந்தனை கொள்வதும் கருத்துப் பேசுவதும் எழுதுவதும் அல்லாஹ்விற்கு எதிரான எல்லை மீறுதல் ஆகும்.
·         இஸ்லாமிய தண்டனைகள்
·         இஸ்லாமிய பெண்ணிய கோட்பாடுகள்
·         திருமணம் போன்ற சமுக உறவுகள் குறித்த இஸ்லாமிய வரையறைகள்
·         சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஒரு பேதைப் பெண் இஸ்லாமிய தலாக் சட்டத்தை அது அந்தக் காலத்து நலலவர்களுக்கு உரியது இந்தக் காலத்து தீயவர்களுக்கு பொருந்தாது. மாற்றுங்கள் என்று கோரியது  என்பது போன்ற பேச்சுக்கள்.
·         இஸ்லாமின் உறுதியான் சட்டங்களை தமது சுய கருத்தின் அடிப்படையில் இது குர் ஆனுக்கு எதிரானது என்று பேசுவது போன்ற செயல்கள் அனைத்தும் அல்லாஹ் விசயத்தில் எல்லை மீறுதல்கள் ஆகும்,
இந்த எல்லை மீறுதல்கள் அகம்பாவத்தின் அடிப்படையில் நடை பெற்றாலும் சரி அசட்டுத்துணிச்சலில் நடை பெற்றாலும் சரி. அது தவறானதே!

புத்தி ஜீவிகள் என்று தங்களை நினைத்துக் கொள்வோர் அல்லாஹ்விற்கு எதிரான இந்த எல்லை மீறுதல்களை அடிப்படை உரிமை என்று நினைப்பார்கள் எனில் இஸ்லாம் அதை ஏற்றுக் கொள்வதில்லை,

ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه و هو في الآخرة من الخاسرين ) .[2]

தேச விரோதக் கருத்துக்கள் எப்படி சுதந்திரத்தின் பெயரால் அல்லது அடிப்படை உரிமை என்று அனுமதிக்க முடியாதோ அதே போல இஸ்லாம் தான் உருவாக்கிய சமூக அமைப்புக்குள் தனக்கெதிரான கருத்துக்களை அனுமதிப்பதில்லை மறுக்க முடியாத ஒரு நியாயமாகும்.

அல்லாஹ்விற்கு எதிரான எல்லை மீறுதல்களால அல்லாஹ்வுக்கு எந்த தீங்கும் ஏற்பட்டு விடாது என்றாலும் அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிற சமூக கட்டமைப்பில் அது சிக்கலையும் சலனத்தையும் ஏற்படுத்தவே செய்யும். சமூக கட்டமைப்பை அது உடைத்துவிடும். எனவே இத்தகைய செயல்களை குற்றச் செயல்களாகவே இஸ்லாம் பார்க்கிறது.

இஸ்லாமிய அரசு நடை முறையில் இருக்குமானால் இத்க்தகைய குற்றங்களுகான தண்டனைகள் வழங்கப்படும்.

சில இஸ்லாமிய நாடுகளில் இத்தகைய மத நிந்தனை சட்டங்கள் அமுலில் இருக்கிறது என்பது மட்டும் அல்ல, இங்கிலாந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் இத்தகைய மத நிந்தனை சட்டம் அமுலில் இருக்கிறது,

காரணம் சமூக அமைதியை பாதுகாகக் வேண்டும் என்பதற்காகவே!

எல்லை மீறுதலில் இரண்டாவது  வகை தனது சொந்த விவகாரங்களில் எல்லை மீறுவதாகும். அதுவும் கூடாது தான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ [المائدة: 87

அல்லாஹ் அனுமதித்த ஒரு பொருள் பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருக்கலாம். ஆணால் அதை சாப்பிட மாட்டேன் என சத்தியம் செய்வதை இஸ்லாம் ஏற்பதில்லை.  அதை எல்லை மீறிய செயல் செயல் திருக்குர் ஆன் குறீப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

عن أبي هريرة رضي الله عنه أن الرسول صلى الله عليه وسلم قال: «من تردَّى من جبل فقتل نفسه فهو في نار جهنم يتردَّى فيها خالداً مخلَّداً أبداً، ومن تحسَّى سُمّاً فقتل نفسه فسُمُّه في يده يتحسَّاه في نار جهنم خالداً مخلَّداً فيها أبداً، ومن قتل نفسه بحديدة فحديدته في يده يتوجَّأ بها (يضرب بها نفسه) في نار جهنم خالداً مخلَّداً فيها أبداً»
எல்லை மீறுதலில் மூன்றாவது வகை பிறர் விசயத்தில் எல்லை மீறுவதாகும்.

இந்த மூன்று வகை எல்லை மீறுதலில் இந்த மூன்றாவது வகையை மிக கடுமையானதாக இஸ்லாம் கருதுகிறது,

அந்த வகையில் தான் யுத்த களத்தில் கூட எல்லை மீறக் கூடாது என இஸ்ளாம் அறிவுறுத்தியுள்ளது,

وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ [البقرة: 190பெண்கள் போன்ற பலவீனமான பிரிவினருக்கு எதிரான எல்லை மீறல்களை திருக்குர் ஆன் கடுமையாக கண்டித்துள்ளது, சில சந்தர்ப்பங்களில் தண்டனைக்குரிய குற்றமாக கருதுகிறது .

وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِتَعْتَدُوا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ 

நன் கையில் இல்லாத அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதும் பெரும் எல்லை மீறலாகும்.

கோவையில் நாத்திக கருத்துக் கொண்டிருந்தார் என்பதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டிருக்க்றார் என்ற செய்தி கடந்த ஒருவாரமாக பரபரப்பாக இருக்கிறது.

உண்மையில் அப்படி நடந்திருக்குமானால் அது மிகப்பெரிய எல்லை மீறுதலாகும்.

கொலை என்பது அசாதாரணக் குற்றம்

قد خطب رسول الله صلى الله عليه وسلم  في حجَّة الوداع فقالأيُّها الناس! إن دماءكم وأموالكم عليكم حرام كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا، ألا هل بلَّغت؟ اللهمَّ فاشهد» (متفق عليه)

 فقد روى البخاري عن عمرو بن العاص رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «من قتل مُعاهَداً لم يَرِحْ رائحة الجنَّة وإن ريحها توجد من مسيرة أربعين عاماً».

ஒரு கொலை பல்வேறூ பட்ட சமூக குழப்பங்களுக்கு காரணமாகி விடும்.

إن القتل يُشيع الفساد والخراب في البلاد، قال تعالى: {ولا تُفسدوا في الأرض بعد إصلاحها..} (7 الأعراف آية 56). ولو أنه أُبيح؛ لفتكَ القويُّ بالضعيف واختلَّ الأمن،وأصبحت الحياة حِكْراً على الأقوى والأغنى.

தனி மனித பகை காரணமாக கொலை நடந்தாலே அது தொடர்ச்சியான ஒரு சமூக அமைதியின்மைக்கு காரணமாகிவிடும் பல்வேறூ சிக்கல்களை ஏற்படுத்தி விடும்.

எங்காவது ஒரு இடத்தில் ஆக்ஸிடெண்டில் ஒரு மனிதர் இறந்து போவார் எனில் அந்த இடத்தையே காவல் துறை Fatal Aria என்று குறிப்பிட்டு அபாயப் பகுதியாக அறிவிப்பதை பார்த்திருப்பீற்ர்கள்.
மனிதர்களின் கோப தாபங்களால் ஒரு கொலை நடை பெறும் என்றால் அது பூமியில் குழப்பமான பகுதி என்பதற்கான அடையாளம் என திருக்குர் ஆனிய சிந்தனையாளர்கள் குறிப்பிடுவார்கள்  அந்தக் கொலைக்கு பின்னர் என்ன வெல்லாம் நடக்க கூடும் என்பது நம்முடைய கறபனைக்கு அப்பாற்பட்டது,
ஆஸ்திரிய இளவரசர் செர்பியாவில் கொலை செய்யப்பட்ட ஒரு நிகழ்வு தான் முதல் உலக யுத்தத்திற்கு காரணமாக அமைந்தது.
 (அல்லாஹ் நமது நாட்டையும் மஹல்லாக்களையும் பாதுகாப்பானா! 

சண்டை பகை போன்ற காரணங்களால் ஏற்படும் கொலைகளோ சமூகத்தில் பெரும் சிக்கல் களை கொண்டு வந்து சேர்த்து விடும் என்கிற போது

தனிமனிதர்கள் அதிகாத்தை தம் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுத்தும் கொலைகள் மகா அக்கிரமங்களை அரங்கேற்றி விடும்.

தனி மனிதர்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ளும் போது அவர்கள் செய்கைக்கு ஒரு நியாயத்தை அவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.

ஆனால் எச்சரிக்கை இது போன்ற போக்கு தான் யூதர்கள் நபிமார்களையே கொலை செய்யும் அளவுக்கு அழைத்துச் சென்றது.

கோவையில் நடை பெற்ற படு கொலை சமய் நோக்கில் நடந்திருக்குமானாம் உண்மையில் பெரும் குற்றவாளிகள் இக்கொலை செயலில் ஈடுபட்ட வர்களே ஏனெனில் இவர்கள் சமயத்தையும் இழிவு படுத்தியுள்ளார்கள்> சமூகத்தையும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளார்கள்.

பாரூக் எனும் இளைஞன் சொந்த தகறாறில் கொளை செய்யப்பட்டிருந்தால் அது கவலைக் குரியது

சமயக் காரணம் கூறி கொலை செய்யப் பட்டிருந்தால் அது மிக மிக கவலைக்குரியது.

இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை போன்ற மிருகங்கள் மிக ஆபத்தானவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள தமக்கு தாமே ஒரு நியாயத்தை கற்பித்து கொள்பவர்கள் நபிமார்களை கொல்வதற்கும் தயங்காத பாவிகள் ஆவார்கள்.

சமுதாயம் இந்தகைய செயல்பாட்டாளர்களை அடையாளம் கண்டு இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் இக்கொலை சமய நோக்கத்தில் தான் செய்யப்பட்டதா என்பதை தெளிவு படுத்து மாறு காவல் துறையை முஸ்லிம்கள் வலியுறுத்தவும் வேண்டும். அப்படியானால் யார் இவர்கள் என்கிற தகவல்களை காவல்துறையிடமிருந்து கேட்டுப்பெற வேண்டும். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எனவே இக்கொலை சமயக்காரணத்திற்காகத்தான நடந்ததுள்ளதா என்பதை காவல்துறை உடனடியாக கண்டறிந்து  தெரிவிக்க வேண்டும்

நாட்டுமக்களுக்குள் பல் வேறு பட்ட கருத்துக்கள் உருவாகி சமூக சிக்கலை ஏற்படுத்தி வருகிறது என்கிற போது ஒரு கொலை தொடர்பான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டியது காவல் துறையின் சமூக கடமையாகும்.

ஆணால் இந்த சமூக கடமையை சமீப காலமாக காவல்துறை சுத்தமாக மறந்து விட்டது ,

கோவையில் சசிகுமார் எனும் இளைஞன் கொலை செய்யப்பட்ட விவகாரத்திலும் சரி. இப்போது பாரூக் என்ற இளைஞன் கொல்லப்பட்ட விவகாரத்திலும் சரி காவல் துறை கொலைக்கான மோட்டிவ் குறீத்த தகவல்களை வெளியிட வே இல்லை,

இது சமூகத்தில் தேவையற்ற சலனங்களை தொடர்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

இப்போது பாரூக் கொலை வழக்கில் பலர் சரணடைந்திருக்கிற நிலையில் பாரூக்கின் கொலை வழக்கு சம்பந்தமாக காவல்துறை தொடர்ந்து மெனனம் காப்பது முஸ்லிம் சமூகத்தை சிக்கலுக்குள்ளாக்குவதை ஒரு அஜண்டாவாக தமிழக காவல் துறை கொண்டிருக்கிறது என்றே கருத வைக்கும்.

முஸ்லிம் இளைஞர்கள் மார்க்கத்திற்கு முரணான போக்கிற்கு செல்வதிலிருந்து பாதுகாக்க ஜமாத்துக்கள் அக்கறை செலுத்த வேண்டும்,

குறைந்த பட்சம் அத்தகையோர் தமது கருத்துக்களை வெளிப்படையாக சர்ச்சை செய்வதிலிருந்து விலகி நிற்குமாறு உத்தரவிட வேண்டும்

மார்க்கத்திற்கு எதிரான சர்ச்சையை வெளிப்படையாக செய்வோர் நமது சமூக அமைப்பிலிருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அத்தகையோருக்கு நமது பள்ளிவாசல்களில் ஜனாஸா தொழுகைக்கு உரிமை கோர முடியாது நமது கபரஸ்தானுக்கும் உரிமை கோர முடியாது என்ற எச்சரிகைகள் செய்வது சிலர் தமது கருத்தால் சமூகத்திற்குள் குழப்பம்
ஏற்படுத்துவதை தடுக்க முடியும். தேச விரோககருத்துக்கள் பேசப்படுவதை நாம் அனுமதிக்காதது போல சமய விரோதக் கருத்துக்கள் பேசப்படுவதை ஜமாத் அனுமதிக்காது என்பதை முன்னரே தெளிவபடுத்தி விடுவது அனைவருக்கும் ஒரு தேவையான எச்சரிக்கையாக அமையும்.

எந்த விசயத்திலும் எல்லை மீறுதல் ஆகாது. அது அல்லாஹ்விற்கு பிடிக்காது,

அந்த எல்லை மீறுதல்களை ஏதாவத் ஒரு சந்தர்ப்பத்தில் அல்லாஹ் பிடித்து விடுவான், பிர் அவ்னை அழித்தது போல. அப்போது அகம்பாவத்தால் எல்லை மீறீயவர்களும் அசட்டு தைரியத்தால் எல்லை மீறியவர்கள் விக்கித்து நிற்க நேரிடும்.Thursday, March 16, 2017

என் பணி கடன் செய்து கிடப்பதே!

நெறியே தருதல் நின்கடன்காண்
          நின்னைப் பணிதல் என்கடனே.

எனக்கு வழி காட்டுதல் உன் கடமை , உன்னைப் பணிந்து கிடப்பதே என் கடமை எனக் கடவுளை வாழ்த்திப்பாடினார் திருநாவுக்கரசர்

அதையே காலப் போக்கில் என் கடன் பணி செய்வதே என்று மக்கள் மாற்றி கூறிவந்தார்கள்.

இப்போது நம்மை ஆட்சி செய்கிற அரசுகளோ என் பணி கடன் செய்து கிடப்பதே என்று புது விதிகளை எழுதிவருகிறார்கள் .

நேற்று தமிழக பட்ஜெட்டை வாசித்த தமிழக நிதியமைச்சர் நடப்பு நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட் மதிப்பு 1.59 லட்சம் கோடி என்று தெரிவித்தார். அதே நிதியமைச்சர் தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை ரூ.3 லட்சம் கோடி (ரூ.3,14,366 கோடி) ஆக இருப்பதாக குறிப்பிட்டார்

அதாவது நமது மொத்த பட்ஜெட் தொகையை விட இரண்டு மடங்கு நமது கடன் தொகை இருக்கிறது.

அதாவது இரண்டாயிரம் ரூபா கடன வச்சுக்கிட்டு ஆயிரம் ரூபாயுக்கு நாம் திட்டம் போடுகிறோம்.

அதுவும் எப்படி திட்டம் போடுகிறோம்.

•  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு
•  முதலீடு ஊக்குவிப்பு திட்டத்திற்கு ரூ.1,295 கோடி ஒதுக்கீடு
•  6 லட்சம் விலையில்லா ஆடுகள் வழங்க ரூ.182 கோடி ஒதுக்கீடு.
•  ஏழை பெண்களுக்கு 25 ஆயிரம் கறவை பசுக்கள் வழங்கப்படும்.
•  1 லட்சம் பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க ரூ.200 கோடி.
•  விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ. 490 கோடி
•  நகர்ப்புற புத்துணர்வு திட்டத்துக்கு ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக

கடனை குறைக்கும் திட்டங்களுக்கு பதிலாக மேலும் கடனை வளர்க்கும் திட்டங்கள் கூச்சமில்லாமல் போடப்படுகின்றன.
அரசு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்வதாக சொல்லும் பட்டியலை படிக்கிற போது கேலிச் சிரிப்புத்தான வருகிறது.

வேளாண் துறைக்கு ரூ.1680.73 கோடி நிதி ஒதுக்கீடு
* மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி நிதி ஒதுக்கீடு
* தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,010 கோடி நிதி ஒதுக்கீடு
* ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.3,009 கோடி நிதி ஒதுக்கீடு
* நீர் வளத்துறைக்கு ரூ.4,791 கோடி நிதி ஒதுக்கீடு
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.988 கோடி நிதி ஒதுக்கீடு
  ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாடு திட்டத்திற்கு ரூ.3,100 கோடி,
  சாலை பாதுகாப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
  நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.13,996 கோடி ஒதுக்கீடு
* காவல்துறையினர் வீட்டு வசதிக்கு ரூ. 450 கோடி ஒதுக்கீடு:
* விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு
* மின்சாரம்- எரிசக்தித் துறைக்கு ரூ.16,998 கோடி ஒதுக்கீடு >
  கால்நடை பராமரிப்பிற்கு ரூ.1,161 கோடி நிதி ஒதுக்கீடு
* திருமண உதவித் திட்டங்களுக்கு ரூ.723 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு
* விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு
* வருவாய் பற்றாக்குறை ரூ.15,931 கோடி என மதிப்பீடு

இந்த ஒதுக்கீடுகளில் எழும் பெரும் கேள்வி என்ன வெனில் இந்த ஒதுக்கீடுகளில் அரசியல் வாதிகளுக்கான ஒதுக்கீட்டின் அளவு என்ன ? என்பதே! இந்த ஒதுக்கீடுகளில் பெரும் மகிழ்ச்சி அடைவது துறை சார்ந்த அமைச்ச்சரும் காண்டிராக்டர்களும் டெண்டர் ஒதுக்கீடு செய்யும் அதிகாரிகளுமே ஆவர் என்பது மிக எதார்த்தமான நிஜமாகும்

கோவை, திருச்சி, மதுரையில் ரூ.150 கோடி செலவில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். இது போன்ற அறிவிப்புக்கள் ஆண்டு தோறும் பட்ஜட்டில் இடம் பெருகின்றன, நிதி ஒதுக்கீடும் நடை பெறுகிறது, ஆனால் இத்தைகைய திட்டங்கள் எங்காவது செயல்படுத்தப் படுகிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.

திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான கணக்கு என்றைக்காவது மக்கள் அறிந்தது ஊண்டா ? அது குறித்த கேள்விகள் உண்டா ?

பட்ஜட் என்பது மக்களை பொருத்தவரை சலுகைகளை எதிர்பார்க்கும் ஒரு அறிக்கையாகவும் வியாபாரிகளை பொருத்தவரை அரசு அதிகமாக ஏதும் பிடுங்கப் போகிறதோ என்ற அச்சமாகவும் மட்டுமே இருக்கிறது,
இந்த பட்ஜெட்டில் பற்றாக்குறை மற்றும் அரசின் கடன் பற்றிய செய்தி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது, நேற்றைய தொலைக்காட்சி விவாதங்களிலும் இது விசயம் அதிக முக்கியத்துவம் பெற்றன.
மக்களாகிய நமக்கு சில முக்கியமான வழிகாட்டுதல்கள் இதிலிருந்து கிடைக்கின்றன,
இது கிரடிட் கார்டுகள் , லோன்களின் உலகமாகிவிட்டது
பைனான்ஸ் கார்டு இல்லாத குடும்பம் இல்லை என்றாகிவிட்டது,
நம்மை கடனுக்குள் தள்ளிவிடும் அத்தனை முயற்சியும் நாசூக்காக செய்யப்படுகிறது.
நாமும் விரும்பியே சாதாரணமாக கடனுக்குள் விழுந்து விடுகிறோம். கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற அருணாசலக் கவிராயரின் பாடல்  வரிகள் அர்த்தம் அற்றதாகிவருகின்றன.

வயிறாற சாப்பிட்டு விட்டு கிரடிட் கார்டை நீட்டுவது பலருக்கும் மதிப்பாக தெரிகிறது. கடன் சொல்வது அவமானம் என்ற ஒரு சூழல் இருந்தது, இப்போது அவமானமே  மரியாதையாக மாறிவிட்டது எனில் இன்றை காலத்தின் கோலத்தை என்ன வென்று சொல்வது ?
உண்மையில் இது நல் வாழ்க்கைகான அடையாளம் அல்ல.
கடனில்லாத வாழ்க்கைக்கு ஆசைப்பட வேண்டும்
கடன் மிக எச்சரிக்கைக்குரிய ஒரு விசயம். இந்த ஒரு ஹதீஸ் போதும்.
فقال رسول الله - صلى الله عليه وسلم -: ((يُغفَر للشهيد كلُّ ذنب؛ إلا الدَّين))؛ رواه مسلم
கடன் பல அவலட்சனமான குணங்களுக்கு மனிதர்களை அழைத்துச் சென்று விடும்
فعن عائشة: أن رسول الله - صلى الله عليه وسلم - كان يدعو في الصلاة: ((اللهم إني أعوذ بك من عذاب القبر، وأعوذ بك من فتنة المسيح الدجال، وأعوذ بك من فتنة المحيا وفتنة الممات، اللهم إني أعوذ بك من المأثم والمغرم))، فقال له قائل: ما أكثر ما تستعيذ من المغرم! فقال: ((إن الرجل إذا غرِم، حدَّث فكذَب، ووعد فأخلف))؛ رواه البخاري
இன்றைய கால கட்டத்தில் கடன் அட்டைகள் போலியான ஒரு வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
கையிலிருக்கிற காசை மீறிய ஆசை தேவைக்கும் அதிகமான பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் கொண்டு போய் நிறுத்துகிறது. 
அல்லது சீக்கிரமாக வாங்கவேண்டும்  என்ற அவசர புத்தி கடனில் கொண்டு போய் நிறுத்துகிறது
இது பேராசையும் அவசர புத்தியும் மிக ஆபத்தானவை – கடனாளி ஆவதற்கு இந்த இரண்டு குணங்களும் அடிப்படை காரணங்கள்.
சமூதாயத்தைச் சார்த ஆண்கள் இளைஞர்கள் குடும்பத்தலைவிகள் என அனைத்து தரப்பினரும் இது விசயத்தில் எச்சரிக்கையோடிருப்பது அவசியம்.
வியாபாரிகள் கொஞ்சம் பணம் போட்டால் இன்னும் சற்று அதிகம் இலாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு கடன் வாங்கி விடுகிறார்கள். குடும்பத் தலைவிகள் அடுத்தவர்களைப் பார்த்து அவசரப்பட்டு கடனுக்கு வீட்டுப் பொருட்கள் வாகனங்கள் உள்ளிட்ட வற்றை வாங்கி கடனாளி ஆகிவிடுகிறார்கள்.
கடன் வாங்குகிற சமயத்தில் திருப்பி கட்டு வதை ப் பற்றி பெரிதாக கவலை இருப்பதில்லை. அல்லது திருப்பி கட்டி விட முடியும் என்ற தைரியத்தில் கடன வாங்கி விடுகிறோம்.
ஆனால் எல்லா சந்தர்ப்பமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
ஒரு கணவன் மனைவி சந்தித்தேன். இருவரும் இரண்டு ஷிப்ட் வேலை பார்க்கிறார்கள். கணவரும் மனைவியும் ஒன்றாக இருப்பதே விடுமுறை நாளில் மட்டும் தான் என்றாகிவிட்டது. அதிலும் கொஞ்ச நேரம் தான். காரணம் என்ன தெரியுமா ?
அவர்கள் இருவரும் வேலை பார்த்த காரணத்தால் கையில் ஓரளவுக்கு பணம் இருந்தது. அப்போது சிறந்த ஒரு அபார்ட்மெண்டில் வீடு வாங்க ஆசைப்பட்டு கடனுக்கு வீடும் வாங்கினார்கள். வீடு வாங்கிய பிறகு அதற்கான பணத்தை அடைக்க வேண்டிய சூழலில் இருவரும் இரண்டு ஷிப்ட உழைக்க வேண்டியதாகிவிட்டது,
கடனுக்கு பிறகு ஏற்படக் கூடிய நெருக்கடிகள் குறித்த ஒரு அச்சம் அவசியம்.
கடனை செலுத்த முடியாத பலர் மோசமான முடிவுகளுக்கு சென்றிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பண்டைய சோழ நாட்டில் கடனை திருப்பி செலுத்தா விட்டால் கடன் கொடுத்தவர்கள் ஒன்றாக சேர்ந்து கடனாளி வசமாக சிக்குகிற ஒரு சந்தர்ப்பத்தில் அவனை சுற்றி வட்டமாக ஒரு கோடு கிழித்து விடுவார்களாம். அவன் அந்தக் கோட்டை விட்டு வெளியே வர முடியாது என்ற சமூக ஏற்பாடு அன்று இருந்திருக்கிறது. இவ்வாறு கடன் வட்டத்திற்குள் அடை படுவதை இறப்பிற்கு சமமாக அன்று கருதிருக்கிறார்கள். அவ்வாறு வட்டமிடப்பட்டு விட்டால் அதிலிருந்து கடனாளியோ அவனைச் சார்ந்தவர்களோ கடனை முழுவது மாக திருப்பி செலுத்தாத வரை வெளியே வர மாட்டார்களாம்.
அரசர்களுகளுக்கு கூட இந்த சூழல் ஏற்பட்டது என மார்க்கோ போலோ என்ற உலக சுற்றுப்பயணி கூறுகிறார்.
செந்தர் பந்தியே எனும் மன்னன்  ஒரு சந்தர்ப்பத்தில் அந்நிய நாட்டு வணிகன் ஒருவனிடம் இப்படிக் கைமாற்று வாங்கி விட்டு நழுவிக்கொண்டிருந்தான். அவன் ஒரு நாள் குதிரையில் போகும்போது கடன் கொடுத்தவ்ன் அவசர அவசரமாகத் தரையில் அவனைச் சுற்றிக் கோடு வரைய, அரசன் கட்டுப்பட்டு அப்படியே நின்றான். அரண்மனையிலிருந்து பணம் எடுத்து வந்து அடைத்து அவனை விடுவித்துப் போனார்கள். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடனை கட்டாமல் மரித்தவருக்கு தொழ வைக்க மறுத்தார்கள். (ஆரம்ப கால கட்டத்தில், பிற்காலத்தில் தானே அந்தக் கடனை அடைக்கப் பொருப்பேற்றுக் கொண்டார்கள்,)
جاء في البخاري 
عن سلمة بن الأكوع (( أن النبي صلى الله عليه وسلم أُتي بجنازة ليصلي عليها , فقال : هل عليه من دين ؟ قالوا : لا , فصلى عليها . ثم أُتي بجنازة أخرى , فقال : هل عليه من دين ؟ قالوا : نعم . قال : صلوا على صاحبكم . قال أبو قتادة : عليَّ دينه يا رسول الله , فصلى عليه )) 
குடும்பத்திற்கு தெரியாமல் கடனாளியான பல குடும்பத்தலைவர்கள் – அதே போல இளைஞர்கள் – தமது குடும்பத்தை பல கட்டத்திலும் பெரும் நெருக்கடிகளுக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கியிருக்கிறார்கள்.
கடன் குறித்து இந்த எச்சரிக்கைகளை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
ஆனால் வாழ்க்கையின் மிக அத்தியாவசியமான நெருக்கடிகளில் கடனை தேடிக்கொள்வது தவறில்லை.
  فالنبي مات مدينًا، وبعض صالحي الأمة من الصحابة ومَن بعدهم مات مدينًا
கடன் பெறுபவருக்கு திருப்பி கொடுக்கும் எண்ணம் இருக்க வேண்டும் . அது இருக்குமெனில் திருப்பிச் செலுத்தும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்
فعن أبي هريرة - رضي الله عنه – قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: ((مَن أخذ أموال الناس يريد أداءها، أدَّى الله عنه، ومن أخذ يريد إتلافها، أتلفه الله))؛ رواه البخاري
வசதி இருந்தும் திருப்பி செலுத்தாமல் இருப்பது அநீதியாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُؤْتَى بِالرَّجُلِ الْمُتَوَفَّى عَلَيْهِ الدَّيْنُ فَيَسْأَلُ  هَلْ تَرَكَ لِدَيْنِهِ فَضْلًا فَإِنْ حُدِّثَ أَنَّهُ تَرَكَ لِدَيْنِهِ وَفَاءً صَلَّى وَإِلَّا قَالَ لِلْمُسْلِمِينَ صَلُّوا عَلَى صَاحِبِكُمْ فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ الْفُتُوحَ قَالَ أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ فَمَنْ تُوُفِّيَ مِنْ الْمُؤْمِنِينَ فَتَرَكَ دَيْنًا فَعَلَيَّ قَضَاؤُهُ وَمَنْ تَرَكَ مَالًا فَلِوَرَثَتِهِ" متفق عليه.

இன்றைய நம்முடை நாட்டு நடப்பில் வசதியான மல்லையாக்கள் பல நூறு கோடியை வங்கிகளிடம் கடனாகப் பெற்று. பல நூறு சிறு முதலீட்டாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு வெளிநாட்டில் உல்லாசமாக வாழ்கிறார்கள். வங்கிகள் அவருடை கடனை தள்ளுபடி செய்கின்றன.
இது போன்ற நிகழ்வுகளை பார்த்து விட்டு கடன் பெறுவதிலும் திருப்பி அடைப்பதிலும் நல்ல முஸ்லிம்கள் அலட்சியம் காட்டக் கூடாது.
கடனில் விழுந்து பலரும் எழுந்திருக்க முடியாத சூழல் ஏற்படும் சில கட்டங்களை நினைவு படுத்துகிறேன்.
வீடு கட்டும் போது அதிகபட்ச எச்சரிக்கை அவசியம்.
பலரும் சிரமப்பட்டு வீட்டை கட்டி விட்டு . கட்டி முடித்தவுடன் கடனை திருப்பச் செலுத்த வீட்டை விற்றிருக்கிறார்கள்.
அதிக இலாபத்த்தை நம்பி கடன் பெற்ற வியாபாரிகள் – திடீரென ஏற்டுகிற நெருக்கடிகளில் பணத்தை திருப்பி செலுத்த முடியாத சூழலில் வியாபார நிறுவனத்தையே இழந்திருக்கிறார்கள்.
ஆடம்பரமான நிகழ்ச்சிகளுக்காக கடன்பெறுகிறவர்கள் அந்த நிகழ்ச்சியிலே கூட மகிழ்ச்சியடைய முடியாதவர்களாக கடனின் சுமையால் அழுத்தம் அடைந்திருக்கிறார்கள்.
எனவே கடன் குறித்த அதிகபட்ச எச்சரிக்கை அவசியம்.
கடனை எழுதி வைத்துக் கொள்வது மிக முக்கியம் . நமக்கும் நமது சந்ததிகளுக்கும் அது நினைவூட்டுதலை தரும்.
திருமறையின் முக்கியமான உத்தரவு அது/ திருமறையின் மிக நீண்ட வசனம் இது
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلاَ يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللّهَ رَبَّهُ وَلاَ يَبْخَسْ مِنْهُ شَيْئاً فَإن كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهاً أَوْ ضَعِيفاً أَوْ لاَ يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ وَاسْتَشْهِدُواْ شَهِيدَيْنِ من رِّجَالِكُمْ فَإِن لَّمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّن تَرْضَوْنَ مِنَ الشُّهَدَاء أَن تَضِلَّ إْحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا الأُخْرَى وَلاَ يَأْبَ الشُّهَدَاء إِذَا مَا دُعُواْ وَلاَ تَسْأَمُوْاْ أَن تَكْتُبُوْهُ صَغِيراً أَو كَبِيراً إِلَى أَجَلِهِ ذَلِكُمْ أَقْسَطُ عِندَ اللّهِ وَأَقْومُ لِلشَّهَادَةِ وَأَدْنَى أَلاَّ تَرْتَابُواْ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلاَّ تَكْتُبُوهَا وَأَشْهِدُوْاْ إِذَا تَبَايَعْتُمْ وَلاَ يُضَآرَّ كَاتِبٌ وَلاَ شَهِيدٌ وَإِن تَفْعَلُواْ فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ وَاتَّقُواْ اللّهَ وَيُعَلِّمُكُمُ اللّهُ وَاللّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ(282)

இன்றைய அரசுகளைப் போல பொறுப்பற்ற கடனாளியாக ஆவதிலிருந்து அல்லாஹ் நம்மையும் நமது சந்ததிகளையும் பாதுகாப்பானாக!